ஜன்மாஷ்டமி / க்ருஷ்ண அவதாரம் .....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:00 | Best Blogger Tips
Image result for ஜன்மாஷ்டமி / க்ருஷ்ண அவதாரம்Related image
நீண்ட நாட்களாக பலர் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதில்.......
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து,
தேரோட்டி
பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர்
உத்தவர்.
இவர் தனது வாழ்நாளில், தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,
உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்,
"உத்தவரே,
இந்த அவதாரத்தில் பலர்
என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.
ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன்.
உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு,
சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த பல கண்ணனின் லீலைகள்,
புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன.
அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.
"பெருமானே ! நீ வாழச் சொன்ன வழி வேறு;
நீ வாழ்ந்து காட்டிய வழி
வேறு !
நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற பாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத பல விஷயங்கள் உண்டு.
அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.
நிறைவேற்றுவாயா ?" என்றார் உத்தவர்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்:
"கண்ணா !
முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.
கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.
உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பவை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கறிந்த
ஞானியான நீ
'உற்ற நண்பன் யார்
என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று,
தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை?
போகட்டும்.
விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு
நீதி பாடம் புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை.
தருமன்
செல்வத்தை இழந்தான்,
நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.
சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது,
நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.'
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். குல தேவதை அவளைப் பணயம் வைத்து ஆடு.
இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்என்று சவால்
விட்டான் - துரியோதனன்.
அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை.
மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போது தான் சென்று,
'துகில் தந்தேன்,
திரௌபதி மானம் காத்தேன்ஆடை தந்தேன், என்று ஜம்பமாக மார்தட்டிக் கொண்டாய்.
மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,
எஞ்சிய
மானம் என்ன அவளிடம் இருக்கிறது? அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது,
எதனைக் காத்ததாக எண்ணி நீ பெருமைப்
படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்?
ஆபத்தான இது போன்ற
சமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத,
நீ எப்படி ஆபத்பாந்தவன் ?
நீ செய்தது நியாயமா!தருமமா ?'
என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று,
மகாபாரதம் படித்த 
நம் அனைவரின் உள்ளத்திலும் எழும் மனவலியோடு உணர்வு மிகுந்த கேள்விகளே இவை.
நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார்.
"உத்தவரே !
விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி.
துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை.
அதனால்தான் தருமன் தோற்றான்"
என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க,
கண்ணன் தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது.
'பணயம்
நான் வைக்கிறேன்.
என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்என்றான் துரியோதனன்.
அது விவேகம்.
தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக
என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்'
என்று சொல்லியிருக்கலாமே
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள் ?
நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா?
அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா ?
போகட்டும்.
தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான். என்பதையாவது
மன்னித்து விடலாம்.
ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான்.
'ஐயோ ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே !
ஆனால், இந்த விஷயம் கண்ணனுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே !
அவன் மட்டும் சூதாட்ட 
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்
என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான்.
நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான்.
யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,
என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே !
அண்ணன் ஆணையை
நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா ?
இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வீண் வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய,
என்னைக் கடைசி வரை கூப்பிடவேயில்லை !
நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல்,
'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா! அபயம்
எனக் குரல் கொடுத்தாள்.
பாஞ்சாலி.
அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
அழைத்ததும்
சென்றேன்.
அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன்.
இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா !
அசந்து விட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை.
உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா ?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால் தான் நீ வருவாயா ?
நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில், கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு
வரமாட்டாயா ?"
புன்னகைத்தான்,
கண்ணன்.
"உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;
அதில் குறுக்கிடுவதும் இல்லை.
நான் வெறும் 'சாட்சி பூதம் மட்டுமே,
நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே !
அது தான் தெய்வ தர்மம்" என்றான்.
நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!
அப்படியானால்,
நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.
நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
அப்படித்தானே?"
என்றார் உத்தவர்.
உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக
உணர்ந்து பாருங்கள்.
நான் சாட்சி பூதமாக உங்கள் அருகில் நிற்பதை
நீங்கள் மனப்பூர்வமாக உண்மையில் உணரும் போது மட்டும் தான்
உங்களால் தவறுகளையோ,
தீவினை செயல்
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.
அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான்,
எனக்குத் தெரியாமல் இது அது என ஏதாவது தீவினையை நான் உங்களுள் இருப்பதை மறைத்து எதையாவது 
செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் பெரும்பாலும் தவறாக நிகழ்வதும் அப்போதுதான்.
எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே,
அதுதான் அவனது
அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால்,
இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?" 
என்றான்,
ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்.
ஆகா! ஆகா!
எத்தனை உள்ளர்த்தம் வாய்ந்த அருமையான ஆழமான தத்துவம்!
பகவானைப் பூஜிப்பதும்,
பிரார்த்தனை செய்வதும்,
அவனை
உதவிக்கு அழைப்பதும்,
ஓர் உணர்வுதானே !
"அவனின்றி ஓர்
அணுவும் அசையாது"
என்ற நம்பிக்கை நமக்கு வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்?
அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும் ?
இந்த தத்துவத்தை தான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
மொத்தத்தில் இறைவன் நமக்கு உணர்த்துவது யாதெனில் என்னை "சரணாகதி" அடைபவனுக்கு எந்த துன்பமும் இல்லை என்பது தான்

 நன்றி இணையம்