ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழிதடங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:49 | Best Blogger Tips
Image result for ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும்






ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழிதடங்கள் !!!

Related image
ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன.
கீழ்கண்ட கால அட்டவணைப்படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம்.
*1, திங்களூர் (சந்திரன்):*
*
தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*
காலை 6மணி*
Image result for ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும்
ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும் வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும்.
இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும்.
பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
*2, ஆலங்குடி (குரு) 
*
தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*
காலை 7.30மணி*
ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்
காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்
*3, திருநாகேஸ்வரம் (ராகு) 
*
தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*
காலை 9.30*
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும்.
நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.
*4, சூரியனார் கோவில் (சூரியன்) 
*
தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*
மதியம் 11.00மணி*
. நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
*5, கஞ்சனூர் (சுக்கிரன்) 
*
தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*
மதியம் 12.15*
சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும்.
அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
*6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) 
*
தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*
மாலை 4மணி*
நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும்.
எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும்.
பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
*7, திருவெண்காடு (புதன்) 
*
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*
மாலை 5.15மணி*
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும்.
பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.
*8, கீழ்பெரும்பள்ளம் (கேது) 
*
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*
மாலை 6.15மணி*
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்
*9, திருநள்ளாறு (சனி) 
*
தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*
இரவு 8.00மணி*
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம்.
கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.
9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்
(இது காரில் செல்பவர்களுக்கு எளிதானது.
பஸ்ஸில் செல்பவர்களுக்கு சிரமமானது..
காரணம். சரியான கால அளவில் அனைத்து இடங்களிலும் பஸ் கிடைக்க வேண்டும்,)
Image result for ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும்
#வாழ்கவளமுடன்
உங்கள் கர்மவினை பற்றி முழுமையாக அறிந்திட, முழு ஜாதகப் பலன்கள் கொண்ட எங்கள் SMVA ஜாதகங்கள் வாங்கிப் பயன் அடையுங்கள்!
தற்போது 40பக்கங்கள் ரூ.311க்கே கிடைக்கின்றது. ஒரு குடும்பத்திற்கு 4ஜாதகங்கள் வாங்கும் போது,
311 X 4 = ~1244~
ஆனால் உங்களுக்கு தள்ளுபடி விற்பனையில் 4 ஜாதகங்கள் ரூ.1102க்கே கிடைக்கும். இது 4ஜாதகங்கள் வாங்குவோர்க்கு மட்டுமே பொருந்தும்.
ஸ்ரீமஹா விஷ்ணு அஸ்ட்ரோ ஜாதகங்கள் விற்பதன் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் அன்னதானம் மற்றும் வசதியற்ற குழந்தைகளின் கல்விதானம் சிறப்பாக நடத்திட தந்து உதவுகின்றோம்.
நீங்கள் பிறந்த ஜாதகத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்!
ஏனென்றால், உங்களின் ஜாதகத்தில் திசா புத்தி ரீதியாக கடுமையான தோஷங்கள் ஏற்படும் போது, அந்த தோஷங்கள் தீர, நீங்கள் செல்லும் கோவில் மூலவரின் பாதங்களில் உங்கள் பிறந்த ஜாதகத்தை வைத்து வணங்கும்போது, உங்களின் வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும்.
உங்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும் போது, அந்த ஜாதகத்தை உங்களின் குலதெய்வத்தின் காலடியில் வைத்து வேண்டினாலும் உங்களின் பிரச்சினைகள் கண்டிப்பாகத் தீரும்.

 *தி ரு ச் சி ற் ம் ம்*

றை ன் பி ல்

நன்றி இணையம்