மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவுது "மன் " என்றால் " மனம் ". "திரா " என்றால் "விடுவிப்பது " மனதை அதன் துன்பங்களிலிருந்து விடுவிப்பது மந்திரம் ஆகும். ஒரு மந்திரம், ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். ஆனால் மகா மந்திரம் எனப்படுவுது எல்லா விதமான துன்பகளிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்ததாய் இருக்க வேண்டும்.
மனசஞ்சலங்கள், மனச்சோர்வு, மன அழுத்தம், மனக்குழப்பம், பாவ விளைவுகள், தீய பாவ விளைவுகள், தீய சிந்தனைகள், சண்டை சச்சரவுகள், காம, க்ரோத, மோக, லோப, மத , மாச்சர்யம் மற்றும் அணைத்து விதமான மனதின் துன்பங்களில் இருந்தம் மனதை விடுவிக்கும் சக்தி " ஹரே கிருஷ்ணா " என்று வேத சாஸ்திரங்கள் அழைகின்றன. ஹரே கிருஷ்ண மந்திரத்தை சொல்ல கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. உச்சரிக்கும் முறை : நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்தபட்சம் 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை வந்தால் மன அமைதியும், சந்தோஷத்தையும் பெறலாம்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம , ராம ராம ஹரே ஹரே!!
Thanks to தர்மத்தின் பாதையில்