#EVMMachine Part 1
மகராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பூத் ஏஜெண்டுகளுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரிடம் உங்கள் தலைவர்கள், EVM Machineல் பிரச்சினை என்கிறார்களே, நீங்கள் பல தேர்தல்களில் பூத் ஏஜெண்டாக இருப்பவர், உங்கள் கருத்து என்ன என்று கேட்டவுடன் பொரிந்து தள்ளிவிட்டார். அவர் அரைமணி நேரம் எனக்கு விளக்கியதை உங்களுக்காக சுருக்கமாக.
- முதலாவதாக தேர்தல் என முடிவெடுத்தவுடன் தேர்தல் ஆணையம் எத்தணை EVM Machine தேவைப்படும் என ஒரு கணக்கு எடுப்பார்கள். அந்த சமயத்தில் வெவ்வேறு மாநிலங்களில் இவை இருக்கும். ஆனால் அவற்றின் எண்கள் கம்யுட்டர் டேட்டா பேஸில் இருக்கும்.
- பிறகு ஆட்டோமேடிக் Random access என்ற முறையில் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளவற்றை மிக்ஸ் செய்து, ஒரு லிஸ்ட்டை கம்ப்யுட்டர் உருவாக்கும். மெஷின் எண், இருக்கும் லொகேஷனின் குறியீட்டுடன்.
- இந்த லிஸ்ட் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து இவை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட ஸ்டோர்களுக்கு, தேவையான எண்ணிக்கைக்கு ஏற்ப அனுப்பப் படும்.
- இவை வந்தவுடன் அதில் உள்ள டேட்டாக்கள் அழிக்கப்பட்டதா என்பதை செக் செய்வார்கள். பிறகு அந்தந்த தொகுதிக்கு என மெஷின்களை பிரிப்பார்கள்.
- இவை இந்த தொகுதியில் உள்ள குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பப் படும். முதலில் தேவையான எண்ணிக்கை (ரிசர்வ் உட்பட்) வந்ததா என்பதை எந்த தொகுதி கலெக்டர் போன்ற அதிகாரிகள் முன்னிலையில் சரிபார்ப்பார்கள். பிறகு அந்த தொகுதியின் வேட்பாளர் லிஸ்டுக்கு ஏற்ப செட் செய்வார்கள்.
- இதற்கு பிறகு அனைத்து வேட்பாளர்களுக்கும் நேரடியாக சரிபார்க்க வரச் சொல்வார்கள். அவர்கள் முன்னிலையில் அனைத்து மெஷின்களும் 20-25 அல்லது வேட்பாளர் அல்லது அவருடைய ரெப்ரசென்டேடிவ் திருப்தி அடையும் வரை செக் செய்வார்கள்.
- இதற்கு பிறகு அவர்கள் முன்னிலையில் அனைத்து டேட்டாக்களும் மீண்டும் அழிக்கப்படும்.
- பிறகு மீண்டும் ரேன்டமாக சில மெஷின்களை மறுபடியும் செக் செய்வார்கள். மறுபடியும் டேட்டாக்களை அழிப்பார்கள்.
- இதற்கு பிறகு குறிப்பிட்ட பூத்துகளுக்கு திட்டமிட்டபடி அனுப்பி வைப்பார்கள்.
- வாக்களிக்கும் நாள் காலையில் ஆரம்பிக்கும் முன்னர், பூத் ஏஜென்ட் முன்னர் மீண்டும் 5-10 செக் செய்வார்கள். டேட்டாக்கள் மீண்டும் அழிக்கப் படும்.
- இதற்கு பூத் ஏஜெண்டுகள் முன்னர் பிறகு சீல் வைக்கப்படும். அதில் அனைவரும் கையெழுத்து இடுவார்கள்.
- இதற்கு பிறகுதான் பொதுமக்கள் வாக்களிக்க அந்த மெஷின்கள் உபயோகப் படுத்தப் படும். ஏதாவது கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் அந்த மெசின் அப்புறப் படுத்தப் படும்.
- வாக்களித்து முடிந்தவுடன் அல்லது மெஷினில் எத்தணை வாக்கு அளிக்க முடியுமோ அது முடிந்தவுடன் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில், அவற்றினை மெஷின் மற்றும் பிரிண்டர் நம்பர் சரிபார்க்கப் பட்டு மீண்டும் சீல் வைப்பார்கள்.
- அன்று இரவு இவை அனைத்தும் கவுண்டிங் சென்டருக்கு, சீல் வைத்த வண்டியில், ஏஜெண்டுகள் முன்னிலையில் அனுப்பபடும். பெரும்பாலும் ஏஜெண்டுகளும் அந்த வண்டியுடன் செல்லும் வண்டியில் செல்வார்கள்.
- கவுண்டிங் சென்டரில் மீண்டும் அந்தந்த பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில், வண்டியின் சீல் அகற்றப் பட்டு, அவை கவுண்டிங் சென்டரின் குறிப்பிட்ட தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் பூத் வாரியாக தனிதனியாக வைக்கப் படும். அந்த அறை சீல் வைக்கப் படும்.
- பிறகு கவுண்டிங் சென்டர் சீல் வைக்கப்படும். சென்டருக்கு வெளியே ஏஜெண்டுகள் தங்க அனுமதி உண்டு.
- கவுண்டிங் நாளன்று காலை மீண்டும் ஏஜெண்டுகள் முன்னிலையில் சென்டர் சீல், பூத் அறை சீல், மெஷின்சீல் அகற்றப்பட்டு, எண்ணிக்கை துவங்கும்.
- ஒரு பூத்துக்கு 10 மெஷின் அளவில் எண்ணிக்கை மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்லிப் எண்ணிக்கை சரிபார்க்கப் படும்.
- கொஞ்சம் சந்தேகம் வந்தாலும், எழுப்பினாலும் மீண்டும் அவை சரிபார்க்கப் படும். மேலும் ஒரு சில மெஷின்கள் பிரிண்டிங் சரிபார்க்கப்படும். இதனை ஏற்று ஏஜெண்டுகள் கையெழுத்திட வேண்டும்.
- மொத்த பூத்தின் எண்ணிக்கை முடிந்தவுடன், மொத்த தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் சரிபார்ப்பார்கள். வாக்காளர் லிஸ்ட் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்க கூடாது என்பது எழுதப் படாதவிதி.
- சந்தேகம் வந்தால் வார்ட், பூத் லிஸ்டுடன் கூட ஒப்பிட்டு பார்ப்பார்கள். இந்த ஒவ்வொரு நடவடிக்கையும் ஏஜெண்டுகள் முன்னிலையில் நடைபெற்று அவர்கள் கையெழுத்திடப்படும்.
- கடைசியாக மொத்த எண்ணிக்கை முடிந்தவுடன், மொத்த தொகுதி வேட்பாளர் எண்ணிக்கை, வாக்கு சதவிகிதம், மொத்த வேட்பாளர்களின் வாக்குகள், சதவிகிதம், வெற்றி பெற்றவர் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு, ஏஜெண்ட் மற்றும் வேட்பாளர்களின் கையெழுத்து வாங்கப்படும்.
- கலெக்டர் அல்லது DM மற்றும் தேர்தல் அதிகாரிகள் அனைவரும் சரிபார்த்து, கையெழுத்து இட்டபின்னர், வேட்பாளர்களிடம் சொல்லி விட்டு, பிறகு மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப் படும்.
- அங்கே சில அதிகாரிகள், கட்சி பிரதிநிதிகள் அதனை சரிபார்த்து கையெழுத்திட்ட பின்னரே, தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
நான் சுருக்கமாக எழுத முயன்றும் பெரிதாகி விட்டது. தேர்தல் பணி செய்யும் அதிகாரிகள், ஏஜெண்டுகளை கேட்டு உண்மையை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அடுத்த பதிவில் இதில் குற்றச்சாட்டு எழும்புவது குறித்து அவர் கூறியதை சொல்கிறேன்.
என்னுடைய ஒரே வேண்டுகோள், இதனை பாமரர்களும் உணரும் வகையில் பரப்புங்கள். உங்கள் பெயரில் கூட காப்பி பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.
சும்மா லைக் போடவேண்டாம். ஆஹா ஓஹோ என புகழ வேண்டாம். எதிர் கருத்துகள் வந்தால் கண்டிப்பாக எனக்கு தெரியப்படுத்துங்கள்.
நம்பிக்கையாக உள்ளேன், இது அனைவரையும் சென்றடையும் என்று. இந்த போலியான பரப்புரைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். எவ்வளவு நாள்தான் இப்படி மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்? அவர்கள் கட்சி தொண்டர்களை முட்டாளாக்கிக் கொண்டு இருப்பார்கள்?
ஒவ்வொரு வாக்களிக்கும் தமிழருக்கும் இது போய் சேர வேண்டும்.
அடுத்த பதிவில் என் காங்கிரஸ் நண்பர் அனுமதித்தால் அவர் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிடுகிறேன்.
நன்றி!
ஜெய் ஹிந்த்!
திரு. Sugumaran Babu Jain அவர்களின் அருமையான பதிவு 🙏
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏