இறைவனுக்கு பிடித்த அபிஷேகம்..

மணக்கால் அய்யம்பேட்டை | 10:17 AM | Best Blogger Tips


Image result for இறைவனுக்கு பிடித்த அபிஷேகம்Image result for இறைவனுக்கு பிடித்த அபிஷேகம்
எல்லோரிடமும் தூய்மையான
எண்ணத்துடன் பழகுவேன் என்ற
பால் அபிஷேகமும்..
யாருடைய மனதையும் புண்படுத்தமாட்டேன் குளிரவைப்பேன் என்று
இளநீர் அபிஷேகமும்..
எல்லோரிடமும் இனிமையாக இருப்பேன் என்று தேன் அபிஷேகமும்..
எப்பொழுதும் நற்குணங்களையே அனைவருக்கும் பரப்புவேன் என்று
பன்னீர் அபிஷேகமும்..
இந்த உடல் நிலையற்றது என்று எண்ணி பெருந்தன்மையுடன் இருப்பேன் என்று
திருநீறு அபிஷேகமும்..
எப்பொழுதும் மங்களகரமான வார்த்தைகளையே பேசுவேன் என்று
மஞ்சள் அபிஷேகமும்..
வாழ்க்கை முழுவதும் இறைவா உன் புகழ் பாடுவேன் என்று சந்தன அபிஷேகமும்..
சென்ற இடமெல்லாம் உன் சேவை செய்வேன் என்ற ஜவ்வாது அபிஷேகமும்..
அனைவரிடமும் புனிதமாக இணைந்து சென்று இந்த பிறவி பயணத்தை முடிப்பேன் என்று
நீர் அபிஷேகமும் செய்யுங்கள்..
இதுவே இறைவனுக்கு பிடித்த உண்மையான அபிஷேகம்..மற்றவை எல்லாமே நம்முடைய
மனதிருப்திக்காகசெய்யப்படும்அபிஷேகங்கள்


நன்றி இணையம்