விஜயகுமார் ஐபிஎஸ்ஸின் ஆப்பரேசன் ககூன்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:28 AM | Best Blogger Tips
Image may contain: 1 person, beard
கவர்னர் ஆட்சி பிறப்பிக்கப்பட்ட ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் கவர்னர் வோராவின் ஆலோசகராக நம்ம
விஜயகுமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

அதா வது இனி காஸ்மீரின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
அனைத்தும் விஜயகுமார் தலைமையிலேயே நடைபெறும்.

அதாவது ஆப்பரேஷன் காஷ்மீர் ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்லலாம்.

விஜயகுமாருக்கு காஸ்மீர் ஒன்றும் புதிதல்ல.. தமிழ கத்தில் கருணாநிதி ஆட்சியில் 1997 ல் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பரவிய சாதிக்கலவரங்களை அடக்கி விட்டு மத்திய அரசு பணிக்கு மாற்றலாகி 1998-2001 வரை காஸ்மீரில் பார்டர் செக்யூரட்டி போர்ஸ் பிரிவில் ஐஜி யாக இருந்து பட்டையை கிளப்பிய வர் தான்.

பார்டர் செக்யூரட்டி போர்ஸ் பிரிவில் இருந்த விஜயகுமாரை மீண்டும் தமிழ்நாட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதே 2001 ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரா வந்தவுடன் டெல்லிக்கு வைத்த முதல் கோரிக்கை

ஜெயலலிதா 2001 ல் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் பொழுது தமிழ்நாடு போலீசின் பெயர் சந்தி சிரித்து இருந்தது,காரணம் கருணாநிதி வீரப்பன்
நக்கீரன் கோபால்.இந்த மூன்று பேரும் சேர்ந்து ஆடி காமெடிக்கூத்தை இப்பொழுது நினைத்தாலும்
சிரிப்பாய் வருகிறது.

நக்கீரன் கோபால் தோளில் ஒரு பையை சுமந்து கொண்டு வீரப்பனை பார்க்க போவதும் வீரப்பன் ஒரு கேசட் டை கோபாலிடம் கொடுத்து கருணாநிதியிடம் கொடுக்க சொல்வதும் பதிலுக்கு கருணாநிதி வீரப்பர்
கொடுத்த கேசட் என்று சன் டிவியில் போட்டு காட்டுவதும் செம காமெடியாக இருந்தது.

அந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் தூக்கி
வந்து ஆடிய ஆட்டம் இருக்கிறதே ஸ்ப்பா செம காமெடி..2000 ம் ஆண்டில் ஜூலை மாதம் 30 ம் தேதி என்று நினைக்கிறேன்.தாளவாடி தெரியுமா? ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்களத்துக்கு அருகில் உள்ள
ஒரு ஊராட்சி.இங்கு தான் தொட்டகாஜனூர் என்கிற
ஒரு சின்னஞ்சிறு கிராமம் இருக்கிறது.

இந்த தொட்டகாஜனூர் கிராமத்தில் தான் கன்னட
சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்பட்ட ராஜ்குமார் பிறந்து வளர்ந்து சோத்துக்கு வழியில்லாது அப்ப டியே பொடி நடையாக 80 கிலோமீட்டர் தொலை வில் கர்நாடகாவில் இருக்கும் மைசூருக்கு சென்று
எப்படியோ கன்னட மக்களை ஏமாற்றி அங்கு சூப்பர்
ஸ்டாராக மாறி செட்டிலாகி விட்டார்.

கிட்டதட்ட நம்ம ரஜினி மாதிரி தான் ராஜ்குமார் கதையும்..இருந்தாலும் ராஜ்குமாரை சூப்பர் ஸ்டார்
என்று சொல்லும் கன்னடர்களின் சினிமா ரசனை யை நினைத்தால் கேவலமாக இருக்கிறது.இறந்து
போனவரை விமர்சிப்பது அநாகரிகம் அதனால் விட்டு விடுவோம்..அதனால் இப்பொழுது தொட்ட காஜனூர் கிராமத்துக்கே போவோம்..

2000 ம் ஆண்டு ஜூலை 30 ம் தேதி இரவு 10 மணிக்கு
சொந்த கிராமத்தில் பண்ணை வீடு கட்டி குடும்பத் தோடு ஜாலியாக இருந்த ராஜ்குமாரையும் கூடவே
இன்னும் 3 அடிபொடிகளையும் வீரப்பன் தூக்கிக்
கொண்டு வந்து சத்தியமங்கலம் காட்டுக்குள்ளே கொண்டு சென்று கிட்டதட்ட 108 நாட்கள் தன்னு டை கஸ்டடியில் வைத்து நக்கீரன் கோபாலைஅனுப்பு
என்று கருணாநிதிக்கு கோரிக்கை வைப்பதும் கரு ணாநிதி நக்கீரன் கோபாலை அனுப்புவதும் தமிழ்
நாட்டு அரசியலில் இது வரை இல்லாத காமெடி
சீன்கள்.

ஒரு 5 தடவை கோபால் ராஜ்குமாரை மீட்க போகி றேன் என்று வீரப்பனை பார்க்க காட்டுக்கு போவதும் பிறகு நாட்டுக்கு வந்து வீரப்பன் பேசிய கேசட்டோ வந்து கதை விடுவதும் நக்கீரன் சர்க்கு லேஷன் கடுமையாக எகிறியதும் தான் நடைபெற்ற தே தவிர கோபாலால் ஒன்றும் கிழிக்க முடியவில் லை. வீரப் பன் ஜெயலலிதாவை கெட்ட வார்த்தை யால் திட்டு ம் வீடியோவை போட்டு கருணாநிதியும் கோபாலும்
சந்தோசப்பட்டுக்கொண்டார்கள்.

அப்புறம் வீரப்பன் கோபாலை கழற்றிவிட்டு நெடுமா றனை அனுப்பு கூடவே புதுவை சுகுமாறன் பேராசிரி யர் கல்யாணியை அனுப்பு என்று கருணாநிதி க்கு உத்தரவு போட்டு அவர்களை காட்டுக்கு வரவைத்து
ஒரு 30 கோடி ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு தான் ராஜ்குமாரை கர்நாடகாவுக்கு வீரப்ப ன் திருப்பி அனுப்பினான்.

இந்த காமெடியால் தமிழ்நாட்டு போலீஸ் மானமே கப்பலேறி விட்டது.அதனால் ஜெயலலலிதா 2001 ல்
ஆட்சிக்கு வந்தவுடனே வாருங்கள் விஜயகுமார்
வந்து வீரப்பனை வேட்டையாடுங்கள் என்று காஸ்மீ ரில் இருந்து விஜயகுமாரை தமிழ்நாட்டுக்கு கொண் டு வந்து வீரப்பன் ஆப்பரேசனுக்கு தலைவராக்கி விட்டார்.

வீரப்பனை பிடிப்பது என்பது சாமானியமான விஷ யம் கிடையாது என்று கர்நாடகா மற்றும் தமிழ்நாட் டில் உயர் பதவியில் இருந்த போலிஸ் அதிகாரிகளு க்கு நன்றாகவே தெரியும்.சும்மா இல்லங்க..சுமார்
800
கோடி ரூபாய் பணத்தை தமிழ் நாடு அரசும்
கர்நாடகா அரசும் வீரப்பன் என்கிற தனி மனிதனை பிடிக்க செலவழித்துள்ளார்கள் என்றால் வீரப்பனின்
சக்தியை அறிந்து கொள்ளலாம்.

வீரப்பன் அதிகாரபூர்வமாக 185 பேரை கொன்றுள்ளா ன் என்கிறது போலிஸ் ரெக்கார்டு.இதில் 120 பேர் போலிஸ் மற்றும் பாரஸ்ட் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர்கள்..தமிழ்நாட்டில் நக்சலைட்டுகளை
வேட்டையாடிய வால்டர் தேவாரமே தோல்வியில்
திரும்பி வந்த ஒரே அசைன்மென்ட் வீரப்பனை
பிடிப்பது தான்.

குருநாதர் வால்டர் தேவாரத்தினால் முடியாததை சிஷ்யர் விஜயகுமார் முடித்தார்.என்றால் விஜய
குமாரை குருவை மீறிய சிஷ்யன் என்று தானே
சொல்ல வேண்டும்.காலமும் காவல்துறையும்
அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறது.

வீரப்பனை வேட்டையாட விஜயகுமார் நடத்திய ஆப்பரேசனை நினைக்கும் பொழுது இப்பொழுதும்
உடம்பு சிலிர்க்கிறது..சும்மா இல்லங்க சுமார் 10
மாதமா விஜயகுமார் காட்டிலிருந்து வீரப்பனை
வெளியே கொண்டு வர நடத்திய ஆப்பரேஷன் தான்
பட்டுக்கூடு
2004,ம் ஆண்டில் அக்டோபர் 18 ம் தேதி அன்று இரவு
11
மணிக்கு வீரப்பனை எமலோகம் அனுப்பி வைத்து
தமிழ்நாட்டு போலீசை காலரை தூக்கி விட வைக்க
விஜயகுமார் போட்ட திட்டங்களை படிக்கும் பொழு தே நிச்சயம் புல்லரிக்கும்.

கண் புரைக்காக ஆப்பரேஷன் செய்ய வேண்டிய கட் டாயத்தில் இருந்த வீரப்பனை காட்டை விட்டு
பட்டுக்கூடு என்கிற ஆம்புலன்ஸில் உளவாளிகள் மூலம் வெளியே கொண்டு வர வைத்து தர்மபுரிக்கு
அருகில் பாடி என்கிற கிராமத்துக்கு அருகில்வைத்து
ஒரு ஸ்கூலில் மறைந்து நின்று இரவு பத்தே முக்கா ல் மணிக்கு தனியாக வரும் ஆம்புலன்சை போட்டு தாக்க விஜயகுமார் போட்ட திட்டங்களை பார்த்தால் வியப்பாக இருக்கிறது
.
காட்டை விட்டு ரோட்டுக்கு வந்த வீரப்பன் ஆம்புலன் ஸ்க்கு பின்னால் ஒரு காரை பின் தொடர வைத்து
விஜயகுமார் நின்ற ஸ்கூல் முன்னாள் வீரப்பன்
வந்த ஆம்புலன்சை தடுத்து நிறுத்த ஒரு கரும்பு லாரியை நிப்பாட்டி அதற்குள் போலிஸ் பிறகு தான் நிற்பதற்கு எதிராக கோப்ரா டீமை வேறு நிறுத்தி
வைத்து இருந்தார்.

எனக்கு ஆச்சரியமான ஒரு விஷயம் என்ன வென்றா ல் இந்திய ராணுவத்தில் கோப்ரா என்கிற Commando Battalion for Resolute Action ஸ்பெஷல் ஆக்சன் டீம்
என்கிற படைபிரிவு 2008 ல் தான் உருவானது. ஆனா ல் விஜயகுமார் 2004 ல் வீரப்பன் வேட்டைக்கே இந்த
கோப்ரா டீமை உருவாக்கியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
No automatic alt text available.
இவர்கள் வேலை என்னவென்றால் மூனே நிமிசத் தில் 150 மணல் மூட்டையை ரோட்டை மறித்து வரிசையாக அடுக்கி 5 அடி உயரத்துக்கு தடுப்பு அர ண் உருவாக்கி விடுவார்கள்.இவர்கள் வேறு வீரப்பன் வரும் ஆம்புலன்ஸ் கரும்பு லாரியை தாண்டாத வாறு மணல் தடுப்பினை உருவாக்கி விட்டார்கள்

எப்படி பார்த்தாலும் வீரப்பன் வந்த பட்டுக்கூடுஆம்புலன்ஸ் நின்றவுடனே நான்கு பக்கமும் இருந்து போ ட்டு தாக்க போலிஸ் ரெடியாக இருந்தது.
இதில்
முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆம்புலன்சை ஓட்டி வந்த டிரைவர் சரவணன் சரியாக விஜய
குமார் நிற்கும் ஸ்கூலுக்கு நேரெதிராக ரோட்டை மறித்து நிற்கும் கரும்பு லாரிக்கு அருகில் ஆம்புலன்சை நிறுத்தி விட்டு எஸ்கேப்பாக வேண்டும்..

எல்லாமே கரெக்டாக நடந்தது..விஜயகுமார் நின்று
இருந்த ஸ்கூல் அருகே வீரப்பன் வந்த ஆம்புலன்சை
நிறுத்திவிட்டு டிரைவர் சரவணன் எஸ்கேப்பாக கூடவே நம்ம என்கவுண்டர் புகழ் இன்ஸ்பெக்டர் வெள்ளைதுரையும் ஆம்புலன்சில் இருந்து எஸ்கேப் பாகி ஓடி கொண்டே பயர் என்று கத்தினார்..

அதற்கு பிறகு வரிசையாக அனைத்து டீம்களும் மெசின் கன்னால் போட்டு தாக்க வீரப்பன் சேத்துக்குளி கோவிந்தன் ,சேதுமணி,சந்திர கெளடா என்கிற
நான்கு பேரும் அவுட்..ஆப்பரேஷன் ககூன் சக்சஸ்
என்று இரவு பதினோரு மணிக்கு மேல் ஜெயலலிதாவுக்கு போன் செய்து விஜயகுமார் சொல்ல பதிலுக்கு
ஜெயலலிதா கூறியது தான் சூப்பர்....

நான் முதல்வராக பதவியேற்றதில் இருந்து நான்
கேட்ட செய்திகளில் குட் நியூஸ் இது ஒன்று தான்
என்று கூறியிருக்கிறார்..உண்மையிலேயே அந்த
ஆட்சியில் ஜெயலலிதா செய்த ஒரே உருப்படியான காரியம் எதுவென்றால் அது வீரப்பன் என்கவுண்டர்
தான்..

ஆனால் நம்மில் பலர் இன்று வரை அந்த என்கவுண் டர் போலியானது என்று தான் சொல்லிக்கொண்டு இருக்கி றார்கள்..இதற்கு அவர்கள் சொல்லும் முக்கியமான காரணம் அதெப்படி. இன்ஸ்பெக்டர் .வெள் ளைத்துரை அந்த ஆம்புலன்ஸில் வீரப்பன் கூட்டாளி களோடு வர முடியும் என்று கேட்கிறார்கள்..

2000 ல் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரைவிடுவிக் கும் பொழுது 30 கோடி ரூபாய் அளவில் வீரப்பனுக்கு பணம் கொடுக்கபட்டது என்கி ஒரு தகவல் இன்றும் இருக்கிறது.

அதனால் தான் 2002 ல் கர்நாடகா முன்னாள் அமைச்சர் நாகப்பாவை கடத்தி வைத்துக்கொண்டு பெங்களூர் சிறையில் இருந்த கொளத்தூர் மணியை தான் விடுவிக்க வீரப்பன் டிமாண்ட் வைத்தான்.

இது நடைபெற தாமதம் ஆனதால் தான் நாகப்பாவை வீரப்பன் கொன்றான்.

அதனால் ராஜ்குமார் கடத்தலிலேயே வலு செட்டிலாகி விட்ட வீரப்பன் அந்த பணத்தை வைத்து தன்னுடை கேங்கை விரிவு படுத்த நினைத்து நிறைய தமிழ் தீவிரவாத குரூப்புக்குகளோடு காட்டில் உறவாட ஆரம்பித்தான்.

அதில் ஒருவராகத்தான் இன்ஸ்பெக்டர் வெள்ளைத்துரை வீரப்பன் குரூப்பில் நுழைந்தார்

வெள்ளைத்துரை சுமார் 8 மாதம் வீரப்பன் கேங்கில் இருந்தார் என்று சொல்கிறார்கள்.

வெள்ளைத்துரைக்கு நல்லநேரம் இருந்தது .  அதனா ல் வீரப்பனுக்கு கண் தெரியாததை பயன்படுத்தி
சேத்துக்குளி கோவிந்தனிடமே எல்லா டீலிங்கையு ம் பேசி வீரப்பனுக்கு திருச்சியில் ஆப்பரேசன் செய்து
அப்படியே இலங்கைக்கு போய் விடுதலை புலிகளோடு ஐக்கியமாகி விடலாம் என்று வெள்ளைத்துரை அள்ளி விட்டதை சேத்துக்குளி நம்பி வீரப்பனை
காட்டை விட்டு வெளியே கூட்டி வர விஜயகுமார்
வீரப்பன் கதையை முடித்து விட்டார்.

இதனால் என்னாச்சு தெரியுமா?..விஜயகுமார் ஐபிஎ ஸ் என்பவரின் வரலாற்றை தேடினால் கூடவே வீரப்பனும் சேர்ந்தே வருகிறான்..அதேமாதிரி வீரப்பன் வாழ்க்கையை படித்தால் முடிவில் விஜயகுமார் தான் வந்து நிற்கிறார்.

ஏனென்றால் முடிவுரை எழுதியவர் அவரல்லாவா..அந்தளவிற்கு இருவரின் வரலாறும் பிணைந்துள்ளது.

இதே மாதிரி இனி காஸ்மீர் வரலாற்றை எழுதப்போகிறவர்கள் அதில் கட்டாயமாக விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களின் வரலாற்றையும் கூடவே எழுதித்தான் ஆக வேண்டும்

ஏனென்றால் காஸ்மீரில் தீவிரவாத த்தை முடிவுக்கு கொண் டு வந்தவர் விஜயகுமார் ஐபிஎஸ் என்றே நாளைய காஸ்மீர் வரலாறு எழுதப்பட்டு இருக்கும்.

நன்றி இணையம்