சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி கூடிய நாளே சித்ரா
பௌர்ணமி. பௌர்ணமி தினங்களிலேயே, இந்த சித்ரா பௌர்ணமிக்குத்தான் சிறப்பு
அதிகம்.
இறைவன் புரிந்த அறுபத்துநான்கு திருவிளையாடல்களில் முதல்
திருவிளையாடல், ‘இந்திரன் பழி தீர்த்த படலம்’. இந்தத் திருவிளையாடல்
நடந்தது ஒரு சித்ராபௌர்ணமி நாளில்தான்.
மக்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுக்க பரமசிவனால் பொற்பலகையில் ஓவியமாக
வரையப்பட்டு அம்பாளின் அருட்பார்-வையால் உயிர் பெற்றவர் சித்ரகுப்தர்.
ஓவியத்தில் இருந்து பிறந்ததால் இவருக்கு சித்திரபுத்ரன், சித்ரகுப்தன் என்ற
திருநாமங்கள் ஏற்பட்டன.
சித்ரகுப்தன் என்பதற்கு இன்னொரு வகையான
அர்த்தமும் சொல்வதுண்டு. ‘சித்திரம்’ என்ற சொல்லுக்கு வியப்பூட்டுவது என்று
பொருள். ‘குப்தம்’ என்பது மந்தணம் என்று பொருள்படும். இவர்
ஆச்சரியப்படத்தக்க முறையில் கணக்குகளை எழுதி ரகசியமாகக் காப்பாற்றுவதால்,
‘சித்ரகுப்தன்’ எனப்படுகிறார். உயிர்களைப் பறிக்கும் எமதர்மராஜனிடம்
தலைமைக் கணக்கராக இருப்பவர். அவரைக் கொண்டாடி விழா எடுக்கும் நாளே சித்ரா
பௌர்ணமி என்றும் கூறுவர்.
நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய
பிரத்யேக தேவதையாக சித்ரகுப்தனைக் கூறுவர். சித்ரா பௌர்ணமி நாளன்று
செய்யும் சித்ரகுப்த பூஜை, சித்ரகுப்தரின் அருளைப் பெற்றுத்
தரக்கூடியதாகும். அந்த நாளில் சித்ரகுப்தரை அர்ச்சித்து பூஜை செய்தால்,
கேது கிரகத்தால் விளையும் தீமைகள் ஒடுங்கும்.
பௌர்ணமி என்பதே மிக
அழகான ஒரு வார்த்தை.. மிகப் பெரிய வட்டமாய் அம்மாவின் நெற்றிப் பொட்டு
போன்று கன கச்சிதமாய் வானில் ஒட்டிக் கொண்டு பாந்தமாய் ஒளிர்ந்துக்
கொள்ளைக் கொள்ளும்.மொட்டை மாடியில் முகத்தை வருடும் காற்று சும்மா
செல்லாமல் என்மனதையும் இழுத்து செல்லும்.. இதமான அந்த இரவு நேரத்தில்
தூரத்தில் இருக்கும் நிலவு தரும் குளுமை கொஞ்ச நஞ்சமல்ல.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி கூடிய நாளே சித்ரா பௌர்ணமி. பௌர்ணமி தினங்களிலேயே, இந்த சித்ரா பௌர்ணமிக்குத்தான் சிறப்பு அதிகம்.
இறைவன் புரிந்த அறுபத்துநான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல், ‘இந்திரன் பழி தீர்த்த படலம்’. இந்தத் திருவிளையாடல் நடந்தது ஒரு சித்ராபௌர்ணமி நாளில்தான்.
மக்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுக்க பரமசிவனால் பொற்பலகையில் ஓவியமாக வரையப்பட்டு அம்பாளின் அருட்பார்-வையால் உயிர் பெற்றவர் சித்ரகுப்தர். ஓவியத்தில் இருந்து பிறந்ததால் இவருக்கு சித்திரபுத்ரன், சித்ரகுப்தன் என்ற திருநாமங்கள் ஏற்பட்டன.
சித்ரகுப்தன் என்பதற்கு இன்னொரு வகையான அர்த்தமும் சொல்வதுண்டு. ‘சித்திரம்’ என்ற சொல்லுக்கு வியப்பூட்டுவது என்று பொருள். ‘குப்தம்’ என்பது மந்தணம் என்று பொருள்படும். இவர் ஆச்சரியப்படத்தக்க முறையில் கணக்குகளை எழுதி ரகசியமாகக் காப்பாற்றுவதால், ‘சித்ரகுப்தன்’ எனப்படுகிறார். உயிர்களைப் பறிக்கும் எமதர்மராஜனிடம் தலைமைக் கணக்கராக இருப்பவர். அவரைக் கொண்டாடி விழா எடுக்கும் நாளே சித்ரா பௌர்ணமி என்றும் கூறுவர்.
நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதையாக சித்ரகுப்தனைக் கூறுவர். சித்ரா பௌர்ணமி நாளன்று செய்யும் சித்ரகுப்த பூஜை, சித்ரகுப்தரின் அருளைப் பெற்றுத் தரக்கூடியதாகும். அந்த நாளில் சித்ரகுப்தரை அர்ச்சித்து பூஜை செய்தால், கேது கிரகத்தால் விளையும் தீமைகள் ஒடுங்கும்.
பௌர்ணமி என்பதே மிக அழகான ஒரு வார்த்தை.. மிகப் பெரிய வட்டமாய் அம்மாவின் நெற்றிப் பொட்டு போன்று கன கச்சிதமாய் வானில் ஒட்டிக் கொண்டு பாந்தமாய் ஒளிர்ந்துக் கொள்ளைக் கொள்ளும்.மொட்டை மாடியில் முகத்தை வருடும் காற்று சும்மா செல்லாமல் என்மனதையும் இழுத்து செல்லும்.. இதமான அந்த இரவு நேரத்தில் தூரத்தில் இருக்கும் நிலவு தரும் குளுமை கொஞ்ச நஞ்சமல்ல.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.