இந்து மதத்திற்கு ஈடும் இல்லை .. இணையும் இல்லை ...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:15 AM | Best Blogger Tips

 



சுவாமி சின்மயானந்தா அவர்களை அனைவருக்கும் தெரியும் ...

ஒருமுறை அவரை கம்யூனிச சித்தாந்தத்தின் பத்திரிகை செய்தியாளர் பேட்டி எடுத்தார் ...

இந்துமதத்தை சிறுமைப்படுத்தியும் கிறிஸ்தவ, முஸ்லிம் மார்க்கங்களை உயர்த்தியும் தாங்கிப்பிடிப்பதிலேயே அவரது பேட்டியின் சாரம் இருந்தது ...

இஸ்லாத்தை கண்டுபிடித்தவர் யார் சுவாமிஜி.. ?

என்றார்.

முகம்மது நபி என்றார் சுவாமிஜி.

கிறிஸ்தவ மதத்தை சுவாமி.. ?

ஏசுநாதர் என்றார் சுவாமி ...

அப்படியெனில் இந்து மதத்தை ..? என்றார் நிருபர். சுவாமியிடம் பதில் வராது என நினைத்த நிருபர் மேலும் தொடர்ந்தார் ...

இந்து மதத்தை நிறுவியவர் யாருமில்லை. அதனால் தான் இந்து மதம் ஒரு மதமே அல்ல சரிதானா சுவாமி.. ?

என்றார்.

அதற்கு பதிலளித்தார் சுவாமி ...

நீங்கள் சொல்வது சரிதான். இந்து மதம் என்று எதுவும் கிடையாது. இந்து மதம் ஒரு விஞ்ஞான கடல் ... என்றார் சுவாமி..!

நிருபருக்கு விளங்கவில்லை .. சுவாமி தொடர்ந்தார் ...

Who is the founder of Physics ? என்றார்

பெளதீகம் ( Physics ) விஞ்ஞானத்தின் ஒரு கிளை ... அதற்கு யார் உரிமை கொண்டாட முடியும்.. ?

என்றார் நிருபர்.

Who is the founder of Chemistry.. ? அடுத்த கேள்வியை எழுப்பினார் சுவாமி.

இதற்கும் அதே பதில் தான் சுவாமி என்றார் நிருபர்.

Who is the founder of Biology.. ? மூன்றாவது கேள்வியை கேட்டார் சுவாமி ...

என்ன சுவாமி ..? உங்களுக்கு தெரியாததா இதற்கு எப்படி பதிலளிக்க முடியும்.. ?

என்றார் நிருபர்.

விஞ்ஞானத்திலும் அறிவியலிலும் பல்வேறு மனிதர்கள் ... பல்வேறு காலகட்டங்களில் இம்மூன்று துறைகளில் சாதனை புரிந்துள்ளார்கள் சரியா.. ? என்றார் சுவாமி.

அதேபோல Hindu Dharma என்பது ஒரு முழு முன்னேறிய விஞ்ஞானம்.

பல்வேறு நூற்றாண்டுகளில், பல்வேறு ஞானிகள் அவரவர் காலகட்டங்களில் அவரவரது பங்களிப்பை செவ்வனே செய்துள்ளார்கள் ....

ரிஷிகளும், ஞானிகளும், உயர் நெறி குருமார்களும் அவரவர் வாழ்ந்த காலத்தில் வருங்கால சந்ததிகளுக்கு பொக்கிஷமாக வழிமுறைகளை வருங்கால சந்ததிகளுக்கு கடல்போல் பல்வேறு காலங்களில் அருளிச்சென்றுள்ளனர் ...

இஸ்லாத்தை வழிநடத்த குரான் மட்டுமே இருக்கிறது ...

கிறிஸ்தவர்களை வழிநடத்த பைபிள் மட்டுமே இருக்கிறது ...

ஆனால் இந்துக்களை வழிநடத்த ஆயிரக்கணக்கான புனித நூல்கள் ஒரு லைப்ரரி மாதிரி இருக்கிறது ...

எனவே Hinduism என்பது ஒரு மாபெரும் விஞ்ஞான கடல். அதற்கு பெயர் சனாதன தர்மா ... என்றார் சுவாமி ...

இந்து மதத்திற்கு ஈடும் இல்லை .. இணையும் இல்லை ...

ஆதியும் இல்லை ... முடிவும் இல்லை ...

எவனையும் இங்கு வா என்று அழைப்பதுமில்லை ... இங்கிருந்து போ என யாரையும் சொல்வதில்லை ...

நிருபர் அசடு வழிந்தார் ...!




 நன்றி இணையம்

- வாட்ஸ்அப் வழி பதிவு