இன்று பௌர்ணமி

மணக்கால் அய்யம்பேட்டை | 10:23 AM | Best Blogger Tips

சாதாரண நாட்களை விட பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும்.

 பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயமே! பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும். சில விஷயங்கள் மனித அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன. 

ஆன்மீகமோ? அறிவியலோ? இரண்டில் எதுவாக இருந்தாலும் பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப் படுத்துவதாக கூறப்படுகிறது. பௌர்ணமியில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி உங்கள் மனதிலும், வாழ்விலும் ஏற்பட பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
   
சதுர்த்தசி, பௌர்ணமி திதியில் ...
பௌர்ணமியில் விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது.
May be an image of 2 people, monument and temple
பௌர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள். பௌர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பௌர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பௌர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.
பன்னிரு தமிழ் மாத பௌர்ணமி ...
பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள் ளனர்.

இத்தகைய விஸ்வ ரூப மூர்த்திகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்ற பழமையான விருட்சங்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரலாம். மேலும், பௌர்ணமி நாளின் விரதமிருந்து பகல் பொழுதில் செருப்பு அணியாமல் நடந்து சென்று ஆலய தரிசனம் செய்வது பல நன்மைகளை அளிப்பதாக குறிப்பிடப்படுகிறது. 
பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள் ளனர்.
மாசி மாத பௌர்ணமி நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் கிடைக்கும்  பலன்கள்... | Pournami Viratham Benefits
பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பெளர்ணமி நாளில் வீட்டிலும், கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.


May be an image of 8 people, temple and monument
பூஜை செய்யும் முன் வீட்டிலும், வாசலிலும் கோலமிட்டு, மா இலை தோரணம் கட்டி அலங்கரிக்கவும். பூஜை செய்யும் முன் கணவன், மனைவி இருவரும் குளித்துவிட்டு, சந்திரன் உதயம் ஆகும் நேரத்தில் பூஜை செய்ய ஆரம்பிக்கவும். வீட்டிம் பூஜை அறையில் உள்ள கடவுள் சிலை, படங்களுக்கு பூக்களை வைத்து, விளக்கேற்றி பூஜையை தொடங்கலாம்.

பவுர்ணமியில் விரதம் இருப்பது கடன் தொல்லைகள் நீங்க வழிவகுக்கும். இந்நாளில் அம்பிகையை துதித்து விளக்கேற்றி, நெய் கலந்த சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். மேலோங்கி இருக்கும் கடன் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.

திருவண்ணாமலை 
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. 
ஓவ்வொரு பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். 

கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண் டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறிய வர்கள் அனைவரும் மன அமைதி பெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை. 

தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது.

 அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட் டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், என்று அழைக்கப்படுகிறது. 

இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக் காக பல நன்மைகளால் அருள் புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங் களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார் கள்.

நன்றி
 





May be an image of 3 people, temple and text

இனியகாலைவணக்கம் வாழ்கவளமுடன்.✍🏼🌹