இந்திய ராணுவத்தின் 10 சிறந்த விலைமதிப்பற்ற பொன் மொழிகள்👇

மணக்கால் அய்யம்பேட்டை | 5:01 PM | Best Blogger Tips

உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்  தெரியுமா..?

இதனை,
ஒவ்வொரு இந்தியரும்...

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்...

 1.
  ′′உங்களுக்கு வாழ்நாளின் அசாதாரண சாகசம் என்னவோ...
அதுவே,
எங்களின் அன்றாட வாழ்க்கை′′
- லே-லடாக் நெடுஞ்சாலையில், இந்திய ராணுவம் வைத்துள்ள வாசகம்.

 2.
′′காற்று வீசுவதால் எங்கள் கொடி பறக்கவில்லை...
தன் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரரின் இறுதி மூச்சுடன் பறக்கிறது"
- இந்திய ராணுவம்

 3. 

ABVP | Humble tributes to Captain Vikram Batra, a true embodiment of  courage and patriotism, on his birth anniversary. His fearless  leadership... | Instagram
'′′நான் மூவர்ண கொடியை 'ஏந்தி' கொண்டு...

அல்லது

மூவர்ண கொடியைப் 'போர்த்தி' கொண்டு வருவேன்...

கண்டிப்பாக வருவேன்"

- கேப்டன் விக்ரம் பத்ரா,
இறுதி வீர சக்கரம்.

 4.
′′என் வீரத்தை நிரூபிக்கும் முன் என் மரணம் வந்தால்...

Biography of Captain Manoj Pandey Kargil Hero [PVC] | Kargil War Hero Manoj  Kumar Pandey [in Hindi]
நான் மரணத்தைக் கொல்வேன்...  
என்று சத்தியம் செய்கிறேன்"
- கேப்டன் மனோஜ் குமார் பாண்டே,
பரம் வீர் சக்ரா,
1/11 கோர்க்கா ரைபிள்ஸ்

5.
′′எங்களைப் பெற நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்...
THE LEGENDARY SAM MANEKSHAW - Medals & Ribbons
எங்களைப் பிடிக்க நீங்கள் கூர்மையாக இருக்க வேண்டும்...

ஆனால்...

எங்களை வெல்ல நீங்கள் குழந்தையாக இருக்க வேண்டும்"
- இந்திய ராணுவம்

6.
′′கடவுளே! எங்கள்  'எதிரி கள்' மீது கருணை காட்டுங்கள்...

ஏனென்றால்,

நாங்கள் அதனை அவர்களிடம் காட்ட மாட்டோம்"
- இந்திய ராணுவம்

Indian Army | இந்திய ராணுவம்

7.
′′நம் வாழ்வு தற்செயல், நம் காதல் நம் விருப்பம், நாட்டை பாதுகாக்க கொலை செய்வது நம் தொழில்.
- அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்காக நிரந்தர குழு அமைகிறது.. இனி உயர்  பதவி வகிக்கலாம் | Govt sanctions permanent commission to women officers in  Indian Army - Tamil Oneindia

8.
′′மரணத்திற்கு பயப்படவில்லை' என்று ஒருவர் கூறினால், அவர் ஒன்று பொய்யாக இருக்க வேண்டும்...

Field Marshal Sam Manekshaw.
அல்லது...
அவர் இந்திய ராணுவத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்."
- பீல்ட் மார்ஷல் சாம் மானெக்க்ஷா

9.
′′பயங்கரவாதிகளை மன்னிப்பது கடவுளின் வேலை...
அதற்கு, அவர்களை கடவுளை சந்திக்க வைப்பது எங்கள் வேலை."
- இந்திய ராணுவம்

ராணுவத்தில் பெண்கள் | Women in the indian army

10.
′′நம் நாட்டுக்கு கொடுக்க ஒரே ஒரு உயிர் மட்டுமே உள்ளதே' என்று வருந்துகிறோம்."
- இந்திய ராணுவம்

 ஜெய் ஹிந்த்!🇮🇳
🙏
என்றும் தேசபணியில்
வை.கதிரவன்

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person, smiling and tree  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

தபால்காரர்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:55 PM | Best Blogger Tips

 SunsOut The Village Postman Old Times Puzzle 1000 pc Jigsaw Puzzle - The Village  Postman Old Times Puzzle 1000 pc Jigsaw Puzzle . shop for SunsOut products  in India. | Flipkart.com


ஏரியாவுக்குள் வரும் வரைதான் போஸ்ட்மேனால் சைக்கிளில் அமர்ந்து பெடல் பண்ணி வரமுடியும். அப்புறம ஒவ்வொரு வீடாய் தள்ளிக் கொண்டுதான் வரவேண்டும். 
 
மூன்று வீடு தள்ளி அவர் வருவது கண்ணில் பட்டு விட்டால் போதும்... காய்ந்து கொண்டிருக்கும் துணியை இழுத்து விட்டபடி, காயப் போட்ட மளிகை சாமானை கிளறி விட்டபடி என்று வாசலில் வந்து நின்று விடுவார்கள். ஈஸிச்சேர் தாத்தாவும் படிக்கட்டில் நின்றிருப்பார். 
 
தபால்காரரிடமிருந்து கடிதங்களை யார் வாங்குவது என்பதிலேயே போட்டி நிலவும்.
 A postman connecting the past to the future – Ideascape Communications
"பார்த்து... பார்த்து... கிழிஞ்சிடப்போறது என்பார் அவர்...!!"
 
உறவுகளிடமிருந்தும், நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களுக்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு,
வரவேற்பு இருந்தது அப்போது. 
 Review of Cheran's 'Pokkisham'. | A Writer's Notebook.
ஒன்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்து விட்டால் மகிழ்ச்சி வெள்ளம்தான், திருவிழாதான். 
 
நீ இதைப் படி, நான் அதைப் படிக்கிறேன் என்று பிரித்துக் கொள்வதில் போட்டி. ஆனால், கடைசியில் ஒவ்வொன்றாகப் பிரித்து ஒருவர் வாசிக்க, நடுநடுவே உச் கொட்டிக் கொண்டும் சபாஷ், அச்சச்சோ என்று உணர்ச்சிகளைக் காட்டிக் கொண்டும் மற்றவர்கள் கேட்பது சுகம்.
 
மாலை அலுவலகத்திலிருந்து கணவர் வந்ததும் கைகால் கழுவிக் கொண்டு வர..., வந்து அமர்ந்ததும் அவரும் ஆவலுடன் கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்து படிப்பார். மறுபடி கடிதம் படிக்கும் படலம். 
 
எத்தனை நூறு வீடுகள் இருந்தாலும் அவர்கள் பெயர், சுய விவரங்கள், அவர்கள் தேவை போஸ்ட்மேனுக்கு அத்துபடி.
 
நிறைய வீடுகளில் சந்தோஷங்களையும், சில வீடுகளில் துக்க, வருத்தங்களையும் விநியோகிப்பவர். 
 
ஊரில் எல்லோருக்கும் உறவானவர்.
 Premium Vector | Vector cartoon illustration of postman on cycle
"என்னம்மா... பையனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அடிச்சுட்டாங்க போல..."
 
பொண்ணுக்கு ஜாதகம் வந்ததே...!! பொருந்திடுச்சா? 
 Cheran Still 3 - Tamil Movie Pokkisham Stills
பையன் வீட்டுக்காரர்கள் என்ன பதில் எழுதி இருக்காங்க...?? 
 
"மருமகளுக்கு குழந்தை பொறந்துடுச்சாமா?"
 
"சார் எப்போ வர்றாராம்? இந்த வாரமாவது லீவு கிடைச்சுதாமா?"
 
"உங்களுக்கு இன்னிக்கி ஒண்ணும் லெட்டர் வரலை பெரியம்மா..." சங்கடத்துடன்தான் ஒலிக்கும் அவர் குரல். பெரியம்மா முகத்தில் குவியும் ஏமாற்றம் காணப் பிடிக்காமல் தலைகுனிந்து அடுத்த வீட்டுக்கு நகர்வார்.
 
சுப செய்திகள் என்றால் முதல் ஸ்வீட் (ஒரு ஸ்பூன் சர்க்கரை) அவருக்கு தான். 
 
எங்கள் வீட்டில் ரெகுலராக மோரோ, காபியோ அவருக்காக காத்துக்கொண்டிருக்கும். சில விசேஷ நாட்களில் சாப்பாடு, பட்சணங்களும் உண்டு. பொங்கலுக்கு அவருக்கும் புது வேஷ்டி துண்டு உண்டு. 
 
பெரும்பாலான வீடுகளில் வெகு தூரத்தில் (பட்டணம்) வேலை பார்க்கும் தங்கள் பிள்ளை அனுப்பும் மணியார்டர் பணத்தை வாங்கும் போது மகனையே தொடும் உணர்வில் கண் கலங்கும் பெற்றோர்கள். 
 Cheran's <I>Pokkisham</I>, an ode to pure love
அதற்கு தனியாக போஸ்ட்மேனுக்கு
டிப்ஸும் உண்டு. 
 
நிறைய வீடுகளில் பதில் எழுதும் லெட்டர்களும் அவரிடமே கொடுக்கப்படும்.
 
மே மாதங்களில் பள்ளிப் பிள்ளைகளுக்கு அவர் பெரிய பூச்சாண்டி! ரிசல்ட் கார்ட் கொண்டு வரும் பூதம்!
 
பொங்கல் சீசனில்
 Padmapriya reads the love letter. #shorts #pokkisham #cheran #padmapriya  #rajesh - YouTube
கிலோ கணக்கில் பொங்கல் வாழ்த்துக்களை சுமந்து விநியோகிப்பதற்கு அவர் படும் பாடு அப்பப்பா... 
 
ஆனந்த அனுபவங்களை அள்ளித் தந்த சொந்தமாய், நட்பாய்,
 
பாலமாய், இன்னும் பலவாய் அருமையான ஓர் துணையாய் 
 
அஞ்சல் துறை. 
 
எளிமையான இனிமையான வசந்தங்களை இன்று நாம் இழந்திருக்கிறோம். 
 
இழந்தால் தானே அருமை தெரிகிறது...!!
 
இந்திய தபால் துறை, 
 
இந்த ஆண்டு அக்டோபரில், தனது 170 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

சிந்தனையும் பொறுமையும் நீண்ட தூரம்....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:17 AM | Best Blogger Tips

 May be a doodle of snake

பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்குத் தெரியாது.  அதுபோலவே அந்த ஆணின் முதுகைப் பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்தப் பெண்ணுக்கும் தெரியாது.

அந்தப் பெண் யோசிக்கின்றாள்: “ நான் கீழே விழப் போகின்றேன், என்னைப் பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது,  இந்த ஆண்
நன்றாகத் தானே இருக்கின்றான்.. அவன் தன்னுடைய வலிமையைத் திரட்டி என்னை மேலே தூக்கலாம் தானே” என்று.

ஆனால் அந்த ஆண் யோசிக்கின்றான்: “மிகுந்த வலியோடு கூட என் வலிமையெல்லாம் திரட்டி நான்
உன்னைத் தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன். ஆனால் நீ ஏன் மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை”

இந்தப் படம் சொல்லும் நீதி: எப்போதுமே உங்களால்
மற்றவர்களுடைய அழுத்தங்களை, பிரச்சனைகளைப் பார்க்க முடியாது. அதுபோலவே மற்றவர்களாலும் உங்களுக்குள் என்ன வலி (துன்பம்) இருக்கு என்பதை காண,உணர முடியாது.

இது வாழ்க்கை, வேலை, குடும்பம், நண்பர்கள், உணர்வுகள் எப்படியாக இருந்தாலும் ,
ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

இன்னும் வித்தியாசமாக  சிந்திக்கவும்
பொறுமையுடன் கூடிய தெளிவான தொடர்பாடலையும் கற்றுக் கொள்ளல் வேண்டும். சிந்தனையும் பொறுமையும் நீண்ட தூரம் செல்லக் கூடியது. 



🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, smiling and tree 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹

கந்த சஷ்டி விழா ஆரம்பம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:55 PM | Best Blogger Tips

 kandha sashti viratham 2024 date : கந்தசஷ்டி விழா 2024 எப்போது ஆரம்பம் ?  யாரெல்லாம் விரதம் இருக்கலாம் ?

இன்று குரோதி வருடம் ஐப்பசி மாதம் 16ம் தேதி,
02.11.2024 சனிக்கிழமை

 விசாகம் நட்சத்திரம்

இன்று முருகப்பெருமான் வழிபாடு சிறப்பு

இன்று  02.11.2024  கந்த சஷ்டி விழா ஆரம்பம்
(02.11.2024 முதல் 08.11.2024 வரை)
sashti vrat 2024 july date : வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் என்ன  கிடைக்கும் ?
🌹கந்தசஷ்டி விழா  கொண்டாடப்படுவதன் காரணம் என்ன?

🌹புராணங்கள் என்ன சொல்கின்றன?

ஐப்பசி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி வரையிலான 6 நாட் களும் கந்தசஷ்டி விழா அல்லது கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிப ட்டால் வேண்டியது கிடைக்கும். முருகப் பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு, வதம் செய்த 6 நாட்களை தான் நாம் கந்த சஷ்டி விழாவாக கொண்டாடுவதாக சொல்கிறோம்.

ஆனால் சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி ஆரம்பம்... புகழ்பெற்ற மயிலம் முருகன் கோயிலின் சிறப்புகள் என்ன? | Kanda  Sashti: The glory of Sri Mailam Murugan Temple - Vikatan
இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழி பட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால் அந்த கந்தனே குழந்தையாக பிறப்பான் என்பது நம்பிக்கை.

🌹மும்மூர்த்திகளின் அம்சம் :

🔹முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர்.

🔹ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர்.

🔹அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர்.
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நடக்கும் கந்த சஷ்டி விழா தேரோட்டம் | sikkal  singaravelan temple kantha sasti Therottam
🔹சூரனை சம்ஹாரம் செய்து, தேவர்களை காத்தபடியால் விஷ்ணுவின் காத்தல் தொழிலையும் செய்தார்.

இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப் பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

🌹கந்தசஷ்டி கொண்டாடப்படுவது ஏன்?

முருகப் பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு, வதம் செய்த 6 நாட்களை தான்  கந்தசஷ்டி விழாவாக கொண்டாடுவதாக சொல்கிறோம். ஆனால் சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்தசஷ் டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண் டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

🌹முதல் காரணம் :

ஒரு சமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மை க்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி ஆறு நாட்கள் நடத்தினர்.

யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக் களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட முருகப் பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

🌹இரண்டாவது காரணம் :

கந்தபுராணத்தின் படி, கச்சியப்ப சிவாச்சாரி யார், முருகனின் அருள் வேண்டி ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் கும்பத் தில் முருகனை எழுந்தருள செய்து நோன்பு இருந்தார்.
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை : அக்.25 -சு கந்தசஷ்டி ஆரம்பம்
தேவர்களும், அசுரங்களை வெல்லும் சக்தி யை பெற முருகப் பெருமானை நினைத்து 6 நாட்கள் வழிபட்டனர். முருகனும் அவர்களுக் கு அருள்செய்தார். இதனை நினை வுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவா சையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

🌹சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்?

காசியப்ப முனிவர், மாயை என்ற தம்பதியரு க்கு பிறந்தவன் சூரபத்மன். இவர் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணா ல் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான்.

இந்த வரத்தால் தேவர்களையும், நல்லுயிர்க ளையும் துன்புறுத்தினான் சூரபத்மன். இதை தடுக்க அவதாரம் எடுத்த முருகன், பார்வதியி டம் வேலை பெற்று, சூரபத்மனை போரில் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய கோவில்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்.
Kandha Sashti Vizha,கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதன் காரணம் என்ன? புராணங்கள்  என்ன சொல்கின்றன? - real reason for celebrating kandha sashti viratham -  Samayam Tamil
🌹ஓம் சரவண பவ...


இனிய  வணக்கம்

🌷 🌷🌷 🌷  May be an image of 8 people, temple and text 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹