உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12 கர்ம விதிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:53 PM | Best Blogger Tips
Image result for உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12 கர்ம விதிகள்Related image
1. மகத்தான விதி "காரணி மற்றும் விளைவு விதி " “Law of Cause and Effect.”
" எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய் "
நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்தாலும் சரி கெட்டவையாக இருந்தாலும் சரி. அமைதி, அன்பு , நல்லிணக்கம் ,வளமை ஆகியவற்றை விரும்பினால் அவையே நமக்கு கிடைக்கும்.. ,,இந்த உலகில் நாம் இடும் ஆற்றலுக்கு (எண்ணமும், செயலும்) உடனடியாகவோ அல்லது காலம் கழித்தோ கட்டாயம் விளைவு உண்டு .
2 படைத்தல் விதி ( Law of creation )
வாழ்க்கையில் எதுவுமே அதுவாக நடப்பதில்லை , நாம் அதை நடக்க வைக்க வேண்டும் ..நாம் எதை விரும்புகிறமோ அவை நம்முடைய பங்களிப்பு மூலமாக நமக்கு வருகிறது. நம்மை சுற்றியுள்ள அனைத்துமே யாரோ ஒருவரின் எண்ணத்தில் உதித்தது தான்.நாமும் இந்த பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து இருப்பதால் படைப்பின் பரிணாம வளர்ச்சியில் நம்முடைய நோக்கங்களும் இருக்கிறது .ஆகவே நமக்கும் நம்மைச்சுற்றியுள்ள சமூகத்தின் விருப்பத்திற்கும் உகந்ததாக நம்முடைய படைப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும் ..
3 பணிவு விதி ( Law of Humility )
மிகப்பெரிய மாற்றங்கள் வருவதை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளும் தன்மை என்பது பிரபஞ்ச கோட்பாடாகும் .இது எல்லா அமைப்புகளிலும் உள்ள விதி.பெரிய மாற்றங்களை வேண்டினாள் நிகழ்கால சூழ்நிலைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்..அதே சமயம் எதிர்மறையான விஷயங்களை மாற்ற எதிர்மறையான போக்குகளை கடைபிடித்தால் கடைசியில் அதன் விடை பூஜ்யமாகத்தான் இருக்கும்
4 வளர்ச்சிவிதி ( Law of Growth)
நமது சுயவளர்ச்சி எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் நம் கையில் தான் உள்ளது.. நாம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரே நபர் நாம்தான்..நாம் மாறும்பொழுது நமதுவாழ்க்கையும் அதற்கேற்றாற்போல் நம்முடன் சேர்ந்து மாறுகிறது .உண்மையான வளர்ச்சி அல்லது மாற்றம் நாம் எப்பொழுது முழுமனதோடு அர்ப்பணித்து மாறுகிறோமோ அப்பொழுதான் நடக்கிறது..
5 பொறுப்பு விதி ( Law of Responsibility )
நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நாம் பொறுப்பேற்கவேண்டும், நம்முடைய வாழ்க்கை நாம் செய்வதில்தான் உள்ளது வேறெதினாலும் கிடையாது.. வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு தடுமாற்றம் வரும்பொழுது மனதில் நிறைய தடுமாற்றங்கள் வருகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் நமது எண்ணங்களை மாற்றி பிறகு நம்மைச்சுற்றியுள்ளவற்றை மாற்றவேண்டும் ..
6 தொடர்பு விதி ( Law of Connection )
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை .பெரியதாக இருந்தாலும் சரி , சின்னதாக இருந்தாலும் சரி. நமது கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையபவை. இந்த தொடர்புகளை பயன்படுத்தி நாம் விரும்பும் மாற்றத்திற்கு வழி செய்ய வேண்டும்.
7 கவன விதி ( Law of Focus )
ஒருவனால் ஒரே நேரத்தில் பல பணிகளில் கவனத்தை செலுத்தமுடியாது ,, ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியாது , நமது ஆன்மீக வளர்ச்சியை எடுத்துக்கொண்டால் ஒரே நேரத்தில் எதிர்மறை சிந்தனை மற்றும் செயல்களை கொண்டு அதனை அடைய முடியாது ,நமது முழுக்கவனத்தையும் ஒரே பணியில் இருத்தி அதனை அடைய வேண்டும்..
8 விருந்தோம்பல் மற்றும் கொடுத்தல் விதி ( Law of hospitality and giving)
நம்முடைய பழக்கவழக்கங்கள் நமது எண்ணங்கள் மற்றும் செயல்களோடு ஒத்துப் போகவேண்டும் . நமது சுயநலமற்றதன்மையை செயல் விளக்கம் அளிப்பதே நமது உள்நோக்கமாக இருக்க வேண்டும்..சுயநலமின்மை என்ற கோட்பாடு ஏதாவது நமக்கில்லாமல் இந்த சமுதாயத்திற்கு பண்ணும்பொழுதுதான் தெரியும் அதுவே மிகப்பெரிய சந்தோசம்.. ஒரு சுயநலமிமையில்லாமல் ஆன்மீக வளர்ச்சி என்பது இல்லவே இல்லை..
9 மாற்றம் விதி (Law of Change )
மாற்றம் இல்லாவிட்டால் அதே வரலாறு திரும்ப திரும்ப வரும் . மாற்றத்திற்கான மனப்பூர்வமான அர்ப்பணிப்பு மட்டுமே கடந்த காலத்தை மாற்ற வல்ல ஒரே வழி. நேரமறையான அழுத்தங்களும் மாற்றங்களும் இல்லையென்றால் வரலாறு மாறாது..
10 இங்கே இப்பொழுதே விதி : Law of NOW and HERE
நாம் அனைவரிடமும் இருப்பது நிகழ்காலம் மட்டுமே
வருத்தத்துடன் கடந்த காலத்தை பார்ப்பதும் , பயத்துடன் எதிர்காலத்தை பார்ப்பதும் நிகழ்காலத்தை கொள்ளையடித்துவிடும், பழைய முறை சிந்தனைகளும் நடத்தை முறைகளும் நிகழ்காலத்தை அழித்து மாற்றங்களை வர விடாது..
11 பொறுமை மற்றும் வெகுமதி விதி ( Law of Patience and Rewards)
பொறுமையான மனநிலை இல்லாமல் எந்த ஒரு மகத்தானத்தையும் அடைய முடியாது.பொறுமையும் விடாமுயற்சியும் அனைத்து வெற்றிக்குமான வெகுமதியை பெற வழிகளாகும்,வேறெந்த வழியுமில்லை. 
 
வெகுமதிகள் மட்டுமே விடையின் கடைசி அல்ல , சத்தியம் , நீடித்த சந்தோசம் மற்றும் உற்சாகம் அனைத்துமே எதை சரியாக இந்த உலக மற்றும் நமது சந்தோஷத்திற்காக செய்யவேண்டும் என்பதை அறிந்து செய்வதில்தான் இருக்கிறது..
12. முக்கியத்துவம் மற்றும் அகத்தூண்டுதல் விதி ( Law of Signifigance and Inspiration)
நாம் அளித்த ஆற்றல் மற்றும் முயற்சியின் இறுதி வடிவம் தான் நமக்கு கிடைக்கும் வெற்றி .. ஆகவே முழுமனது மற்றும் அகத்தூண்டலுடன் சுயநலமில்லாமல் நாம் செய்யும் அனைத்துமே மிக முக்கியத்தும் மிக்கவை,,காலத்தாலும் மறக்காத காரியமாக இருக்கும்..
நன்றி நன்றி நன்றி....

 இணையம்