ரயிலில் சாய்வு கோடுகள் இருக்கும் ஏன் ...?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:45 AM | Best Blogger Tips

 May be an image of train and railway

இந்தியாவில் ஓடும் ரயில்களில் பெட்டிகளில் கடைசியில் படத்தில் காண்பது போன்ற சாய்வு கோடுகள் இருக்கும் ஏன் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு என்ன அதர்த்தம் என உங்களுக்கு தெரியுமா?
 May be an image of 1 person, train and railway
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் வாழ்வில் ஒருமுறையாவது ரயிலில் பயணித்திருப்பார்கள் அந்த அளவிற்கு ரயில் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது.
 May be an image of train, railway and text
 அடிக்கடி ரயிலில் பயணித்திருப்பவர்களுக்குக் கூட ரயிலில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள் அல்லது குறியீடுகளுக்கான அர்த்தம் தெரியாமல் இருக்கும். அப்படியான ஒருவிஷயம் தான் ரயில் பெட்டிகளில் கடைசியில் ஜன்னலுக்கு மேல் உள்ள மஞ்சள் நிற கோடுகள் இந்த கோடுகள் எதைக் குறிக்கிறது என்பது பலருக்குத் தெரியாது இந்தியாவில் 1853ம் ஆண்டு ஏப் 16ம் தேதி துவங்கப்பட்ட ரயில் சேவை 1951ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது இன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது 
 May be an image of train and text
அப்படி ஒரு நாள் வந்த மாற்றம் தான் இந்த மஞ்சள் நிற கோடுகள் பொதுவாக இந்தியாவில் விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக இருக்கும் ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன் பதிவில்லாத பெட்டிகளாக இருக்கும். இந்த நீல நிற பெட்டியில் உள்ள நான்கு முனைகளில் உள்ள கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும். 
 May be an image of 1 person and train
இந்த கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என அர்த்தம் முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது. பிளாட்பாராத்தில் பயணிகள் வரும் போது முன்பதிவில்லாத பெட்டியை எளிதாக கண்டு பிடிக்க இது இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது. 
 May be an image of train and railway
அதே போலச் சென்னையில் ஒடும் மின்சார ரயிலிலும் இது போன்ற கோடுகள் இருக்கும், அந்த கோடுகள் முதல் வகுப்பு பெண்களுக்கான ரயில் பெட்டிகளைக் குறிக்கிறது. இந்த தகவல் பலருக்குத் தெரியாது.