மெல்லிடை மேனிக்கு... மெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:02 PM | | Best Blogger Tips
நம்ம தமிழ்நாட்டு சமையல் கட்டுல வெங்காயம் இல்லாம ஒரு வேலையும் நடக்காது. அந்த அளவுக்கு நம்ம உணவுல வெங்காயம் ஐக்கியமாகிப் போன ஒன்னு வெங்காயத்துக்கு இருக்கிற மருத்துவ குணமே தனிதான். வெங்காய சாம்பார், வெங்காய வடகம், வெங்காயச் சட்னி, வெங்காயப் பச்சடி என வெங்காய உணவுகள் பட்டியல் ரொம்ப நீளமானது.

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/68545_139583346227675_90343914_n.jpgசில வினாடிகள் நேரத்தில் தயார் செய்யப்படும் வெங்காயப் பச்சடிக்கு உள்ள சிறப்பே சிறப்புதான்.

வெங்காயத்தைக் குறுக குறுக அறிஞ்சு, அதில் மோர் விட்டுக் கலந்து கொஞ்சம் உப்பு, மிளகு சீரகம் போட்டு தாளிச்சிட்டா வெங்காயப் பச்சடி தயார். பகல் உணவில் இதை ஒரு அங்கமா எடுத்துக்கிட்டு சாப்பிடலாம்.

பொதுவாக வெங்காயம் நச்சுக்கிருமிக் கொல்லியாக உடம்பை மெலிதாக்க குரலை இனிமையாக்கி, விஷக்கடி, குழிப்புண்களைக் கட்டுப்படுத்த பித்தம் தணிய, மூளை சுறுசுறுப்பாக, கால் கை வலிப்பு நோய் நீங்க, கொழுப்புச் சத்தை கரைக்க, வயிற்றுக் கட்டிகளை நீக்க எனப் பல வகையிலும் பயன்படும். இதன் மகத்துவத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அண்மையில் கிங்ஜார்ஜீ மருத்துவ ஆய்வுக் கழகத்தில் ஆராய்ச்சி செய்தபோது பக்கவாதம் எனப்படும் மூளை, இரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு பச்சை வெங்காயம் முழு பலன் தர்றதாக் கண்டுபிடிச்சு சொல்லியிருக்காங்க.

அதுமட்டுமல்ல, புகை, பிடிப்பதால் ஏற்படும் நிகோடின் என்னும் நஞ்சினை முறித்து நுரையீரலுக்கும் இதயத்திற்கும் வலிமையை தருது. இன்னொரு உண்மை ரோமானிய நாட்டில் இடைமெலிந்திருக்க பெண்கள் வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்களாம். நீரோ மன்னன் குரல் இனிமைக்காக வெங்காயத்தைத் தினமும் சாப்பிட்டானாம்.

பொதுவாக வெங்காயத்தை எல்லோரும் பயன்படுத்தலாம். தீவிர இரத்த சோகை இருப்பவர்கள் மட்டும் அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்கணும். 40 வயதுக்கு மேலே ஆனவர்கள். கண்டிப்பா வாரம் இரண்டு முறையாவது வெங்காயத்தை உணவுல சேர்த்துக்கணும்.

வயிற்றுப் பிரச்சனைகள் தீர அங்காயப் பொடி!

சின்னக் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட வாயை வயிற்றைக் கட்டுப்படுத்துவது மிகக் குறைவுதான். ஆசைப்பட்டதெல்லாம் சாப்பிட்டு விட வேண்டியது. பிறகு அவதிப்பட வேண்டியது.

வயதுக்கேற்ற தன்மையில் உணவு, உணவின் அளவு, உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருள் இவற்றில் கவனம் செலுத்தினால் வயிற்று உபாதைகளைக் கட்டுப்படுத்த முடியும் ஆனால் இதில் கவனம் பிசகுகிறபோது என்ன செய்யறது...?

ஒன்னும் கவலைப்படாதீங்க இதுக்காகவே இருக்கு அங்காயப் பொடி, அதென்ன அங்காயப்பொடி?

சுக்கு ஒரு துண்டு, மிளகு இருபது, சீரகம் கால் கரண்டி, வெந்தயம் கால் கரண்டி, வேப்பம்பூ அரைக் கரண்டி எடுத்துக்கணும்.

முதலில் இவைகளை மிதமாக வறுத்துப்பொடி செய்யணும். அத்துடன் நல்லெண்ணெயில் பொறித்த கருவேப்பிலைப் பொடி கால் பிடி எடுத்து மேலே சொன்னவற்றுடன் கலந்து பகல் உணவில் சாதத்துடன் உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் அல்லது மோருடன் கலந்து பருகலாம்.

இப்படியே மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து செய்யணும். வாந்தி, குமட்டல், உணவு செரிக்காமை போன்ற வயிற்று உபாதைகள் எல்லாமே கட்டுப்படும்.

பொதுவாக இதனை எல்லோரும் சாப்பிடலாம். பிரசவித்த தாய்மார்கள் பகல் உணவில் ஐந்து துளி நெய்யுடன் அங்காயப் பொடியை சோற்றில் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் கிருமித் தொற்றுகள் கட்டுபடும்.

அடிக்கடி பயணம் செய்யறவங்க, வெளியிடங்களில் சாப்பிடவேண்டிய கட்டாயம் இருக்கறவங்க அங்காயப் பொடியை சாப்பாட்டில் சேர்த்துகிட்டா நல்லது. வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம் இவைகளைக் கட்டுப்படுத்தும்.

இதுல வேப்பம்பூ இருக்கறதாலே 25 முதல் 40 வயது ஆண்கள் பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒரு நாள் இரண்டு நாள் எடுத்துக்கலாம். பிறகு விந்தணு குறைபாடு உள்ள ஆண்கள் இதனை சேர்த்துக் கொள்ளக் கூடாது.


Thanks to ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.