1. கிவியில் மிகவும் குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஒரு கிவி பழத்தில் சுமார் 3.8 கலோரிகள் உள்ளன.
2. உடலின் எடையைக் குறைக்கும் ஆர்வமுடையவர்கள் இந்தக் பழத்தை பாதுகாப்பாக அன்றாடம் உண்ணலாம்.
3. இதில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது.நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது. முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.
4. இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
5. கிவி பழத்தில் ஒமேகா-3 மற்ற பழங்களை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
6. சர்க்கரை மிகவும் குறைவான அளவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடிய சிறந்த பழம் இது.
7. கிவியில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.
8. இதிலுள்ள வைட்டமின் ஈ பெண்களின் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்கும்.