
வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும்.
முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்
*1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)*
*2.தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்*.
*3. அமரும்போது வளையாதீர்கள்*.
*4. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்*.
*5. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்*.
*6. சுருண்டு படுக்காதீர்கள்*.
*7. கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்*.
*8. டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.*
*9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்*.
*10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்*.
நன்றி இணையம்







