‘உணவே மருந்து, மருந்தே உணவு'

மணக்கால் அய்யம்பேட்டை | 11:00 AM | Best Blogger Tips

‘உணவே மருந்து, மருந்தே உணவு'னு வாழ்ந்த சமூகம் நம்மளோடது. இப்ப, ‘மருந்தே உணவுனு மட்டுமே வாழ்ந்துட்டு இருக்கோம். ஆயிரக்கணக்கான வருஷமா, எந்தெந்த உணவுகளைச் சாப்பிடணும்; எப்படியெப்படி சாப்பிடணும்னு பலவிதத்துலயும் அனுபவிச்சி, ஆராய்ஞ்சி சொல்லி வெச்சுருக்காங்க.

ஆனா, அதையெல்லாம் விட்டுப்போட்டு... பீட்சா, பர்கர்னு இப்ப உணவு முறைகளையே மாத்திக்கிட்டிருக்கோம். ஊருக்கெல்லாம், சோறு போடற விவசாயிகளுக்கு... எந்தெந்த உணவுல என்னென்ன சத்து இருக்குனு தெரியல. நாம உற்பத்தி செய்யற பொருளோட மகத்துவம் நமக்கு தெரிஞ்சாதான்... அது மேல நமக்கெல்லாம் ஒரு ஈர்ப்பு வரும்.

அஞ்சறைப் பெட்டியில இருக்கற பொருளும்... வைத்தியர் பெட்டியில இருக்கிற மருந்தும் ஒண்ணுருனு நம்ம ஊர்ல சொல்லக் கேட்டிருப்பீங்க. ஆனா, கண்ட கண்ட ரசாயனத்தைத்தான் இப்போவெல்லாம் மருந்துங்கற பேர்ல நம்ம தலையில கட்டுறாங்க. இப்படி மருந்தெல்லாம் ரசாயனத்துக்கு மாறினதுமே... உணவுகளும் மாறிப்போச்சுது. உப்பு தொடங்கி... பாயசம் செய்யுற இனிப்பு வரைக்கும் ரசாயனம் வந்தாச்சு.

நிஜத்துல... வெள்ளைச் சர்க்கரையைவிட, வெல்லம்தான் நல்லது. இந்தியாவுல இருக்கற பாதிக்கும் மேலான பொண்ணுங்க, ரத்தசோகையில... சோர்ந்து போறாங்க. இதைத் தீர்த்து வைக்கறதுக்கு எந்த மருந்து, மாத்திரையும் தேவையே இல்லை. உணவே போதும். அதாவது, தினமும் உணவுல சுத்தமான வெல்லம் இருக்கற மாதிரி பார்த்துகிட்டாலே போதும்.

ஊர்ப்பக்கம், கருவாட்டுக் குழம்பு வைக்கும்போது... சுரைக்காயையும் வெட்டிப் போடுவாங்க. ஏன்னா, கருவாட்டுல கொஞ்சமா, விஷத்தன்மை இருக்குமாம். அதை முறிக்குறத் தன்மை சுரைக்காய்க்கு உண்டுங்கறதுதான். இந்த ‘விஷ'யம் தெரியாததால... கருவாட்டுக் குழம்புல சுரைக்காய் போடற வழக்கமே கொஞ்சம் கொஞ்சமா காணா போயிட்டிருக்கு. ‘நேத்து கருவாட்டுக் குழம்பு சாப்பிட்டேன், உடம்பு ஒரு மாதிரியா' இருக்குனு சொல்றவங்கள்லாம், இனி ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க... உண்மை உறைக்கும்!

- பசுமை விகடன்