ஒரு மனிதனின், வாழ்க்கை என்பது பலவிதமான சிந்தனைகளால் உருவாக்கப்பட்ட, சூழ்நிலைகளின் புற அழுத்தங்களை கொண்டது. அதன் நெளிவு, சுளிவுகளை தெரிந்து கொண்டால் ஒழிய, ஒரு மனிதனால் கரை ஏறுவது என்பது, முடியாத காரியம்.
"எல்லையில்லா பரம்பொருள்" என்று இறைவனை பற்றி கூறினால், அது எப்படிப்பட்ட உணர்வு அல்லது நிலை என்பதை உணர, அதுவாகவே மாறிவிடவேண்டும். இதை விவரிப்பது என்பதும் நமதுகையிலும் இல்லை. உணர வைக்க இறைவன் நினைத்தால் ஒழிய அது நடக்காது. எல்லோரும், அந்த நிலைக்கு வரவேண்டும் என்று நினைத்துதான்,
"புண்ணிய செயல்களை செய்யுங்கள், தர்மம் செய்யுங்கள், பற்றை அகற்றுங்கள், விதிக்கப்பட்ட கடமையை செய்யுங்கள், தியானம் செய்யுங்கள், சித்தம் நிலைக்க வையுங்கள், அனைத்தும் இறைவன் செயல் என்றிருங்கள்" என்று கூறுகிறார்கள். எத்தனை பெரிய மகானாக இருந்தாலும், உடல் வலிமை பெற்றிருந்தாலும், ஒரு செயலால், பிறர் நிலை என்னவாகும் என்று ஒரு மணித்துளி யோசிக்காமல் செயல்பட்டால், லங்காபுரியை தீ வைத்து பின்னர் மனதளவில் அவஸ்தைப்பட்ட அனுமனின் நிலை தான், மனிதர்களுக்கும்!!.
நன்றி இணையம்
✋🔔யாரோ?