பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.
தற்போது நிறைய மக்கள் பற்கள் வெள்ளையாக மாறுவதற்கு எவ்வளவோ முயற்சிகளை எடுக்கின்றனர். மேலும் பற்களை வெள்ளையாக்குவதற்கும், வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கும் நிறைய இயற்கை வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, வேப்பங்குச்சி, கடுகு எண்ணெய், உப்பு, எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தினால், சொத்தை பற்கள், துர்நாற்றம் போன்றவற்றை எளிதில் நீக்கிவிடலாம். பற்களும் வெள்ளையாகும்.
பொதுவாக பற்களில் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளே காரணங்களாகின்றன. அதிலும் அவற்றை உண்பதால், பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு, பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தையாகவும், துர்நாற்றம் உள்ளதாகவும் மாற்றுகிறது. ஆகவே அத்தகைய உணவுகளை உண்ட பின், பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுப் பொருட்களை நீக்க டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்துவது நல்லது.
இப்போது அவ்வாறு எந்த உணவுகளை சாப்பிடுவதால், பற்களில் சிக்கி பற்களை ஆரோக்கியமற்றதாக மாற்றுகின்றன என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, அவற்றை சாப்பிட்டப் பின் டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்தி, பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாமா!!!

சீஸ்
உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். இதனை சேர்ப்பதால், அந்த உணவை சாப்பிடும் ஆர்வம் அதிகரிக்கும். அவ்வாறு சேர்க்கும் சீஸை சாப்பிடும் போது, அவை பற்களில் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்குகிறது
சாக்லேட்
அனைவருக்குமே சாக்லேட் மிகவும் பிடிக்கும். சாக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை தங்க வைக்கும். ஆகவே அதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதை சாப்பிட்டப் பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்துவிட வேண்டும்.
பாப்கார்ன்
ஸ்நாக்ஸிலேயே டிவி அல்லது தியேட்டர் சென்று படம் பார்க்கும் போது சாப்பிட பாப்கார்ன் தான் சிறந்ததாக இருக்கும். அவ்வாறு சாப்பிடும் பாப்கார்ன் பற்களுக்கிடையே மாட்டிக் கொள்ளும். அதனை நீக்குவது என்பது கடினமானது. ஆகவே அதனை நீக்க டென்டல் ப்ளாஸ் (dental floss) தான் பயன்படுத்த வேண்டும்.
பிரட்
அதிகமான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ள பிரட் கூட பற்களில் மாட்டும் உணவுப் பொருட்களில் ஒன்று. இது வறட்சியுடன் இருப்பதால், ஈறுகளில் மாட்டிக் கொண்டு, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ்
நூடுல்ஸ் என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதனை எந்த நேரத்தில் கொடுத்தாலும் சாப்பிடுவோம். அத்தகைய நூடுல்ஸ் கூட பற்களில் மாட்டிக் கொண்டு, நீண்ட நேரம் இருந்தால் பாக்டீரியாவை அதிகரிக்கும்.
இறைச்சி
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சியை நன்கு கடித்து இழுக்கும் போது, அதில் உள்ள சிறிய பகுதி கண்டிப்பாக பற்களில் மாட்டிக் கொள்ளும். அவ்வாறு மாட்டிக் கொள்வதை நீக்க முடியாமல் இருக்கும். மேலும் அவை பற்களில் இருப்பதால், அதிக எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே எப்போது அதனை சாப்பிட்டாலும், டென்டல் ப்ளாஸை பயன்படுத்துவது நல்லது.