மகாபாரதம்; இக்காவியத்தின் கதாபாத்திரங்களுக்கும் நம் உடலின் ஆன்ம சாதனைக்கும் இருக்கும் தொடர்புகள் ஆய்வுக்குரியவை....?
உதாரணத்திற்கு,
பஞ்ச பாண்டவர்கள் ஐவர்,அவர்களது மனைவி திரௌபதி....ஐவருக்கு ஒருவள் மனைவி என்பது நம் கலாச்சாரப் பிரகாரம் அபத்தமாய் தோன்றுகிறதல்லவா....!
இதையே வேறு கோணத்தில் பார்ப்போம்.,
குண்டலினியாகிய சக்தியை அதாவது மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை எழுப்பி மற்ற ஐந்து ஆதாரங்களோடு கலந்துறவாட விட்டால் பரப்பிரம்மமாகிய சிவத்தை அடையலாம்......இது ஆத்ம சாதனை.
இச்சாதனையை புரிய மனமானது ஆத்மத்தோடு இணைந்து அதன் வழி நடத்தல் அவசியம்,அந்த ஆத்ம மனமாய் கிருஷ்ணரை இருத்துங்கள்,
மனதின் லீலைகளை கிருஷ்ண லீலைகளாயும் கொள்ளலாம்,குண்டலினி சக்தியாய் திரௌபதியையும் மற்ற ஐந்து ஆதாரங்கள் பாண்டவர்களாயும் எடுத்து கொள்வோம்,இந்த ஆத்ம சாதனையின் போது ஒருவர் சந்திக்கும் இன்னல்கள் பல,இந்த இன்னல்களுக்கு காரணம் உடல் சார்ந்த மனமும் ஆது சார்ந்த புத்தியுமாகும்....!உடல்சார்ந்த மனதை சகுனியோடு ஒப்பிடுங்கள்,
ஆத்ம சாதனையின் போது நம் உடலின் 96 தத்துவங்களை சீர்படுத்தி முதலாய் ஆணவம்,கர்வம்,ஆசை,மாயை இவற்றை பலியிடுதல் வேண்டும், இவற்றை கௌரவர்களோடு ஒப்பிடுங்கள்,.........என்ன அன்பர்களே நான் சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருப்பதாய் தோன்றுகிறதா.....?
மகாபாரதத்தின் மூல எழுத்துரு நூல் கிடைத்தால் இந்த ரீதியிலான பார்வையின் உண்மையை எடுத்துரைக்கலாம்.

நன்றி இணையம்