தாகம் எப்போது ஏற்படுகிறது?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:57 | Best Blogger Tips


தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது மாறிமாறி வெப்பமும் குளிர்ச்சியும் வருகின்ற பருவ நிலைகளைக் கொண்டது.
கோடைக்காலங்களில் குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக தாகம் எடுக்கின்றது. அதன் காரணமாக அதிகமான தண்ணீரைப் பருகுவோம். பொதுவாகவே நம் உடலானது பருவநிலைச் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது உடல் வெப்பநிலையை உடல் உள்உறுப்புகள் சீராகவே வைத்திருக்கின்றன. கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பம் நம் தோலின் மீது விழுகின்றபோது அதன் மூலமாக அதிகப்படியான நீர் வியர்வை மூலமாக வெளியேற்றப்படுகின்றன. உடம்பில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய் இருந்தால் நமக்கு தண்ணீரின் ஞாபகமே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம் குறைந்தாலே போதும்.
அவ்வாறு குறைவு ஏற்படுகின்றபோது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்காக மூளை நரம்பு செல்களுக்குக் கொடுக்கும் உணர்வு (தகவல்) தான்தாகம்ஆகும்.மூளையின் ஒரு பகுதி ஹைபோதாலமஸ் (Hypothalamus) மிகமிகச் சிறிய அளவிலான நியூரான்கள் அடங்கியிருக்கின்றன. இந்த நியூரான்களின் முக்கியப் பணி உடல் வெப்பநிலை, பசி மற்றும் தாகம் இவைகளைக் கவனிப்பதுதான். ஹைபோதாலமஸ் உள்ள நியூரான்கள் பிட்யூட்டரி சுரப்பி வழியாக நரம்புகளோடு இணைந்து இருக்கின்றன. உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்போது இந்த நியூரான்கள் மிக வேகமாக செயல்பட்டு நரம்பு உணர்வுகளைத் தெரிவிக்கின்றன. அந்த உணர்வைத்தான்தாகம்என்கிறோம்.
தாகம் எடுக்கின்றபோது குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களைப் பருகக் கூடாது. காரணம், குளிர்ந்த பானங்களில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பதால் உடலுக்கு நல்லதல்ல. அறை வெப்பநிலையில் (Room Temperature) நீரின் மூலக்கூறுகள் இயல்பான நிலையில் இருக்கும். ஆனால் இயல்பான நிலையில் இருக்கும் நீரை குளிர்விக்கின்றபோது நீரின் மூலக்கூறுகள் மிக நெருக்கம் அடைந்து தன்னுடைய ஆற்றலை வெளியேற்றிவிடுகின்றன. இப்படி ஆற்றல் குறைந்த குளிர்ச்சியான நீரை பருகுகின்றபோது உடல் உள்உறுப்புகள் தன் அதிகப்படியான ஆற்றலை செலவழித்து அந்தக் குளிர்ந்த நீரை இயல்பான நிலைக்குக் கொண்டுவர உடல் உள்ளுறுப்புகள் முயல்கின்றன. அவ்வாறு இயங்குகின்றபோது தாகம் எடுப்பது குறைந்துவிடும். இதனால் மனிதனின் உடல் வெப்பநிலை சீராக இல்லாமல் உடல் உபாதைகள் (சளி, ஜுரம்) ஆகியவை ஏற்படுகின்றன.
எனவே தாகம் எடுப்பது மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. எப்பொழுதெல்லாம் தாகம் எடுக்கிறதோ தண்ணீரைப் பருகுங்கள். ஆரோக்கியமாக வாழ்வோம்
நன்றி இணையம்