கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க, இந்த உணவுகளை சாப்பிடுங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | Best Blogger Tips
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க, இந்த உணவுகளை சாப்பிடுங்க...

தற்போதுள்ள காலத்தில் கூந்தல் பிரச்சனைகள் அதிகம் உள்ளன. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் அந்த கூந்தல் உதிர்வதால், பெண்களுக்கு கூந்தல் மெல்லியதாக தான் காணப்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு அழகை கெடுக்கும் வகையில் வலுக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் ஆண்கள் இளமையிலேயே முதிய தோற்றத்திற்கு ஆளாகின்றனர்.

இத்தகைய கூந்தல் உதிர்தலுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று பரம்பரையாக வீட்டில் இருப்பவர்களுக்கு வலுக்கை இருந்தால், அது தலைமுறை தலைமுறையாக தொடரும். அவற்றை தடுக்க முடியாது.

சிலர் ஆரம்பத்திலேயே கூந்தலை நன்கு பராமரிக்காமல், ஏனோ தானோ வென்று இருப்பார்கள். பின் கூந்தல் நிற்காமல் உதிரும் போது, உதிருகிறது என்று வருத்தப்படுவார்கள். தேவையில்லாமல் அடிக்கடி எதற்கெடுத்தாலும் வருத்தப்படுவது, டென்சன் ஆவது போன்வற்றால் கூட கூந்தல் உதிர்தல் ஏற்படும். மேலும் சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லாவிட்டாலும் கூந்தல் உதிர்தல் ஏற்படும். அதிலும் உடலில் ஜிங்க், வைட்டமின்கள் போன்றவை குறைவாக இருந்தால், கூந்தல் உதிர்ந்து கொண்டே இருக்கும்.

ஆகவே அத்தகைய கூந்தல் உதிர்தலை தடுக்க சில உணவுகள் இருக்கின்றன. மேலும் அந்த உணவுகளில் ஜிங்க் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பாதாம்

கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் ஈ பாதாம் பருப்பில் உள்ளது. அதிலும் இதனை சாப்பிட்டால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் கூந்தல் வளர்ச்சியடையும்.

வால்நட்

வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் வால்நட்டில் அதிகம் நிறைந்துள்ளது. கூந்தல் உதிர்வதற்கு உடலில் போதுமான ஜிங்க் இல்லாதது ஒரு காரணம். ஆகவே இதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், கூந்தல் உதிர்தல் நின்று கூந்தலும் நன்கு வளரும்.

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதையில் அதிக அளவில் புரோட்டீன், பொட்டாசியம், ஜிங்க், இரும்புச்சத்து, வைட்டமின் பி, ஈ, மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கூந்தலானது புரோட்டீனால் ஆனது. மேலும் இதை சாப்பிட்டால், தலைக்கு இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, கூந்தல் நன்கு வலுவோடு வளர்ச்சி அடையும்.

அத்திப்பழம்

அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், கூந்தல் நன்கு வளரும். ஏனெனில் இதிலும் வைட்டமின்கள் ஏ, பி & சி, ஜிங்க், சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதனால் கூந்தல் வளர்ச்சியோடு, உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

ஆப்ரிக்காட்

கூந்தல் வறட்சியால், முடியானது வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும். ஆகவே இந்த பிரச்சனையை போக்க ஆப்ரிக்காட் பழத்தை சாப்பிடலாம். இதனால் இதில் உள்ள இரும்புச்சத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, இரும்புச்சத்து குறைவினால் ஏற்படும் அனீமியா, சருமத்தில் வெளுப்பு ஏற்படுவது, கூந்தல் ஈரப்பசையின்றி, வலுவிழந்து காணப்படுவது போன்றவை சரியாகும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ட்ரிப்டோஃபேன் என்னும் உடலுக்கு தேவையான அமினோ ஆசிட் மற்றும் பொட்டாசியம் உள்ளது. ஆகவே இந்த பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, கூந்தலும் பட்டுப்போன்று இருக்கும். ஏனெனில் இதில் கூந்தலுக்கு தேவையான இயற்கை எண்ணெயும் அடங்கியுள்ளது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மயிர்கால்களுக்கு மென்மையை தரும்.

பெர்ரி

பெர்ரிப் பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் ஈ உள்ளது. இதிலும் நெல்லிக்கனி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றில் அதிகம் உள்ளது. இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் போன்றவை உள்ளன. ஆகவே இதனை சாப்பிடுவதால், ஸ்கால்ப்பில் உள்ள செல்கள் நன்கு வளர்ச்சியடையும். மேலும் கூந்தலுக்கு சரியான அளவு ஊட்டச்சத்துக்களும் கிடைத்து, கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.


உலர் திராட்சை

இரும்புச்சத்து உலர்ந்த திராட்சையில் அதிகம் உள்ளது. இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் ஆக்ஸிஜன் சீராக பாயும். மேலும் இது மயிர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தந்து, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். கூந்தலும் நன்கு வளரும்.

கொடிமுந்திரி

இந்த கொடிமுந்திரியில் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால், இரத்த சோகை, சோர்வு, பழுப்பு நிற தோல், உலர்ந்த நகங்கள் மற்றும் மந்தமான கூந்தல் போன்றவை நீங்கும்.

பால் பொருட்கள்

மாட்டுப்பாலில் வைட்டமின் ஏ மற்றும் பி12 நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள பயோடின் என்னும் புரோட்டீன், கூந்தலை நன்கு வலுவாக்கும். வேஷ்டுமென்றால், ஸ்கிம் மில்க், கொழுப்பு குறைவாக இருக்கும் தயிர் போன்றவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வரலாம்.

தானியங்கள்

தானியங்களில் வைட்டமின் பி5 மற்றும் இனோசிட்டால் போன்றவை இருக்கிறது. ஆகவே தானியங்களால் ஆன ஸ்நாக்ஸ் பாரை உணவில் சாப்பிட்டு வந்தால், மயிர்கால்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, கூந்தலும் நன்கு வளர்ச்சியடையும்.