பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசு(International Gandhi Peace Prize):
மகாத்மா காந்தியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசு இந்திய அரசினால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அமைதியை விரும்பிய காந்தியின் கொள்கைகளை பரப்பும் எண்ணத்துடன் இந்திய அரசு 1995ஆம் ஆண்டு,காந்தியின் 125ஆவது பிறந்தநாளை ஒட்டி, இந்த பன்னாட்டு காந்தி அமைதிப்பரிசை உருவாக்கியது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இப்பரிசு சமூக,பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை அஹிம்சை மற்றும் காந்தியக் கொள்கைகள் மூலம் உருவாக்க பங்கெடுக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்விருது எந்த உலகநாணயத்திற்கும் மாற்றக்கூடிய இந்திய ரூபாய் 10 மில்லியன்,ஒரு கோப்பை மற்றும் ஒரு சான்றிதழ் கொண்டது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரு சிறப்பு உறுப்பினர்கள் கொண்ட குழு இந்த பரிசுக்குறியவர்களை தேர்ந்தெடுக்கின்றது.
பாரத ரத்னா
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும் இவ்விருதை பெரும் வகையில் நவம்பர், 2011ல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.[1] இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.
இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.
1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. அதன் பின் பத்து பேர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும் அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத்தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.
பத்ம விபூசண் (Padma Vibhushan)
என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருது. பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2012 வரை, 288 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1] 2012இல், 5 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பத்ம பூசன் (Padma Bhushan)
என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது வரையில் (2010) 1111 பேர் பத்ம பூஷன் விருதைப் பெற்றுள்ளனர்.
தாமரைத் திரு (பத்மசிறீ) (பத்மஸ்ரீ)
என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. பாரத ரத்னா,பத்ம விபூசன்,பத்ம பூசன் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. 2012 வரை, 2497 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1] 2013இல், 80 பேருக்கு வழங்கப்பட்டது.[2]
இந்தியச் சிறாருக்கான தேசிய வீரதீர விருது (National Bravery Award for Indian Children) ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசும்[2]
மற்றும் சிறார் நலத்திற்கான இந்திய மன்றமும் (ICCW) இணைந்து பல இடர்களின்
இடையிலும் வீரமாகச் செயல் புரிந்த இந்தியச் சிறாருக்காக வழங்கப்படுகிறது.
பதினாறு அகவைக்குட்பட்ட 24 சிறாருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் 1978ஆம் ஆண்டு தங்களைக் கடத்தியவர்களுடன் போராடி உயிர்விட்ட சோப்ரா குழந்தைகள் நினைவாக ஓர் சிறுவனுக்குத் தரப்படும் சஞ்சய் சோப்ரா விருதும் ஓர் சிறுமிக்குத் தரப்படும் கீதா சோப்ரா விருதும் குறிப்பிடத்தக்கன.[3]. இந்த விருதுகளில் உயரியனவாக 1987ஆம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படும் பாரத் விருதும் 1988ஆம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படும் பாபு கயதானி விருதும் கருதப்படுகின்றன.
2009ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இந்த விருது வென்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.[8]
நன்றி - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது
மகாத்மா காந்தியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசு இந்திய அரசினால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அமைதியை விரும்பிய காந்தியின் கொள்கைகளை பரப்பும் எண்ணத்துடன் இந்திய அரசு 1995ஆம் ஆண்டு,காந்தியின் 125ஆவது பிறந்தநாளை ஒட்டி, இந்த பன்னாட்டு காந்தி அமைதிப்பரிசை உருவாக்கியது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இப்பரிசு சமூக,பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை அஹிம்சை மற்றும் காந்தியக் கொள்கைகள் மூலம் உருவாக்க பங்கெடுக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்விருது எந்த உலகநாணயத்திற்கும் மாற்றக்கூடிய இந்திய ரூபாய் 10 மில்லியன்,ஒரு கோப்பை மற்றும் ஒரு சான்றிதழ் கொண்டது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரு சிறப்பு உறுப்பினர்கள் கொண்ட குழு இந்த பரிசுக்குறியவர்களை தேர்ந்தெடுக்கின்றது.
பாரத ரத்னா
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும் இவ்விருதை பெரும் வகையில் நவம்பர், 2011ல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.[1] இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.
இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.
1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. அதன் பின் பத்து பேர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும் அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத்தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.
பத்ம விபூசண் (Padma Vibhushan)
என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருது. பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2012 வரை, 288 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1] 2012இல், 5 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பத்ம பூசன் (Padma Bhushan)
என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது வரையில் (2010) 1111 பேர் பத்ம பூஷன் விருதைப் பெற்றுள்ளனர்.
தாமரைத் திரு (பத்மசிறீ) (பத்மஸ்ரீ)
என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. பாரத ரத்னா,பத்ம விபூசன்,பத்ம பூசன் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. 2012 வரை, 2497 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1] 2013இல், 80 பேருக்கு வழங்கப்பட்டது.[2]
தேசிய வீரதீர விருது
தேசிய வீரதீர விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | குடியியல் | |
பகுப்பு | 16 அகவைக்குட்பட்ட சிறுவர்/சிறுமியர் | |
நிறுவியது | 1957 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2011 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 800 சிறார்கள் (568 சிறுவர்களும் 232 சிறுமியரும்)[1] | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு |
பதினாறு அகவைக்குட்பட்ட 24 சிறாருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் 1978ஆம் ஆண்டு தங்களைக் கடத்தியவர்களுடன் போராடி உயிர்விட்ட சோப்ரா குழந்தைகள் நினைவாக ஓர் சிறுவனுக்குத் தரப்படும் சஞ்சய் சோப்ரா விருதும் ஓர் சிறுமிக்குத் தரப்படும் கீதா சோப்ரா விருதும் குறிப்பிடத்தக்கன.[3]. இந்த விருதுகளில் உயரியனவாக 1987ஆம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படும் பாரத் விருதும் 1988ஆம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படும் பாபு கயதானி விருதும் கருதப்படுகின்றன.
விருதுகள்
ஒவ்வொரு விருதும் ஓர் பதக்கம், சான்றிதழ் மற்றும் நிதிப்பரிசு கொண்டவையாக உள்ளன. பாரத் விருது பெற்றோருக்கு தங்கப்பதக்கமும் ஏனையோருக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படுகிறது. [4][5] மேலும் அவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை முடிக்க சிறார் நலத்திற்கான இந்திய மன்றத்தின் நிதிப்புரவலும் மருத்துவ,பொறியியல் போன்ற தொழில்முறைக் கல்விக்கு இந்திரா காந்தி படிப்புதவியும் வழங்கப்படுகின்றன.[6][7].2009ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இந்த விருது வென்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.[8]
விருதுகளின் பட்டியல்
- பாரத் விருது, 1987 முதல்
- சஞ்சய் சோப்ரா விருது, 1978 முதல்
- கீதா சோப்ரா விருது, 1978 முதல்
- பாபு காயதானி விருது, 1988 முதல்
- தேசிய வீரதீர விருது, 1957 முதல்
வழங்குவிழா
இந்த விருதுகள் நவம்பர் 14, சிறுவர் நாள், அன்று அறிவிக்கப்படுகின்றன; சில நேரங்களில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்படுகின்றன. இந்தியக் குடியரசு நாள்|இந்தியக் குடியரசு நாளுக்கு முந்தைய நாள் இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமரால் வழங்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக இந்தியக் குடியரசுத் தலைவர் கொடுக்கின்ற விருந்து ஒன்றில் இவர்கள் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றனர்[9]. குடியரசுத் திருநாள் பேரணியில் யானைமீது இவர்கள் பேரணியின் அங்கமாக உலா வருகின்றனர்[3][10].நன்றி - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது