முனிவர் ஒருவர் ஆசிரமம் ஒன்றை நிர்வகித்து வந்தார்.
மிகப் பழமையான ஆசிரமம் அது. ஒரு காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தது அது. பக்தர்கள் எப்போதும் நிரம்பி வழிவார்கள்.
உலகமெங்கும் அந்த ஆசிரமத்துக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் கொஞ்ச காலமாய் ஆசிரமம் பொலிவிழக்கத் துவங்கியதை உணர்ந்தார் முனிவர். காரணம், சீடர்களுக்குள் ஒற்றுமை இல்லை.
நூற்றுக்கணக்கான சீடர்கள் அந்த ஆசிரமத்தில் உண்டு. தான் என்கிற கர்வமும், போட்டி மனப்பான்மையும் அவர்களுக்குள் நிரம்பி, அடிக்கடி சீடர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள்.
முனிவர் மிகவும் நொந்து போனார். சஞ்சலமடைந்தார். இப்படியே சென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் ஆசிரமம் சீர் குலைந்து விடுமோ என்ற கவலை அவரை வதைத்தது.
இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்று யோசித்தார். அப்போது முனிவரின் பால்ய கால நண்பரான சகல கலைகளையும் கற்ற இன்னொரு முனிவ்ர், வட நாட்டிலிருந்து அங்கே வருகை புரிந்தார். இருவரும் அளவளாவினார்கள்.
வட நாட்டு முனிவர் , ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தார். அத்தனை சீடர்கள் முன்னிலையில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்.
அதிலே ஓர் ஆச்சர்யமான விஷயத்தை அவர் சொன்னார்.
‘‘இந்த ஆசிரமம் பற்றி ரகசியம் ஒன்றை நான் சொல்லப் போகிறேன். அதைச் சொல்வதற்காகத்தான் கயிலையிலிருந்து இங்கே நான் வந்திருக்கிறேன். கடவுள் சிவ பெருமான் , கயிலையில் என்னிடம் அசரீரியாகப் பேசினார். அவர் சொன்னது இதுதான்.
இந்த ஆசிரமத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான சீடர்களில் ஒருவராக மனித உருவில் தானும் இருப்பதாகச் சிவபெருமான் என்னிடம் கூறினார். அந்த அற்புத தகவலைச் சொல்வதற்காகவே நான் இங்கே வந்தேன்.சிவனாக இங்கேயிருக்கும் சீடர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த சக்தி என்னிடம் இல்லை.
அதனால் பொதுவாக அத்தனை சீடர்களையும் நான் வணங்குகிறேன்.’’ என்று கண்களில் நீர் கசிய கை கூப்பினார் வடநாட்டு முனிவர்.
மறுநாளிலேயே ஆசிரமத்தில் மாற்றம் தெரிந்தது. சீடர்கள் தங்களுக்குள் இருந்த சச்சரவை மூட்டை கட்டி வீசினார்கள்.
ஒவ்வொருவரும் மற்றவரை மரியாதையாகப் பார்த்தார்கள். மற்றவரின் திறமையை மதித்தார்கள். இதில் யார் சிவபெருமான் என்று சரியாகத் தெரியாததால் அனைவரையும் அன்புடன் நோக்கினார்கள். பணிவுடன் நடந்து கொண்டார்கள்.
ஆசிரமத்தின் சங்கடங்கள் தீர்ந்தன. மீண்டும் ஆசிரமத்தின் புகழ் பரவத் துவங்கியது.
இரண்டு முனிவர்களும் பேசி வைத்துக் கொண்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்.
அதைப் பற்றி நமக்கு என்ன கவலை? ஆனால் நான் சொல்ல வந்தது வேறு.
நம்மைச் சுற்றியும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். கடவுள் மனித உருவத்தில் வருபவர் என்பதால், நம்மைச் சுற்றியுள்ளவர்களில் ஒருவராக கடவுளும் இருக்கக் கூடும் என்பதை உணருங்கள். அனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்துங்கள்.
நீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கிறீர்களோ இல்லையோ, மற்றவர்கள் உங்களை மதிப்புடன் ஒரு கடவுள் போன்று நடத்துவதை உணர்வீர்கள்.உங்களைச் சுற்றி அன்பு மயமாவதைப் புரிந்து கொள்வீர்கள்.
இது நிச்சயம்.
நிச்சயமற்ற மனித வாழ்க்கை
- வாழும் வரை சேவை செய்...
- வாழும் வரை சேவை செய்...
அடுத்த வினாடி எது வேண்டுமானாலும் நடக்கலாம். அழுது கொண்டிருப்பவன் சிரிக்கலாம். சிரித்துக் கொண்டிருப்பவன் அழலாம். ஏனெனில் கண நேரங்களில் கூட உலகம் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது.
நாம் எவ்வளவு நாட்கள் வாழ்வோம் என்பதில் கூட எந்த நிச்சயமும் இல்லை. இதில் நானே பெரியவன் நானில்லை என்றால் எதுவும் நடக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
நமக்கு கொடுக்கப்பட்ட நிமிடங்களில் செய்ய வேண்டிய நல்ல செயல்களை, தேவையான காரியங்களை செய்து கொண்டிருப்பதை விட்டு விட்டு எல்லாம் நானே என்று வாழ்ந்து கொண்டிருந்தால் அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும்.
இன்னும் இரண்டு தலைமுறைகள் சென்றால் நம்மை யாரென்று யாருக்குமே தெரியாது. அர்ப்பமான மனிதனாக வாழ்வதும் போதாமல், அதில், இறுமாப்பு, ஆணவம், அகங்காரம் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.
நாளைக்கே நாம் இறந்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இறந்த பின்பு நடப்பதெல்லாம் நமக்கே தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும், நம்மை நேசிப்பவர்கள் அழுது கொண்டிருப்பார்கள், வேண்டாதவர்கள் இறந்த பின்பும் அவதூறு பேசி திரிவார்கள், எல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள் தான்.
பின்னர் பார்த்தால் அனைவரும் அவரவர், வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.
'அட
நாம் இல்லையென்றாலும் எல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. என்னால் செய்ய முடியாத காரியங்களையும் மற்றவர்கள் அற்புதமாக செய்து கொண்டிருக்கிறார்களே! உலகம் அழகாக இயங்கிக் கொண்டிருக்கிறதே.
நான் இல்லையென்றாலும் இவையெல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது.
ஆம்! நம்மை எதிர்பார்த்து உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில்லை. நாம் தான் எல்லாம் நம் கையில் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்
எனவே நிச்சயமில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு எதுவுமில்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரை மற்றவருக்கு நன்மையை செய்து மற்றவர்களை சந்தோஷப்படுத்தி, எப்போதும் இயந்திரத்தனமாக வாழாமல், வாழ்வினை அனுபவித்து, நண்பர்கள், சுற்றார்கள், உற்றார் உறவினர்கள் என்று அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்க்கையின் உண்மை நிலையினை அனுபவிக்கும் மனிதனே வாழ்க்கையை நன்றாக வாழ்பவனாவான்.
நிச்சயமற்ற மனித வாழ்க்கை - வாழும் வரை நமது வசதிக்கேற்ப சேவை செய்து சந்தோஷமாக வாழ்வோம்.
நன்பர்களின் ஆசியுடன்
நல்லவைகள் அனைத்தும் நாடு முழுவதும் பரவட்டும்
ஓம் சிவாய நம
ஓம் மஹேச்வராய நம
ஓம் பரமேஸ்வராய நம
நன்றி
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399
M.கிருஷ்ன மோகன்