முக்தி என்பது பருப் பொருளல்ல !!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:57 PM | Best Blogger Tips


May be an image of tree

கேள்வி - எத்தனை பிறவி எடுத்தோம் என்பதும் தெரியாது, இனி எத்தனை பிறவி எடுப்போம் என்பதும் தெரியாது, முக்தி முக்தி என்று சொல்கிறார்கள் தவிர அதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. பிறகு எதை நோக்கம் என்று கொள்வது ?

 முக்தி என்பது பருப் பொருளல்ல !! கண்களால் காண்பதற்கு. பரம்பொருள் நிலைதான் முக்தி. எத்தனை பிறவி எடுக்க வேண்டும் என்று ஏன் கவலைப்படுகிறீர்கள் ? பிறவி எடுக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கவலைப்படுங்கள் !! அதற்காக உங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்துங்கள். அதுவே உங்கள் நோக்கமாக இருக்கட்டும். கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பை வீண் கவலைகளால் இழந்து விடாதீர்கள்.

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?

அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?

முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?

மூடனாயடி யேனும றிந்திலேன்,

இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?

என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்

வேதாவும் கைசலித்து விட்டானே

மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற

எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்

கையாறவும் அடியேன் கால் ஆறவும்...

இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே ?

கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே !

என்கிறார் பட்டினத்தார். ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்... மனிதன் செய்கின்ற எச்செயலாக இருந்தாலும் சரி, அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது நான் யார் என்கிற தேடல்தான். நான் யார் என்கிற கேள்வி ஜீவனிடத்தில் இருக்கும் வரை பிறவி நீண்டு கொண்டேதான் போகும்.

ரமண மகரிஷி சொல்வதைப் போல ''எதுவரை மனதில் விஷய வாசனைகள் இருக்கின்றனவோ, அது வரை நான் யார் என்ற கேள்வியும் ஜீவனிடத்தில் இருந்து கொண்டுதானிருக்கும். குப்பையைக் கூட்டித் தள்ளுவது போல அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டால் சொரூபத்தை அறியலாம்'' என்பார்.

அதுதான் இதற்கு முடிவு. வேறு எவ்வழியுமில்லை. எந்த வழியில் வந்தாலும் இது வழியாகத்தான் உள்ளே நுழைய முடியும். உள்ளே நுழைந்து விட்டால் பிறகு பிறவி என்பதே கிடையாது.

 

  ·

 Thanks & Copy from

மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர்.