பணம் கொட்டும் காமதேனு போன்ற காஞ்சனாவை கல்யாணம் என்ற பந்தத்தில் ஈடுபடுத்தி, வரும் வருமானத்தை இழக்க
பெற்றோர்களுக்கும் சரி உற்றோர்களுக்கும் சரி மனசு வரவில்லை. கல்யாண பேச்சு வரும்போதெல்லாம் ‛என்ன அவசரம்...
பார்த்துக் கொள்ளலாம்' என்று இழுத்துக் கொண்டே சென்றனர், ஒரு கட்டத்தில் காஞ்சனா கல்யாண வயதை எல்லாம்
தாண்டிவிட்டார் அதன்பிறகு அவருக்கே கல்யாண ஆசை வரவில்லை திருமணம் புரிந்து கொள்ளாமலே இருந்துவிட்டார்.
இவர் சம்பாதித்து பணம் கொடுக்கும் போதெல்லாம்,‛ உன் பணத்திலேதான் இந்த இடத்தை வாங்கியிருக்கிறோம்' என்று சொன்னவர்கள், சம்பாதிப்பதற்காக ஒடியது போதும் இனி ஒரு வீட்டைக்கட்டி கொஞ்சம் ...கொஞ்சம் ஒய்வெடுப்போம் என் இடத்தைக் கொடுங்கள் என்று காஞ்சனா கேட்டபோது,‛எது உன் இடம்?' என்று கேட்டு தங்கள் கோரமுகத்தைக் காட்டியுள்ளனர். அதிர்ந்து போன காஞ்சனாவிற்கு ஆதரவாக இருந்தது தங்கை கிரிஜாவும், திருமலை பெருமாளும்தான் .
சம்பாதித்த பணத்தை இழந்தது கூட காஞ்சானாவிற்கு பெரிதாக தெரியவில்லை ஆனால் தன்னை...
அநியாயமாக ஏமாற்றியதைத்தான் தாங்கமுடியவில்லை...நியாயம் கேட்டு சில முறை கோர்ட்டிற்கும் பல முறை திருமலைக்குக்கும் சென்று முறையிட்டுள்ளார் திருமலைக்கு...
போகும்போதெல்லாம் மலைப்பாதை வழியாக வாகனத்தில் செல்லாமல் கீழ்திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிற்கு நடந்தேதான் செல்வார்.பெருமாளே இந்த வழக்கில் ஜெயித்து என்...சொத்து அல்ல உன் சொத்து என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்....
கடைசியில் நியாயம் வென்றது சென்னையில் உள்ள இவரது சொத்து இவருக்கே திரும்ப கிடைத்தது...
எல்லாம் பெருமாள் செய்த மாயம் என்றெண்ணிய காஞ்சானா தான் பெருமாளுக்கு கொடுத்த வாக்குப்படி...
திநகர் ஜிஎன் ெஷட்டி தெருவில் உள்ள ஆறு கிரவுண்டு நிலத்தை தானமாக பெருமாள் கோவிலுக்கு...
எழுதிக்கொடுத்துவிட்டார் அதன் மதிப்பு நாற்பது கோடி என்றும் இல்லையில்லை இன்றைக்கு அது எண்பது கோடி ரூபாய் பெறும் என்றும் கூறப்படுகிறது....
பெருமாளின் துணைவியாரான பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்போவதாக வந்த செய்தி இன்னும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
கடந்த இரண்டு வருடங்களாக கட்டப்பட்டு வந்த கோவிலின் அழகை அமைப்பை அவ்வப்போது வந்து பார்த்து மகிழ்ந்திருந்த காஞ்சனா கும்பாபிேஷகத்தின் போது சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்....
மிச்சமிருக்கும் வாழ்க்கையை வாழ போதுமான அன்பும் ஆதரவும் பணமும் குறைவின்றி இருக்கிறது நாளும் பெருமாள் மற்றும் தாயாரின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் திருவடி போய்ச் சேர்வதுதான் இனி என்
நோக்கம் என்று பழுத்த ஆன்மீகவாதியாக பேசுகிறார்.
நன்றி இணையம்