எறும்புக்கு வளைந்து வழிவிட்ட சிவபெருமான்!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:18 PM | Best Blogger Tips
 எறும்புக்கு வளைந்து வழிவிட்ட சிவபெருமான்! திருச்சி திருவெறும்பூர்  எறும்பீஸ்வரர் கோயிலின் ஆச்சரியம் | Do you know about the Erumbeeswarar  temple Specialities and ...

எறும்புக்கு வளைந்து வழிவிட்ட சிவபெருமான்! திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலின் ஆச்சரியம்
 
சென்னை: எறும்புக்கு வழிவிட்ட சிவபெருமான் உள்ள கோயில் பற்றி தெரியுமா? திருச்சியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இதன் பின்னணியில் சொல்லப்படும் புராண காரணங்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
 
தாருகாசூரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்திருக்கிறான்.. நாளுக்கு நாள் அவனது அட்டகாசத்தை தேவர்களாலும் இந்திரனாலும் பொறுத்து கொள்ள முடியவில்லை.. அந்த அரக்கனை எதிர்த்து போரிடவும் முடியவில்லை.
 
எறும்பீஸ்வரர் கோயில்
இறுதியில் தாருகன் அவர்களை தோற்கடித்து தேவலோகத்தையே கைப்பற்றி விட்டான்.. இதனால் பயந்துபோன தேவர்கள், பிரம்மனிடம் போய் முறையிட்டனர். பிரம்மன் அவர்களை பூலோகத்திலுள்ள தென் கயிலாயமாகிய திருவெறும்பூருக்கு சென்று இறைவனைப் பூஜிக்கும்படி கட்டளையிட்டார்.
 எறும்பீஸ்வரர் -எறும்புகளுக்கு வழிவிட்ட சிவபெருமான் ..
இதே உருவத்துடன் சென்றால் தாருகன் ஏதாவது செய்துவிடக்கூடும் என்று அச்சமுற்று, எறும்பு உருவம் கொண்டு, திருவெறும்பூருக்கு சென்று, இறைவனை கண்டு தங்கள் குறைகளை சொன்னார்கள்.. உடனே சிவபெருமான், உமா தேவியுடன் காட்சி தந்து, தேவர்களை அங்கேயே சில காலம் தங்கியிருக்கும்படி கூறினார்.. தேவர்களின் தலைவனான இந்திரன் பிற தேவர்களுடன் வந்திருந்து, தினசரி ஆயிரம் கரு நெய்தல் மலர்களால் இறைவனை பூசித்து வந்தான்.
 கற்பக விருட்சம்: திருவெறும்பூர் எறும்பீஸ்வரர்!

தேவர்கள் - சிவலிங்கம்
 
தேவர்களும் இந்திரனும் எறும்பு வடிவம் எடுத்து சிவலிங்கத்தின் மீது ஊர்ந்து ஏறும்போது, ஏற முடியாமல் தவித்தனர். அப்போது சிவபெருமான் லேசாக தலை சாய்த்து சரிந்து வழி கொடுத்தாராம்.. அதாவது சிவபெருமான் தன்னை புற்று வடிவில் மாற்றிக்கொண்டாராம்.. இதன் காரணமாகவே எறும்பீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏