சனி பகவான் தரும் கர்மயோகம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:04 PM | Best Blogger Tips

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 92 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் அருளுடன்
ஒரு மனிதனுக்கு கர்மயோகத்தை வழங்குவதில் நவகிரகங்களில் சனிபகவானுக்கு முதல் இடம் உண்டு.அதனால்தான் சனிபகவானை நாம் சனி ஈஸ்வரன் என உலகெல்லாம் ஞானமார்க்கத்தால் வழிநடத்தும் சிவனுக்கு அடுத்தபடியாக அழைக்கிறோம்.
கர்மயோகம் என்பது
ஒருவன் தன் இல்லற வாழ்வின் சுகதுக்கங்களில் மனம் தளராது ஈடுபட்டு அதன் மூலமாக வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் ,உறவின் நிலைகளையும் அறிந்து கொள்வது ஆகும்.இதன் மூலம் ஞானநிலையை அடைவது அதாவது லொளகீக வாழ்வில் ஈடுபட்டு அதன்மூலம் வாழ்வின் ஆத்மார்த்த நிலையை அடைவதாகும்.
இந்த கர்ம யோகத்தை சாதரண சராசரி மனிதனுக்கும் வாரி வழங்குவதில் சனி பகவானுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன் என்பதை இப்போது விரிவாக பார்ப்போம்.
ஒருவன் ஜெனன காலத்தில் பால்வீதியில் என்ன நட்சத்திரம் உலாவி வருகிறதோ அந்த நட்சத்திரத்தினை கொண்டு அதாவது அந்த நட்சத்திரத்தின் பாதத்திற்கு ஏற்ப (சில நட்சத்திரங்களுக்கு இரண்டு ராசி வரும்) ஒருவருக்கு ஜென்ம ராசி கண்டறியப்படுகிறது என்பது சோதிடம் அறிந்த அனைவருக்கும் தெரியும்.இந்த நட்சத்திர அதிபதிக்குரிய திசையை செல் கழித்து மீதமிருப்பதை ஜென்ம திசையாக கொள்ளப்படுகிறது.
ஒரு மனிதனை வழிநடத்துவதில் ‪#‎ஜென்மதிசைக்கு பங்குண்டு.அவனுக்கு நடைபெறும் திசை அடிப்படையில் இன்ப துன்பங்களை அடைவதைப்போல அம்மனிதனை வாழ்வை வழிநடத்துவதில்‪#‎கோசாரத்திற்கும் பெரும் பங்கு உண்டு.எனவே ஒருவனது வாழ்வில் நடந்த மற்றும் நடக்கபோகின்ற மாற்றங்களுக்கும்,ஏற்ற இறக்கங்களுக்கும் இந்த ஜென்ம திசை மற்றும் கோசாரப்பலன் இரண்டையும் அவனது சாதகத்தில் பார்த்து அவ்விரண்டிற்கும் ஏற்றார்போல கிரகநிலை ஆய்ந்து ஒருவருக்கு சோதிடராகிய நாம் பலனளிக்கவேண்டும்.
சரி விஷயத்திற்கு வருகிறேன்.இதில் கோசரப்பலன் என்பது ராசியை அடிப்படையாக கொண்டு வானவீதியில் கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு பெயர்ச்சி அடைவதால் மனிதனுக்கும்,உலகியலுக்கும் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது ஆகும்.இதனையே நாம் சனிபெயர்ச்சி,குருபெயர்ச்சி...என அழைக்கிறோம்.
இவ்வித பெயர்ச்சியினால் அவரவர் சாதக கட்டத்தில் கிரகநிலை மற்றும் ராசிக்கு ஏற்ப அவர் வாழ்வில் மாற்றங்கள் நடைபெறும் என்பதாலும்,இயற்கை நிகழ்வுகளுக்கும் மாற்றங்கள் உருவாகும் என்பதாலும் இவ்வித பெயர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் ஊடகங்களால் கொடுக்கப்படுகிறது.இவ்வித பெயர்ச்சியால் சொல்லப்படும் பலன்கள் யாவும் பொதுப்பலன்களே அவரவர் ராசி,கிரகநிலை மற்றும் ஜென்ம திசைக்கு ஏற்ப பலன்களிலில் மாறுபடும்.எனவே செய்திதாள்களில் பொதுபலனைப் படித்துவிட்டு அதுபோல நடைபெறவில்லை என சோதிட துறையை குறைகூறி திரியவேண்டாம்.ஒவ்வொறு பெயர்ச்சி பலனை திறன் வாய்ந்த சோதிடரிடம் உங்களது சாதகத்தில் உள்ள கிரகநிலை மற்றும் திசைக்கு ஏற்றார்போல பலனை எடுத்துக்கொள்ளவேண்டும்.
திசை மற்றும் கோசார பலன் இரண்டும் உடன்பாடாக இருக்கும் பட்சத்தில்தான் யோகங்கள் அதிகம் உண்டாகும்.இரண்டில் ஒன்று பாதிக்கப்பட்டால் ஒன்று மற்றதன் பலனை குறைக்கும்.இரண்டும் பாதிக்கப்பட்ட நிலையில் அதிக கஷ்டங்களை மனிதன் அனுபவிக்கவேண்டும்.இது விதிப்பலன் ஆகும்.இதற்கு பரிகாரம் அதற்குரிய அதிதேவதைகளிடமும் ,குலதெய்வத்திடமும் சரணடைவதை தவிர வேறுவழியில்லை.
இவ்வாறாக சனிபகவான் ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகள் வீதம் பணிரெண்டு ராசிகளையும் முப்பது ஆண்டுகள் முதல் சுற்றில் சுற்றி வருகிறார்.ஒரு மனிதனுக்கு சனி பகவான் ஆனவர் அவரது ராசியை மையமாக கொண்டு வலம் வருவதில் ராசிக்கு பணிரெண்டு ,ஜென்மராசி மற்றும் இரண்டாமிடம் ஆகிய மூன்று ராசிகளை கடப்பதையே‪#‎ஏழரைச்சனி என்கிறோம்.
அதாவது ராசிக்கு பணிரெண்டாமிடத்தில் வரும்போது அதனை‪#‎விரயச்சனி என்கிறோம்.இந்த ராசியில் சனிபகவான் இருந்துகொண்டு அவனுக்கு பலவிதங்களில் விரயங்களை தந்து அவனை ஆட்டிபடைக்கிறார்.எவ்வளவு பெரிய கோடீஸ்வரனையும் உருட்டி தரைநிலைக்கு கொண்டு வருகிறார்.எவ்வளவு அறிவாளிகளையும் புத்திபிசக வைத்து தவறான முடிவை எடுக்கவைக்கிறார்.
அடுத்து ஜென்ம ராசிக்கு வருவதை ‪#‎ஜென்மசனி என்கிறோம்.சாதரணமாக எதை தொட்டாலும் விளங்காதவனை மக்கள் " சனியன் பிடித்தவன் "என அழைப்பதுண்டு.ஏனெனில் ஜென்மசனி பிடித்தவன் அடையும் பலவித இன்னல்களை அனைவரும் பார்த்ததாலே சாதரணமாக யோகமில்லதவனை அவ்வாறு அழைக்கிறார்கள்.
இறுதியாக ‪#‎பாதசனி ராசிக்கு இரண்டாமிடத்தில் இரண்டரை ஆண்டுகள் இருப்பதையே பாதசனி என்கிறோம்.இதில் ஒரளவு சனியின் துன்பங்கள் குறையும் என்றாலும் ஏற்கெனவே விரய மற்றும் ஜென்மசனியால் உலுக்கிய புயலால் அடைந்த சேதங்களை சரி செய்யவே இந்த இரண்டரை ஆண்டுகள் பிடிக்கும் என்பதால் இந்தபாத சனியிலும் பெரிய நன்மைகள் ஏதும் பெரிதாக கிடைக்கப்போவதில்லை.
இவ்வாறாக இந்த மூன்று ராசிகளையும் சனிபகவான் கடந்து செல்லும் ஏழரை ஆண்டுகளையே நாம் ஏழரை சனி என அழைக்கிறோம்.இந்த ஏழரைச்சனியும் ஒரு மனிதனுக்கு மூன்றுமுறை சுற்றி வருகிறது.முதல் ஏழரைச்சுற்றை ‪#‎மங்குசனி என்றும்,இரண்டாவது ஏழரை சுற்றை‪#‎பொங்குசனி என்றும் ,மூன்றாவது ஏழரைச்சுற்றை ‪#‎மரணச்சனி எனவும் அழைக்கிறோம்.
இதில் முதல் ஏழரைச்சுற்றில்தான் அதிக கஷ்டங்களை தந்து ஒரு மனித வாழ்வில் கஷ்டம் என்றால் என்ன எனவும்,யார் உண்மையான நண்பன் மற்றும் யார் உண்மையான பாசமுள்ள உறவுகள் என வாழ்வின் பல உன்னத விஷயங்களை ஒருவனுக்கு உணர்த்தி அவனது இல்லற வாழ்விலிருந்தே அவன் ஞானத்தை அதாவது "கர்மயோகத்தை "அடையவைக்கும்.எனவேதான் நாம் அனைவரும் நமக்கு பலவித இன்னல்களை தந்து அவ்வித ஏழரைசனிக்கு பிறகு பாடம்பெற்று அதற்குபிறகு வாழ்வினை சரியான பாதைக்கு நகர்த்தி செல்ல உதவுதால்தான் சனிபகவானை "‪#‎சனீஸ்வரன் என மக்களால் அழைக்கப்படுகிறது.
சிலநேரங்களில் ஜெனன காலத்தில் மிக குறைவான காலங்கள் பாதசனியில் இருந்து முதல் சுற்றை சிறுவயதில் முடித்தவற்களுக்கு இரண்டாவது சுற்று ஏழரைசனியே முதல்சுற்றைப்போல இன்னல்களை தரும்.
தொடரும்.
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு
அலைபேசி
97 151 89 647
740 257 08 99
வாட்ஸ்அப்
97 151 89 647
(நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் போன்வழியாக தொடர்பு கொண்டு சோதிட பலன்,விவாக பொருத்தங்கள் மற்றும் ஜெனன சாதகம் கணித்து எழுதுதல் போன்ற வசதிகளை பெறலாம்.கட்டணம் உண்டு.எனது வாட்ஸ்அப் மூலம் பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற விவரங்ஙளை மெஸ்ஸேஸ் செய்யவும்)