பிரதோசம் என்றால் என்ன என்பதை அறிவோம் :-

மணக்கால் அய்யம்பேட்டை | 2:57 PM | Best Blogger Tips

பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.
பிரதோஷம் காலம் எது:
வளர் பிறை,தேய் பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் கதிரவன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ காலமாகும்.
சனி பிரதோஷம் என்றால் என்ன:
சிவபெருமான் ,தேவர்களைக் காப்பாற்ற, ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.எனவே பிரதோஷ நேரம் சன்க்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.
மஹா பிரதோஷம் என்று வரும் :
சிவபக்தர்களுக்கு சனி பிரதோஷம் மிகவும் முக்கியமானது.அது போலவே சித்திரை மாதம் வளர்பிறை திரியோதசி திதியில் வரும் பிரதோஷ நாளே மஹா பிரதோஷம் ஆகும்.
பிரதோச வகைகள்
பிரதோசத்தில் பத்து வகைகள் உள்ளன. அவையாவன,.
1.
நித்திய பிரதோசம்
2.
நட்சத்திர பிரதோசம்
3.
பட்ச பிரதோசம்
4.
மாதப் பிரதோசம்
5.
பூர்ண பிரதோசம்
6.
திவ்ய பிரதோசம்
7.
அபய பிரதோசம்
8.
தீபப் பிரதோசம்
9.
சப்த பிரதோசம்
10.
மகா பிரதோசம்
1. நித்திய பிரதோஷம் - அனுதினமும் சூரியமறைவிற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நட்சத்திரங்கள் தோன்றும் வரை
2. பக்ஷப் பிரதோஷம் - சுக்லபக்ஷ சதுர்த்தி மாலை
3. மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பக்ஷ திரயோதசி
4. மகாப் பிரதோஷம் - சனிக்கிழமை தினம் கிருஷ்ண பக்ஷ திரயோதசி
5. பிரளயப் பிரதோஷம் - ஈசனிடம் ஒடுங்கும் பிரளயக் காலம்
திங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சோமவாரப் பிரதோசம் எனவும், சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படுகிறது.
சோம சூக்தப் பிரதட்சணம் என்பது பிரதோச நாளில் சிவாலயத்தினை வலம் வரும் முறையாகும்.
பிரதோச கால பிரகார சுற்றும் முறை
அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய திட்டமிட்டார்கள். அதற்காக மேரு மலையை மத்தாகவும் வாசுகி பாம்பினை கயிறாகவும் உபயோகம் செய்து பாற்கடலை கடைந்தார்கள். ஒரு கட்டத்தில் வலி பொறுக்க இயலாத வாசுகி பாம்பு ஆலகாலம் எனும் விசத்தினை கக்கியது.
அந்த ஆலகாலம் தேவர்களையும், அசுரர்களையும் துரத்தியது. சிவபெருமான் இருக்கும் இமயமலையை தேவர்கள் வலமாக சுற்றும் போது ஆலகாலம் வழிமறைத்தது. அதனால் தேவர்கள் வந்த வழியே திரும்பி சுற்ற இம்முறை ஆலகாலம் இடப்புறம் வந்து எதிர்த்தது. இவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி பயமுருத்திய ஆலகாலத்தினை சிவபெருமான் உண்டு தேவர்களை காத்தார்.
ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள்
திருமுழுக்குப் பொருள்களும் பலன்களும்
1. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும் 
2.
பழங்கள் - விளைச்சல் பெருகும்
3.
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
4.
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
5.
தேன் - இனிய சாரீரம் கிட்டும்
6.
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
7.
எண்ணெய் - சுகவாழ்வு
8.
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
9.
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
10.
தயிர் - பல வளமும் உண்டாகும்
11.
நெய் - முக்தி பேறு கிட்டும்

 நன்றி இணையம்