🌠 இன்றைய நட்சத்திரம்
இன்று தனது 71'ஆவது
💫 பிறந்தநாள் காணும்
நாடக, திரைப்பட நடிகர்,
இயக்குனர் பின்னாளில் அரசியல்வாதி என
பன்முக தன்மை கொண்ட கலைஞர்
எஸ்.வி.சேகர் அவர்களைப் பற்றிய அறியாத
பல அரிய செய்திகளுடன் சிறப்பு பதிவு.!
〰️ 🌺 ☘️
☘️
🌺 〰️
தஞ்சை மாவட்டம், சீர்காழி அருகிலுள்ள சட்டநாதபுரம் தான்
இவரது சொந்த ஊர். இவரின் இனிஷியலில் எஸ்.வி.'க்கு அர்த்தம், எஸ். என்றால் அப்பாவின் சொந்த ஊரான
சட்டநாதபுரம், வி. என்றால் அப்பா வெங்கட்ராம'னைக் குறிப்பிடுவது.
பிற்காலத்தில் பன்முகத் திறமை கொண்டு விளங்கிய
இவர் ஒரு ஒலிப்பதிவாள'ராகத்தான் (Sound
Engineer) தன்
வாழ்வை தொடங்கினார்.! அதற்குப்பிறகு தான் நாடக மேடையில் அடியெடுத்து வைத்தார்.
1968'ல் இவரது தந்தை வெங்கட்ராமன் அவர்கள்
"கற்பகம் கலாமந்திர்" என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கினார். இக்கம்பெனி
நடத்தும் நாடகங்களில் மேடை உதவியாளராக சேகர் பணிபுரிந்தார். அப்போது
அப்பாவிடமிருந்து புகைப்பட கலையையும் கற்றுத் தேர்ந்தார்.
இந்த சமயத்தில் இவரது தந்தை இலங்கை வானொலியின்
வர்த்தக சேவையின் சென்னை கிளைக்குப் பொறுப்பாளராக இருந்தார். மூன்று மணி நேரம்
ஓடும் திரைப்படத்தை வானொலியில் ஒரு மணி நேரம் மட்டும் ஒலிபரப்பக்கூடிய விதத்தில் “ஒலிச்சித்திரம்” ஆக்கி அனுப்புவது இந்த நிறுவனத்தின்
முக்கிய வேலை. இந்த முக்கியமான பணியை அப்பாவிடம்
உதவியாளராக இருந்து இவர் செய்து வந்தார்.
ஒரு முறை அவரது அப்பா பதிவு கூடத்துக்கு
வரமுடியாத சூழ்நிலையில் அவரில்லாமல் இவர் செய்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘நம்நாடு’. அதன் விறுவிறுப்பு குறையாமல் மாறுபட்ட
விதத்தில் ஒரு மணி நேர ஒலிச்சித்திரமாக்கினார் சேகர். இது இலங்கைக்குப் போய்
சேர்ந்த அன்றே இவரது அப்பாவுக்கு நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு..?
இந்த முறை ”ஒலிச்சித்திரம்" பிரமாதமாக
இருக்கிறது பாராட்டுக்கள் என்றார் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்.
இந்தப் பாராட்டுக்குரியவன் நானல்ல. என் பதினேழு வயது மகன் தான்.! என்று
கூறியுள்ளார் அவரது தந்தை.
அடுத்து இவர் தனித்து தயார் செய்தது சிவாஜிகணேச'னின் ஒப்பற்ற சித்திரம் “வசந்த மாளிகை”. இப்படி ஆரம்பித்த இவர் இதுவரையிலும்
சுமார் 275 திரைப்படங்களுக்கு ஒலிச்சித்திரங்கள்.! தயாரித்து கொடுத்துள்ளார்.
〰️ ☘️
🌺 🌺 ☘️
〰️
இவரது கலையுலக பயணத்தை தொடங்கியது இவரது ஏழாவது
வயதில் வேப்பம்பூ பச்சடி என்ற வானொலி சிறுவர் நாடகத்தில்.! அப்போது சென்னை
வானொலியில் பிரபலமான கூத்தபிரான் அவர்களால் இவரது முதல் அரங்கேற்றம் நடந்தேறியது.
இவரது தந்தையின் நாடக குழு மூலம் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் இவரது நண்பர். அவர்
நாடகங்களும் நடத்தி வந்தார். அவரது
நாடகங்களுக்கு அடிக்கடி இவர் போவதுண்டு. அப்படி ஒரு நாள் சென்னை சிறைச்சாலையில்
நடந்த ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டிய நடிகர் ஒருவர் அன்றைய நாள் வராமல் போனார்.
வி.கோபாலகிருஷ்ணன் இவரிடம் அந்த கதாபாத்திரத்தில் நீயே நடித்து விடு என்றார்.
இவரும் ஒப்புக்கொண்டு நடித்தார். அது தான் இவர் நடித்த முதல் நாடகம்.
வி.கோபாலகிருஷ்ணன் நாடகத்தில் நடிகராக அங்கீகாரம் பெற்ற இவர் அந்தக் குழுவுடன்
சிங்கப்பூர் சென்றும் நடித்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து கப்பலில் திரும்பி வந்த
போது நண்பர்களுடன் பேசி கப்பலிலேயே ஆரம்பித்தது தான் “நாடகப்ரியா” நாடகக்குழு 1974'ல் கப்பலில் ஆரம்பித்த இவரது குழு
இன்று இன்று வரை வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது.! அன்று இவருடன் கூட்டு
சேர்ந்து நாடக குழு ஆரம்பித்த வரிகளில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர்.!
நாடகத்தையும் படிப்பையும் தொடர்ந்த இவர் மத்திய
தொழில் நுட்பக் கல்லூரியில் “இயந்திரப் பொறியியலாளர்” படிப்பு பயின்று முடித்துள்ளார்.
〰️ 🌺 ☘️
☘️
🌺 〰️
திரைத்துறையில்...
கே.பாலசந்தர் அவர்கள் “நினைத்தாலே இனிக்கும்” படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.
அதில் சிங்கப்பூரில் நடப்பது போன்ற ஒரு காட்சியை சென்னையிலுள்ள இவரது ”பதிவு திரையரங்கில்” எடுத்தார்கள். இவரது ஸ்டூடியோவுக்கு
வரும் ரஜனிகாந்த் அவருக்கு ஒரு காரியம் ஆக வேண்டும்
என்பதற்காக 5 வெள்ளி சிங்கப்பூர் பணம் கொடுப்பார்.! இவர் உடனே ‘நம்ம ஊரு புத்தியைக் காட்டிட்டே
பாத்தியா’ என்று சொல்ல வேண்டும். இது தான் காட்சி. இவர்
வழக்கமாக இருக்கின்ற இடத்தில் இருந்த படி ரஜனிகாந்திடம் இந்த வசனத்தைச் சொன்னார்.
இதை நடிப்பு என்ற கோணத்தில் பார்க்காமல் சாதாரணமான ஒரு சீன் தானே என்ற
கண்ணோட்டத்தில் வெகு இயல்பாக நடித்து கொடுத்தார். 1979'ல் படம் வெளியான போது இக்காட்சி
பிரபலமாகி சாமானிய ரசிகர்களிடமும் போய் சேர்ந்தது.!
இந்த நேரத்தில் கே.பாலசந்தரே மீண்டும் இவரை
அழைத்து “வறுமையின் நிறம் சிகப்பு” படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க
வைத்தார். வேலை இல்லாமல் திண்டாடும் 3 நண்பர்களைப் பற்றியது இப்படம். கமலஹாசன், திலீப், எஸ்.வி.சேகர் மூவரும் நண்பர்களாக
நடித்தனர்.
விசு'வின் மணல் கயிறு 1982 படம் தான் இவர்
கதாநாயகனாக நடித்த முதல் படம். இதில் இவருக்கு இணையாக நடித்தவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா'வின் தங்கை சாந்தி கிருஷ்ணா.
அதைத்தொடர்ந்து சிம்லா ஸ்பெஷல், மிஸ்டர் பாரத், பூவே பூச்சூடவா, பட்டம் பறக்கட்டும், சிதம்பர ரகசியம், பெண்டாட்டியே தெய்வம், அரசாட்சி, பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, தினந்தோறும் தீபாவளி, டௌரி கல்யாணம், கிருஷ்ண கிருஷ்ணா, தங்கமான புருஷன், சிகாமணி ரமாமணி, குடும்பம் ஒரு கதம்பம், வீட்டில எலி வெளியில புலி, மணந்தால் மகாதேவன், ஜித்தன், ஜீன்ஸ் வல்லவன், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ள இவர் நாடகங்களில் ஏராளமாக நடித்துக் கொண்டிருந்ததால் நடிக்க
மறுத்த படங்கள் மட்டும் 200-க்கும் மேல்.!
💰 இராம.நாராயணன் அவர்களது தங்கமணி
ரங்கமணி, சகாதேவன்
மகாதேவன், பட்டம் பறக்கட்டும் போன்ற 19'க்கும் அதிகமான படங்களில்
நடித்திருக்கிறார். இவரை அடுத்து இயக்குநர் விசுவின் 18 படங்களில் நடித்துள்ளார்.!
💰 முக்தா வி.சீனிவாசன் படங்கள்
பலவற்றிலும் இவர் நடித்துள்ளார். கேரளாவில் மோகன்லால், சீனிவாசன் நடித்து மிகப் பெரிய
வெற்றிபெற்ற “நாடோடிக்காற்று” என்ற படம் “கதாநாயகன்” என்ற பெயரில் தமிழில் முக்தா
வி.சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்தது. இதில் கதாநாயகனாக நடித்தார். இவருடன்
இணைந்து நடித்தவர் பாண்டியராஜன். இப்படம் 100 நாட்கள் ஓடியது. இப்போதும்
எஸ்.வி.சேகர் துபாயோ, சிங்கப்பூரோ போனாலும் இந்தப் படத்தில்
இவரது கதாபாத்திரம் பற்றி ரசிகர்கள் கேட்பதுண்டு.!
திரைப்படத்துறையில் இவரை மிகவும் கவர்ந்தவர்
ஜெய்சங்கர். அவருடன் “பூவே பூச்சூடவா” படத்தில் தமிழில் புதுமுகமான நதியா'விற்கு இணையாக நடித்தார். அந்த வகையில்
நதியா'வின்
முதல் கதாநாயகன் இவர் தான்.!
〰️ 🌺 ☘️
☘️
🌺 〰️
திரைப்படங்களில் பரபரப்பாக நடித்தாலும், இடைவிடாமல் நாடகங்களில் நடித்த்து
வந்தார்.! இவர் 25'க்கும் மேற்பட்ட நாடகங்களை உருவாக்கியிருக்கிறார். இந்த நாடகங்களை
6000-க்கும் மேற்பட்ட முறை மேடையேற்றியிருக்கிறார். நாடகத்தில் இவருக்கு மானசீகக்
குரு “சோ” அவர்கள்.
1984'ல் ஒரே நாளில் 8 நாடகங்கள்
நடித்திருக்கிறார்.!
அதேபோல 2003'ல் அமெரிக்காவில் வெவ்வேறு பகுதிகளில்
32 நாட்களில் 28 நாடகங்களைப் போட்டிருக்கிறார்.! அனைத்தும் அரங்கு நிறைந்த
காட்சிகள்.
இந்த இரு நிகழ்வுகளும் அவரது கலை உலக வாழ்வில்
சாதனைகளாக கருதப்படுகிறது.!
〰️ 🌺 ☘️
☘️
🌺
1979 ஆகஸ்ட் மாதம் இவருக்குத் திருமணம்
நடந்தது. இவரது மனைவி பெயர் உமா மகேஸ்வரி. இவர் பிரபல இசையமைப்பாளர் ஜி ராமநாதன் அவர்களின் பேத்தி என்பதும்
குறிப்பிடத்தக்கது.! இவர்களது மகன் அஸ்வின் சேகர், மகள் அனுராதா.
இவரது மகன் அஸ்வின் கடந்த 2007'ம் ஆண்டு வேகம் என்ற திரைப்படத்தின் மூலம்
கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.!
〰️ 🌺 ☘️
☘️
🌺
நன்றி இணையம்