இன்றைய காலக்கட்டத்தில் பேஷனாக எண்ணிக் கொண்டு பலரும் தங்கச்சங்கிலியில் மாங்கல்யத்தை சேர்த்து விடுகின்றனர். "மாங்கல்யச் சரடைத்தான்" சுமங்கலித்துவம் நிறைந்த மங்களப் பொருளாகக் குறிக்கின்றனர்.
பஞ்ச பூத சக்திகள் நிறைந்து கிட்டுவதுதான் சுமங்கலித்துவம் ஆகும். பருத்தி இழைகளால் ஆன மாங்கல்யச் சரடிற்குத்தான் பஞ்ச பூத தெய்வீக சக்திகளை ஈர்த்து சுமங்கலித்துவ சக்தியாக மாற்றக்கூடிய அருட்சக்தி உண்டு. ஆதலின் மாங்கல்யத்தை மாங்கல்யச் சரடில்தான் கோர்க்க வேண்டுமே தவிர தங்கச்சங்கிலியில் ஒரு போதும் கோர்த்தல் கூடாது.
சரடினால் மாங்கல்யம் போடுபவர்களுக்கு மட்டும் நீண்ட ஆயுளுடன் இருப்பாரா? என்ற சந்தேகம் எழலாம். ஆனால் நீங்கள் நினைக்கும் எண்ணம் வேறு சாதாரணமான நிலையில் கூட பெண்களின் மஞ்சள் கயிற்றுக்கு என்று ஒரு மகிமை உண்டு. தோஷங்கள் உடனே அவரை பாதிக்காது. கர்ம வினைகள் குறையத் தொடங்கும்.
குங்கும அர்ச்சனையின் பலன்கள் சரடுக்கு உண்டு. உடனே போகும் உயிரை கூட அந்த தாலி சரடின் மகத்துவம் காக்கும். தீவினை தோஷங்களில் ஒரு பகுதியை மாங்கல்யச் சரடானது தம்முன் ஈர்த்து ஆத்மாக்னியில் பஸ்மம் செய்து விடுகின்றது.
ஏனெனில் மாங்கல்யமானது ஒரு இல்லறப் பெண்மணியின் கழுத்தில் எப்போதும் திகழ்வதால் அதுவே தெய்வீகத் துணையாக இருந்து எப்போதும் சுமங்கலித்துவதைக் கட்டி காப்பதாகும். பெண்களுக்கு மாங்கல்யமே பிரம்ம முடிச்சு ஆகும்.
பின்னலின் மகத்துவம் :
பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ 5வத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழல் அப்படியா?
தலைமுடியின் நுனி வழியாக ஆத்மசக்தி வெளியேறுகிறது. நல்ல, தீய உணர்வுகள் அல்லது அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் போன்றது முடியின் நுனி. அப்படியானால் மொட்டை அடித்துக் கொள்கிறார்களே அவர்களை என்ன சொல்வது என்ற கேள்வி எழும் உங்களுக்குள். வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை. நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை என்பதை உணர்த்துவற்காக.
தலைவிரி கோலத்தை தவிர்ப்போம். இது உறவின் மீதான பிடிப்பை அறுக்கக்கூடியது. பின்னல் இதன் அமைப்பு திரிவேணி சங்கமத்தை ஒத்தது. 3 நதிகள் சேரும் போது இரண்டு நதிகள் கண்களுக்கு புலப்படும். (கங்கை, யமுனை) ஒரு நதி கண்களுக்கு புலப்படுவதில்லை (சரஸ்வதி). இதுபோலவே பின்னலின் 3 பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.
பின்னலின்
வலது - பிறந்த வீடு, இடது - புகுந்த வீடு, நடுப்பகுதி - பெண்.
தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும் தன் குலத்தை முன்னிறுத்துபவவே உயர்ந்தவள் ஆவாள். ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல. வாழ்வின் தத்துவம்.