வாதநோய் குணமாக்கும் துளசி...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:50 | Best Blogger Tips

துளசி இலை, ஆமணக்கு வேர் சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயமாக்கி காய்ச்சி குளிர்ந்த பின்பு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் வாதநோய் குணமாகும். துளசி இலைச்சாறு பிழிந்து 200 மில்லி எடுத்து காய்ச்சி சிறிது மிளகுத் தூள், பசுமை கலந்து சாப்பிட்டால் வாதத்தினால் தோன்றும் வீக்கம் குணமாகும்.

துளசி விதையை பொடியாக்கி 20 கிராம் இரண்டு வேளை சாப்பிட்டு வர நரம்புகளில் வலி, சிறுநீர் தடை குணமாகும்.

துளசி இலை சாறு 200 மில்லி எடுத்து கொதிக்க வைத்து பின்னர் இஞ்சி கசாயம் செய்து கலந்து சூடு உள்ளபோது குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

இதன் விதையை பொடியாக்கி 10 கிராம் காலையில் தொடர்ந்து தின்று வர நீரிழிவு தணியும்.

துளசி விதைப் பொடி 20 கிராம் பழைய வெல்லம் 10 கிராம் சேர்த்து சாப்பிட்டு உடனே பசுவின் பாலைக் கறந்த சூட்டில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் தணியும். விந்து வளர்ச்சியும் உண்டாகும். (2 வேளை 40 நாட்கள் குடிக்கவும்)

துளசி வேரை பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை வெற்றிலையுடன் மென்று தின்றால், கனவில் விந்து வெளியேறுதல் நீங்கும்.

துளசியிலையைச் சாறு பிழிந்து 200 மில்லியாக எடுத்து கொதிக்க வைத்து 25 மில்லி தேன் கலந்து காலையில் குடித்து வர உடல் பருமன் குறையும்.

துளசி உலர்ந்து இலை 10 கிராம், சடாமாஞ்சில் 2 கிராம் அக்கராகாரம் 12 கிராம், உப்பு 8 கிராம் களிப்பாக்கு 5 கிராம், சீமை வாதுமைக் கொட்டையின் கரித்தூள் 10 கிராம், ஏல அரிசி 8 கிராம் சேர்த்து எடுத்து பொடியாக்கி 2 வேளை சாப்பிட்டு பிறகு பல் துலக்கி வர பல் நோய்கள் குணமாகும்.

மாத விலக்கு காலங்களில் பெண்கள் குளித்தப்பின் துளசி விதையை நீருடன் ஊற வைத்து நெல்லிக்காயளவு 3 நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை தூய்மை பெற்று கரு தங்கும்.

துளசி ரசம் 20 கிராம், மணத்தக்காளி இலை ரசம் 20 கிராம், அமுக்கிரா கிழங்கு ரசம் 10 கிராம் சேர்த்து தேன் 10 கிராம் கலந்து 7 நாட்கள் குடித்தால் பிள்ளை பெற்றதும் தோன்றும் தாய்ப்பால் தூய்மை பெறும்.

துளசி இலைச் சுரசம் 20 கிராம் அரிசிக் கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு பால் சோற்றை உணவாகக் கொண்டால் பெரும்பாடு நீங்கும்.

துளசி (Tulsi) இலைச் சுரசத்தில் கற்கண்டுத்தூள் செய்து கலந்து குடித்தால் இரத்தப் பெரும்பாடு நீங்கும்.

காட்டுத் துளசி விதைகளை பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகை சாப்பிட்டு வர உள்மூலம் (பௌத்திரம்) குணமாகும்.

துளசி வேர்த்தூள், காரும் கருணைத்தூள் சம அளவு எடுத்து ஒரு சிட்டிகை பொடியுடன் வெற்றிலையுடன் மென்று தின்றால் விந்து விரைவில் வெளியாகாமல் கட்டுப்படும்.

இராமதுளசி மற்றும் துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு வெற்றிலையுடன் சாப்பிட்டால், விந்து கட்டுப்படும்.