தைப்பூசம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:59 AM | Best Blogger Tips

 May be an image of 2 people and temple

 

முருகப்பெருமானுக்கு உகந்த

#தைப்பூசம்_சிறப்புபதிவு

May be an image of temple May be an image of temple

முருகன் வழிபாடு தமிழ்ச்சமூகத்தின் தொன்மையானவழிபாடு. சங்க இலக்கியத்திலேயெ முருகன் வழிபாடு பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. தொன்றுதொட்டு பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பூச நாளில் 'வேலன் வெறியாட்டு' என்ற முருக வழிபாடு, ஆண், பெண் என்ற இருபாலரும் வேல் பிடித்து ஆடிய செய்திகளை சங்கத் தமிழ் தகவல்கள் கூறுகின்றன. அத்தகைய பழந்தமிழ்த் திருவிழாவான தைப்பூசத்தின் மகத்துவங்கள் குறித்த இங்கு தியானிப்போம்.

தைப்பூசம் மிகவும் சுபிட்சமான நாள் என்பது நம்பிக்கை. எனவே அன்று தொடங்கும் நல்ல காரியங்கள் எதுவானாலும் சிறந்த பலனைக் கொடுக்கும் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.

பூச நன்னாளில் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே உபவாசம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம். முருகனின் புகழ் பாடும் பாடல்களை அன்று முழுவதும் பாடுவது சிறந்த பலன்களை அளிக்கும்.

முருகன் ஆண்டிக்கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் போது அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக, ஞானவேல் வழங்கிய திருநாள் தான் தைப்பூச திருநாள் ஆகும். இந்த ஆண்டு வரும் ஜனவரி 25 ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.

தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. இது கேரளாவில் தைப்பூயம் (തൈപൂയം) என்று அழைக்கப்படுகிறது.

தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, தேவர்களை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை அனுகாது என்பது நிச்சயம்.

நாம் அனைவருமே இறைவனால் படைக்கப்பட்ட பொம்மைகள். அவன் ஆட்டுவிக்கும் தன்மைக்கு ஏற்பதான் நாம் ஆடவேண்டுமே தவிர, நம் இஷ்டத்திற்கு ஆட ஆரம்பித்ததால், அவ்வளவு தான், இறைவன் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் மேலான தேவர்களுக்கும், முனிவர்கள், ரிஷிகளுக்குமே மிகச் சரியாகப் பொருந்தும்.

எப்பொழுதெல்லாம், கடவுள் இருப்பதையே மறந்து தேவலோக வாசிகளான தேவர்கள் தாங்கள் தான் பெரியவர்கள், தங்களை மிஞ்சிய சக்தி ஏதும் கிடையாது, என்ற நினைப்பில் அளவுக்கு அதிகமாக மமதையில் திளைக்கிறார்களோ, அப்போதெல்லாம், அவர்களுக்கு புத்திமதி சொல்வதற்காக, மறுபக்கம் ஏதாவது ஒரு திருவிளையாடலை நடத்தி அவர்களை நல்வழிப்படுத்துவதுண்டு.

தேவர்களின் குணநலன்களை நன்கு அறிந்த அசுரர்களும் அவ்வப்போது, தேவர்களுடன் போரிட்டு, அவர்களை இந்திரலோகத்தில் இருந்து துரத்தி விட்டு, அதை தாங்கள் கைப்பற்றி ஆட்சி செய்வதுண்டு. தேவர்களோ, அசுரர்களை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்து கொள்வார்கள். கூடவே தங்களை காப்பாற்ற வேண்டும் என்று முதலில் பிரம்ம தேவரை அனுகி கதறுவார்கள். பிரம்மாவும், என்னால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் ஸ்ரீமன் நாராயணனை அனுகி ஐடியா கேளுங்கள் என்று ஒதுங்கிக் கொள்வார்.

படையெடுத்து வந்தவர்கள் பட்டபாடு

தேவர்களும் வேறு வழியில்லாமல், ஸ்ரீமன் நாராயணனை நாடி, அசுரர்களின் கொடுமையிலிருந்து தங்களை காக்க வேண்டும் என்று மன்றாடுவார்கள். ஆனால், ஸ்ரீமன் நாராயணனோ, என்னால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் எல்லாம் எல்ல ஈசனையே நாடி அவரை சரணாகதி அடையுங்கள். அவர் உங்களுக்கு நல்வழி காட்டுவார் என்று அவரும் ஒதுங்கிக் கொள்வார். இறுதியில் எம்பெருமான் ஈசனை நாடி தங்களை காத்தருள வேண்டும் என்று சரணடைவார்கள். வேறு வழியில்லாமல், ஈசனும் தேவர்களை காத்தருள, திருவிளையாடலை நடத்தி சுபம் போட்டு முடித்து வைப்பார். இது மெகா சீரியல் போல் தொடர்ந்து நடக்கும் விளையாட்டாகும்.

தைப்பூச திருவிழா உருவான விதமும் அப்படித்தான். என்னதான் தேவர்களும் அசுரர்களும் சகோதரர்களாக இருந்தாலும், அசுரர்கள் அதிக பலம் பெற்றவர்களாக இருந்ததால், அவர்களை எதிர்த்து தேவர்கள் போரிட முடியவில்லை. என்ன தான் போரிட்டு அசுரர்களை அழித்துக்கொண்டே வந்தாலும், திரும்பத் திரும்ப வந்துகொண்ட இருந்தனர். இதனால் தேவர்கள் களைத்துபோய்விட்டனர்.

தங்களால் தேவர்களை எதிர்த்து வெல்ல முடியாது என்று மூளைக்கு உறைத்த உடனே, தங்களை வழிநடத்தவும், அசுரர்களுக்கு எதிரான போரில் தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஒரு தலைவனை உருவாக்கு தரவேண்டும் என்று எம்பெருமான் ஈசனிடம் முறையிட்டனர். முக்காலமும் உணர்ந்த எம்பெருமான், தேவர்களின் மனக்குறையை நிவர்த்தி செய்யவேண்டி, தன்னுடைய சக்தியில் இருந்து உருவாக்கிய அவதாரம் தான் கருணைக்கடலான கந்தவேல்.

சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்படுத்திய ஆறு தீப்பொறிகளையும், சரவணப்பொய்கையில் விழுமாறு செய்தார். சரவணப்பொய்கையில் விழுந்த ஆறு தீப்பொறிகளும் அழகிய ஆறு குழந்தைகளாக உருமாறின. உடனே அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்தனர். கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கந்தன், கார்த்திகேயன் என்று அழைக்கப்பட்டார்.

கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த கார்த்திகேயனை, அன்னை பார்வதி தேவியார் சேர்த்து அனைத்து ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கினார். ஆறு முகங்களையும் ஒன்றாக்கியதால் முருகன் என்றழைக்கப்படுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் போது அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக, ஞானவேல் வழங்கிய திருநாள் தான் தைப்பூச திருநாள் ஆகும். இதன் காரணமாகவே, அறுபடைவீடுகளில், மற்ற இடங்களை விட , பழனி மலையில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகளுள்ளன. குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தபட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசதை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடத்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

முருகன் தமிழ்க்கடவுள் ஆவார். முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.

#பழனி:

May be an image of temple

பழனி (திருவாவினன்குடி - சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.

அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.

பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

மயில் காவடி - மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

#திருச்செந்தூர்:

May be an image of temple

கடற்கரை தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதையாத்திரையாக செந்தூர் நோக்கி படையெடுக்கின்றனர். பெரும்பாலோனோர் மாட்டு வண்டி அல்லது டெம்போ வண்டி பிடித்து பாடல் கட்டி கூட்டம் கூட்டமாக நடந்து வருகிறனர். வண்டியை மின் விளக்குகளால் அலங்கரித்து முருகப்பெருமானை மலர்களால் அலங்கரித்து வண்டியிலேற்றி வண்டி முன் செல்ல விரதமிருந்தவர்கள் பின்னால் நடந்து வருகின்றனர்.ஆடலும் பாடலுமாய் திருச்செந்தூர் நோக்கி விரைகின்றனர்.

கீழ்க்காணும் காவடிகள் இங்கே சிறப்பு வாய்ந்தவை

மயில் காவடி - மயிலிறகை வைத்து செய்வது

சந்தன காவடி - உடம்பு முழுவதும் சந்தனம் பூசி வருதல்

சர்ப காவடி - நல்ல பாம்பை இறைவனுக்கு அர்பணிப்பது

சேவற் காவடி - சேவலை இறைவனுக்கு அர்பணிப்பது

அன்னக் காவடி - இறைவனுக்கு சோறு படைத்தல்

வேல் காவடி - இறைவனுக்கு வேல் கொடுத்தல்

பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

வாள் காவடி - இறைவனுக்கு வாள் பரிசளித்தல்

விளக்கு காவடி - விளக்கு ஏந்தி வருதல்

May be an image of temple

#வடலூரில் (இந்தியா) தைப்பூசம்:

கடலூர் மாவட்டம், வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள். காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.

#ஈழத்தில் தைப்பூசம்:

May be an image of 5 people and temple

தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

#மலேசியாவில் தைப்பூசம்:

May be an image of temple and Batu Caves

1.#பத்துமலை முருகன் கோவில்

May be an image of flute and temple

மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது. இது ஒரு மலைக்கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலான மலை இது. வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள்.May be an image of 1 person and temple

2.#பினாங்கு தைப்பூசம்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

3.#ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியன் கோவில்

மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .

#சிங்கப்பூரில் தைப்பூசம்

சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

#மொரீஷியசில் தைப்பூசம்

சுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.

#இரேயூனியன் ரீயூனியன் தைப்பூசம்:

காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.

#தென்னாப்பிரிக்கா தைப்பூசம்

தைப்பூசத் திருவிழா காவடி விழா டர்பன் (கிளேர்வுட் ஸ்ரீ சிவா சூப்ரமோனியர் கோயில்) மற்றும் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரங்களில் கொண்டாடப்படுகிறது.

#பிஜியில் தைப்பூசம்:

பிஜியில், நாடி என்னுமிடத்தில் அமைந்துள்ள உள்ள ஸ்ரீ சிவா சுப்ரமண்ய சுவாமி கோவிலில் தைபுசம் விழா கொண்டாடப்படுகிறது.

#ஆஸ்திரேலியாவில் (விக்டோரியா) தைப்பூசம்

இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். பிரசாதம் மற்றும் அன்னதானம் என்று எல்லாம் உண்டு.

தைப்பூச நன்னாளில் வேல் வழிபாடு செய்வது மிகுந்த நன்மைகளை அளிக்கும் என்பார்கள். வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் பூச நாளில் மகா ருத்ர அபிஷேகம் செய்வது சிறந்தது.

தைப்பூச நன்னாளில் திருப்புகழ் மகா மந்திர பூஜை, மகா ஸ்கந்த ஹோமம் போன்றவற்றை செய்வதும் கலந்து கொள்வதும் மன விருப்பங்களை நிறைவேற்ற உதவும் மகா மருந்துகள் ஆகும் என்பது ஆன்றோர் வாக்கு.

இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், சுமத்திரா போன்ற தென் கிழக்கு ஆசியப் பகுதிகள், ஆஸ்திரேலியா, பிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழா இந்த தைப்பூசம்.

இரணியவர்மன் என்ற மன்னன் தில்லையம்பதியில் பல்வேறு திருத்தொண்டுகள் செய்து ஒரு தைப்பூச நாளில்தான் ஈசனை நேருக்கு நேர் சந்தித்துப் பெரும்பேறு கொண்டான் என்கிறது தில்லை புராணம்.

புகழ் பெற்ற காவடிச் சிந்து பாடல்கள், நடைபயணமாக பழநிக்குக் காவடி சுமந்து வந்த பக்தர்களால் பாடப்பட்டுப் பிரபலமானது என்பர்.

தைப்பூச நாளில் சென்னை கபாலீஸ்வரருக்குத் தேனால் அபிஷேகம் நடைபெறும் என்பதும் விசேஷம். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்குப் பிறவிப்பிணி அகலும் என்பது நம்பிக்கை.

கொங்கு மண்டலத்தில் உள்ள முருக பக்தர்கள் அனைவரும் கொடுமுடியில் பாயும் காவிரி தீர்த்தத்தை எடுத்துத் தீர்த்தக்காவடியாக அவரவர் ஊர் முருக ஆலயங்களுக்கு கொண்டு போவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஊதிமலை உத்தண்ட முருகப்பெருமான் ஆலயத்தில் உள்ள கொங்கணச் சித்தருக்குச் செய்யப்படும் 108 மூலிகை அபிஷேகம் வெகு விசேஷமானது. காரணம் இது பல வியாதிகளை தீர்க்கவல்லது என்பது நம்பிக்கை.

ஞானமலை முருகன்

ஞானமலை முருகன்

தைப்பூச நாளில்தான் சப்த கன்னியருக்கு ஈசன் காட்சி அளித்து வரங்கள் அளித்தார் எனக் குளித்தலை கடம்பவன நாதர் தலவரலாறு கூறுகிறது.

சோழர்கள் காலத்தில் தைப்பூச விழா, கூத்துகள் நடைபெற்ற ஒரு கேளிக்கை விழாவாக இருந்துள்ளது. இதை திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒளி ரூபமாக இறைவனோடு கலந்த வடலூர் மேட்டுக்குப்பத்தில், தைப்பூச நாளில் லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

முருகப்பெருமானுக்கு 16 விதமான காவடிகள் எடுப்பது இந்நாளைய விசேஷம். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சர்க்கரை காவடி, தீர்த்தக் காவடி, பறவைக் காவடி, மச்சக்காவடி, மயில் காவடி என ஒவ்வொரு காவடிக்கும் தனித்தனியே பலன்கள் உண்டு என்பர்.

முருகப்பெருமான் வள்ளியை மணந்ததால் தெய்வயானை அம்மை ஊடல் கொள்ள, அதை முருகப்பெருமான் தீர்த்த நன்னாள் இது என்பதால், திருவூடல் விழா இந்நாளில் முருகப்பெருமான் ஆலயங்களில் நடைபெறும்.

மயிலம், விராலி மலை ஆலயங்களில் இந்நாளில் தோன்றும் முருகப்பெருமானின் மயில் வாகன சேவையைக் காண்பது பிறவிப் பிணியைத் தீர்க்கும் என்பார்கள்.

முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப் பூச திருநாளில் முருகன் குடியிருக்கும் கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி சுமப்பது, வேல்குத்துதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களையும் செய்வது பக்தர்களின் வழக்கம். இந்நாளில் வேண்டி வழிபடும் அன்பர்கள் கல்வி, செல்வம், ஞானம் மூன்றிலும் சிறந்து விளங்குவர் என்பது ஐதிகம்.

திருஞான ஞானசம்பந்தர் அங்கம் பூம்பாவையைத் திருப்பதிகம் பாடி உயிரோடு எழுப்பிய அற்புதம் நடைபெற்றது தைப்பூச நன்னாளில்தான்.

பூச நாளில் புனித நீராடி ஈசனைப் பணிவது தென்னக மக்களின் வழக்கம் என்பதை 'பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே' என்று பெருமையோடு கூறுகிறார் திருநாவுக்கரச பெருமான். திருவிடைமருதூரில் தைப்பூச நாளில் புனித நீராடுவதன் பெருமையை சம்பந்தரும் பாடியுள்ளார்.

பூச நட்சத்திரம் குரு பகவானுக்கு உரியது என்பர். ஆலமர் செல்வனாம் தென்முகக் கடவுள் ஈசனுக்கே குருவாக அருளியவன் முருகப்பெருமான். எனவே இந்நாளில் முருகனை வழிபடுவது குருவின் அருளைப் பெற்றுத்தரும்.

ஓதி மலை முருகன்

ஓதி மலை முருகன்

தைப்பூச நட்சத்திரத்தன்றுதான் முருகப் பெருமான் வள்ளிப் பெருமாட்டியை மணந்து கொண்டார் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன.

படைப்பில் நீரும், நீரிலிருந்து முதல் உயிரினமும் தோன்றிய நாள் தை மாத பூச நாளில்தான் என்கின்றன புனித நூல்கள். அதனாலேயே இந்நாளில் ஆலயம்தோறும் தெப்போற்சவம் நடைபெறுகின்றன.

வேல் வேறு, வேலவன் வேறு அல்ல. பிரம்ம வித்யா என்று போற்றப்படும் ஞான வேலை குமரன் சக்தியிடம் பெற்ற நாள் இந்நாள்.

நெல்லையம்பதியில் அன்னை காந்திமதி நெல்லையப்பரை வணங்கித் தாமிரபரணியில் நீராடி தவமிருந்து ஒரு தைப்பூசத் திருநாளில்தான் அருள் பெற்றாள் என்கிறது தல புராணம்.

திருவரங்கத்து நம்பெருமாள் தன் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு காவிரிக் கரையில் சீர் கொடுக்கும் விழா நடப்பதும் இந்நாளில்தான்.

தில்லையில் தை மாத பௌர்ணமி கூடிய பூசத் திருநாளில் வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி ஆகிய மூவருடன் மால், அயன், முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் மற்றும் சக்தி கண்டு மகிழ ஆனந்த தாண்டவம் ஆடியதும் இந்நாளில்தான்.

வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தை திருவிடைமருதூர் ஈசன் போக்கிய நன்னாள் இது. எனவே இந்நாளில் ஈசனை வணங்க சகல தோஷங்களும் நீங்கும்.

திருவிடைமருதூர் காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை, கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசதில் ஈசனும், சக்தியும் ரிஷப வாகனத்தில் இந்தப் படித்துறைக்கு வந்து, தீர்த்தவாரி செய்து வீதி வழி உலா வந்து ஆலயம் செல்வார்கள். இந்தக் காட்சியை காண்பவர்க்கு கல்யாண வரம் உடனே கிட்டும் என்பார்கள்.

குரு பகவானுக்கு உரிய வியாழன் அன்றே இந்த முறை தைப்பூச நாள் வருவதால் (வியாழன் அன்று பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் குரு புஷ்ய யோக நாளாகும்) இதனால் இந்த நாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் சகல செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கை.

மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோயிலில் உள்ள பிரமாண்ட முருகப்பெருமான் சிலைக்கு வான் வழியே ஹெலிகாப்டர் மூலமாக செய்யப்படும் புஷ்ப அபிஷேகம் கண்கொள்ளா காட்சி எனப்படுகிறது. இது தைப்பூச நாளில் நடைபெறும் என்பதும் விசேஷம்.

தோரணமலை தைப்பூசம்

சிறப்பு சங்கல்ப்பம்

தோரணமலை திருத்தலத்தில் வாசகர்களின் நல்வாழ்வை எண்ணி உங்கள் சக்தி விகடன் குழுமம் சிறப்பு தைப்பூச சங்கல்ப பூஜையை நடத்தவுள்ளது.

அதன்படி 25_01_2024 அன்று விசேஷ பூஜைகளும் அபிஷேகமும் நடைபெறவுள்ளது. தைப்பூச நாளில் காலை 5 மணிக்கே தொடங்கும் சிறப்பு வைபவங்களில் நீங்களும் வீட்டில் இருந்தே கலந்து கொள்ளலாம். கோயிலின் நிர்வாகம் அன்று முழுக்க பல விசேஷ பூஜைகளை நடத்தவுள்ளது. அதிகாலை நடைபெறும் கணபதி ஹோமம், 8 மணிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பிறகு உச்சி கால பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும் சரவண ஜோதி விளக்கு பூஜை போன்றவற்றை முடிந்தவர்கள் நேரில் சென்று தரிசிக்கலாம்.

தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, தேவர்களை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை அனுகாது என்பது நிச்சயம். இந்த ஆண்டு வரும் ஜனவரி 25 ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்நாளில் முருகப்பெருமானை வழிபட்டு, அவனருள் பெறுவோம்.

வந்தவினையும், வருகின்ற வல்வினையும்

கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே

செந்தில்நகர் சேவகா என திருநீரு

அணிவோர்க்கு மேவ வாராதே வினை

முருகாMay be an image of templeMay be an image of temple May be an image of temple

 May be an image of temple

 May be an image of templeMay be an image of temple

 

 May be an image of temple

 May be an image of flute and temple

 May be an image of temple

 May be an image of temple


 

 

Thanks & copy from வேதபுரி மைந்தன் சந்தோஷ்