தர்மம் என்பது என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:20 | Best Blogger Tips
தர்மம் என்பது என்ன?
------------------------------
நன்மைகள் வேண்டி செய்யப்படும் செயல்கள் அனைத்தும் தர்மம் எனப்படும்.எதை செய்தால் நன்மை ஏற்படுமோ அதுவே தர்மமாகும்.”தரு”என்ற பதத்திலிருந்து பிறந்தது தர்மம் என்ற சொல்லாகும்.”த்ரு”என்றால் தாங்குதல் என்று பொருள்படும்.மனிதனை தன் நிலையிலிருந்து வீழாமல் மேல் நிலைக்கு உயர்த்துவாதாகும்.

தர்மம் வேறு,தானம் வேறு.தர்மம் என்பது நமக்கு தெரிந்த விசயங்கள்,ரகசியங்கள் போன்றவற்றின்மூலம் அடுத்தவருக்கு நலவழிகாட்டுதல் ஆகும்.தானம் தன் தேவைக்கு மீறிய செல்வங்களை அடுத்தவருக்கு நம மனம் அறியாமல் அள்ளி கொடுப்பதாகும்.

பொதுவாகவே எல்லோரிடமும் ஒரு கருத்து உண்டு.ஒரு மனிதருக்கு எவ்வளவு தர்மம் செய்தாலும்,அவருக்கு ந்ன்றி இருப்பதில்லை,பெற்ற தர்மத்தை உணர்ந்து பார்ப்பதில்லை என சங்கடபடுவோரும் உண்டு.தர்மம் என்பதே எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்வதாகும்.

பூமியின் இயங்கியல் விதிப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் விளைவு உண்டு.சில நபர்களுக்கு சீக்கிரமாக எதிர் விளைவு கிடைக்கும்.பல நபர்கள் தாமதமாக உணருவார்கள்.பிறருக்கு எந்த விதத்திலும் துன்பம் தராமல் நன்மையே செய்தால்,அவ்ரால் நமக்கு மீண்டும் நனமை கிடைக்கவேண்டியதில்லை.யார் மூலமோ,நாம் செய்த உதவி பல மடங்காக கிடைக்கும்.இப்படித்தான் தீமை செய்தாலும்.அதனால் தர்மத்தை செய்து,நனமையை பெறுவோம்.ஏனென்றால்..,

                     “தர்மம் தலை காக்கும்”

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.