காலம் முழுவதும் இளமையோடு இருப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை
என்றாலும், இளமைத் தோற்றத்தை நீட்டித்துக்கொள்ள சில வழிகள் இருக்கின்றன.
உண்ணும் உணவுக்கும் இளமையான தோற்றத்துக்கும் மிக நெருங்கியத் தொடர்பு
உண்டு. ஆரோக்கியமான உணவு உங்கள்
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்-கவும்
வழிவகுக்கும். இதனால் இதய நோய்கள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு
குறையும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து மிகுந்த உணவின் அளவைக்
குறைத்துக்கொள்ளுங்கள். அதிக அளவில் காய்கறி, கீரைகள், பழங்களை
எடுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை, உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
சமச்சீரான உணவுப் பழக்கம் தோற்றத்தில் இளமையைப் பெருமளவு தக்கவைக்கும்.
தவிர்க்க வேண்டியவை!
காபி, டீ ஆகிய பானங்களைக் குறையுங்கள். கோலா போன்ற குளிர்பானங்கள், மதுவைத் தவிர்த்துவிடுங்கள். புகை, மதுப் பழக்கத்தினால் சருமம் மிக விரைவில் முதுமைத் தன்மை அடைந்துவிடும். இதற்குப் பதில், ஆன்டிஆக்சிடென்ட்ஸ் அதிகம் உள்ள உணவைத் தினமும் எடுத்துக் கொள்ளலாம். கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது. இதைத் தினமும் சர்க்கரை, பால் சேர்க்காமல் குடிக்க வேண்டும். வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொய்யா, ஸ்ட்ராபெரி, அவகோடா (பட்டர் ப்ரூட்) இதில் ஏதேனும் ஒன்றைத் தினமும் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி!
ஒரு நாளைக்குக் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப் படிகளில் ஏறி இறங்குவது, நடப்பது போன்றவற்றை மேற்-கொள்ளலாம். இவையும் கூட நல்ல உடற்பயிற்சியே. ஆரோக்கியத்துக்காக உடற்பயிற்சியே கதி என்று இருப்பதும் கூடாது. உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருங்கள். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்ற எலும்பு & மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.
தோலில் சுருக்கமா? வருத்தம் வேண்டாம்!
வயது அதிகரிக்கும்போது நம் உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய ஆரம்பிக்கும். அதனால், நம் உடலில் இருக்கும் கோலா-ஜென் மற்றும் எலாஸ்டின் ஆகிய இரண்டும் தளர ஆரம்பிக்கும். தோலில் இதனால் சுருக்கம் ஏற்படும். தினசரி இரண்டரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். தோலுக்கு நீர்ச்சத்தை அளித்து சுருக்கம் இல்லாமல் இது பார்த்துக்கொள்ளும். தேவையற்ற பொருட்களை உடலில் இருந்து கழுவி விரட்டும் ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. (சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், டாக்டரின் ஆலோசனைப் பெற்று தண்ணீர் அருந்த வேண்டும்.) வைட்டமின் சி, இ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், கெரட்டினாய்ட்ஸ் உள்ள பழங்களைச் சாப்பிடுவது தோல் இளமையாக இருக்க உதவும்.
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!
இரவில் நெடுநேரம் விழிக்க வேண்டாம். குறைந்தது 8 மணி நேரம், குறுக்கீடு இல்லாத நிம்மதியான தூக்கம் மறுநாள் முழுக்க உங்களைப் புத்துணர்ச்சியில் ஆழ்த்-துவதைக் கண்கூடாக உணரலாம். முகமும் பளிச்சென்று இருக்கும்.
இளமையாக எண்ணுங்கள்!
இளமையாக இருப்பதாகவே எப்போதும் எண்ணிக்கொள்ளுங்கள். தெளிவான சிந்தனை, ஆரோக்கியமான செயல்பாடுகள் போன்றவை உங்கள் ஆயுளை நீடிப்பது மட்டும் அல்ல... உடல் பொலிவையும் கூட்டும்.
உடலுக்கு மட்டும்தான் வயது, மனதுக்குக் கிடையாது. எனவே, வாழ்க்கையை இனிமையாகக் கொண்டாடுங்கள்.

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.