தீபாவளி வழிபாட்டு முறைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:23 | Best Blogger Tips

 



பாரதம் முழுவதும் ஏன் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ஒரே நேரத்தில ஒரே பெயரில ஒரே கலாச்சார வழிப்பாடு படி கொண்டாடும் பண்டிகை தீபாவளி...

அதனால் தீபாவளி என்ற பெயர் இந்துக்களின் வேத மொழியான சமஸ்கிருத சொல் ஆகும் .

"தீபம்" என்பது தமிழில் விளக்கு

"ஆவளி" என்பது தமிழில் வரிசை

தீபா+வளி=தீபாவளியாக ஆகியது

இப்பெயர் தீபங்களின் வரிசையை குறிக்கும் சொல்..

கந்த புராணத்தில் சிவ விருதங்களை எட்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன அதில தீப வழிபாடு தீபாவளி சிவ விரதங்கள் எட்டில் ஒன்று.

அதே போல விஷ்ணு புராணப்படி திருமால் நரகாசுரனை வதம் செய்து அழித்ததை சாவைக் கொண்டாடுவது என்று திரிக்கப்பட்டது


நரகாசுரனை விஷ்ணு அழிப்பதற்கு முன்பே தீபாவளி கொண்டாப்பட்டது

அதே நேரம்

திருமால் அருளால் பூமா தேவி படைத்த நரகாசுரன் அசுரனாக விஸ்வரூபம் எடுத்து உலகை அழிக்க முற்பட்ட போது அவனை வதம் செய்து அவர் சாவுக்கு சடங்காக படையல் போட தீபாவளி அதிகாலை 3மணியிலிருந்து 4மணிக்குள் செய்கிறோம் இதனால் தான் அந்த படையல் முறுக்கு அதிரசம் சுளியன் வடை எல்லாம் வைத்து குளிக்காமல் முதல் படையல் போடுகிறோம்...

நரகாசுரனை திருமால் அழித்ததற்கு 21ம் நாள் சடங்கு செய்யும் நாளும் ஒன்றாக வருகிறது

-இது விஷ்ணுபுராணம்

சிவபுராணங்கள் வழிபாடு படி இது முழுக்க முழுக்க கௌரி நோன்போடு தொடர்புடையது.

கௌரி நோன்பு நவராத்திரியோடு தொடர்புடையது. நவராத்திரி புரட்டாசி அமாவாசையிலிருந்து தொடங்கும். அன்றிலிருந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி கொலு கொண்டாடப்படும். கொலுவில் பலவிதமான தெய்வ திருமேனிகள் வைத்துக் கொண்டாடுவார்கள்.


அந்த நவராத்திரி எதைக் குறித்தது என்றால் அம்பிகையாகிய சிற்சக்தி சிவப்பரம் பொருளிலிருந்து பிரிந்து வந்து இந்த உலகில் பல்வேறு வடிவங்களில் உயிரினங்களைப் படைப்பதைக் குறித்தது.

அந்தப் படைப்பை ஒன்பது சக்திகளாக அதாவது மனோன்மணி சர்வ பூததமணி, பலப்ரதமணி, பலவிரகரணி, கலவிகரணி, காளி, ரௌத்திரி, சேட்டை, வாமை, என்கிற ஒன்பது சக்திகளாகப் பிரிந்து ஐம்பெரும் பூதங்களையும், சூரியனையும், சந்திரனையும், உயிர்களின் உடல்களையும் படைக்கிறாள். அதனால்தான் இதை ஒன்பது ராத்திரிகளில் வைத்துக் கொண்டாடினார்கள்.

இதன்பின் அம்பிகை சிவபரம்பொருளிடம் இருந்து பிரிந்த நிலை மாறி சிவபரம் பொருளிடம் சென்று சேர்கிறாள். அதாவது மீண்டும் சிவபரம்பொருளை அடைய நவராத்திரி ஒன்பதாம் நாள் தொட்டு 21 நாட்கள் தவமிருந்து நோற்று மெல்ல மெல்ல சிவ பரம்பொருளை அடைகிறாள்.


இதைத்தான் அம்பிகை தவமிருந்து இடப்பாகம் பெற்றாள் என்று குறிப்பிட்டார்கள். இதையே கேதார கௌரி விரதம் என்றார்கள்.

ஆகவேதான் வருடாவருடம் நவராத்திரியின் ஒன்பதாம் நாள் ஆகிய ஆயுத பூசை நாளிலிருந்து 21-ஆம் நாளில் கேதார கௌரி நோன்பும் அதையொட்டி தீபாவளியும் வரும்.

ஐந்தெழுத்தில் "சி" என்கிற எழுத்து சிவ பெருமானைக் குறித்த எழுத்து. "வ" என்கிற எழுத்து அம்பிகையாகிய சத்தியைக் குறித்த எழுத்து. உயிர்கள் உள்பட உலகம் அனைத்தும் பிரளய காலத்தில் சிவனிடம் அடங்கி நிற்கும். அந்த நிலையைக் காட்டும் ஐந்தெழுத்தில் சி என்பது மட்டும் ஏனைய எல்லா எழுத்துக்களையும் உள்ளடக்கி தனியே நிற்கும்.

இறைவன் இந்த உலகை விரிக்க முதலில் சத்தியை தன்னிலிருந்து பிரித்து வெளியாக்குகின்றான். அந்த சத்தி ஒன்பது சத்தியாய் பிரிந்து இந்த உலகைப் படைக்கிறாள். படைப்பின் நோக்கம் முடிந்ததும் சத்தி மீண்டும் சிவத்தில் ஒடுங்கிவிடுகிறாள்.

அதாவது உலக உற்பத்தியில் சிவ என்று ஆகும் ஐந்தெழுத்து உலக ஒடுக்கத்தில் சி என்று ஒடுங்கிவிடுகிறது.

இந்த உண்மையைப் புறநானூறுகூட கூறுகிறது. பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பது புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து வரிகள்.

அதில் பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று என்பது சிவ என்னும் ஐந்தெழுத்தைக் கூறுவது. அவ்வுரு தன்னுள் அடக்கி கரக்கினும் கரக்கும் என்பது சி என்னும் ஐந்தெழுத்தைக் குறித்தது.புறநானூற்றிலேயே இவை வருவதைப் பாருங்கள்!

ஆக உலகமெல்லாம் ஒடுங்கும் லய நிலையில் பிரளயத்தில் என்ன ஆகிறது தெரியுமா?அரைப்பக்குவத்தில் அல்லது முக்கால் பக்குவத்தில் உள்ள உயிர்களை இறைவன் தூசுத் தட்டிஅப்படியே தன் திருவடியில் சேர்த்து முடிந்த முத்தியைக் கொடுத்து விடுவான். அவர்களுக்குத் தான் பிரளயாகலர் என்று பெயர். பிரளய காலத்தில் இரு மலங்களின் கட்டுக்களில் இருந்து நீக்கப்படுபவர்கள் என்பது அதன் பொருள். அவர்கள் ஏற்கனவே மாயா மலக்கட்டுகளிலிருந்து நீங்கியவர்களாக பக்குவம் ஏறி இருப்பார்கள்.

ஆகவே பிரளயத்தில் பல உயிர்கள் முத்தி அடைகின்றன. அதில் நமது முன்னோர்களில் சிலரும் அடங்கலாம் அல்லவா? அதற்கு வாய்ப்பு உண்டுதானே! எனவே அவர்கள் பெற்ற முத்தியொளிச் சேர்க்கையைக் குறித்தே பல அகல்களில் தீபம் ஏற்றி வரிசையாக வீட்டில் வைத்து அவற்றை வணங்குகின்றோம். அதுதான் தீபாவளி என்று ஆயிற்று. இறந்த முன்னோர்களில் பலர் இறை ஒளியில் கூடுவதைக் கொண்டாடுவது சிறப்புதானே! இதுதான் தீபாவளிக் கொண்டாட்டம் ஆயிற்று.

அதனால்தான் கேதார கௌரி விரதத்தின் மறுநாள் அல்லது சில வருடத்தில் அதே நாளில் தீபாவளி நேர அது கொண்டாடப்படுகிறது. அதாவது உலகை விரித்த சத்தி முற்றிலுமாகசிவத்தில் ஒடுங்கிய பின் தீபம் ஏற்றி முன்னோர்கள் பெற்றிருக்கக்கூடிய முத்தி கொண்டாடப்படுகிறது.

கங்கையில் மூழ்குவது பிதிர்க்கள் ஆகிய முன்னோர்க்கு செய்யும் கடன் என்பது இன்றும் கண்கூடு. என்றைக்கோ இறந்த நம் முன்னோர்களுக்கு எல்லாம் கங்கையில் ஒரு சேர நீரொழுக்கி (தர்ப்பணம் செய்து) நீர்க்கடன் ஆற்றுவது இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். அது போல இந்த தீபாவளி நாள் நமது முன்னோர்கள் முத்தி பெற்ற நன்னாள் என்பதால் அன்றைய முழுக்கை அதை நினைவுபடுத்தி கங்கா ஸ்நானம் என்றார்கள்.

அது மட்டுமல்ல இதற்கு அடிப்படையாக ஆரம்பிக்கும் புரட்டாசி அமாவாசையை மகா பிரளய அமாவாசை என்று மேற்கூறிய பின்னணியில் சொன்னார்கள். அது மருவி மாளய அமாவாசை என்று ஆயிற்று.

நம் முன்னோர்கள் முத்தி பெற்றார்கள் என்பதால் ஐப்பசி அமாவசை அன்று வரும் தீபாவளி அதிகாலை 4 4.30 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்து ஈர துணியுடன் நின்று புத்தாடைகளுக்கு மஞ்சள் வைத்து தெய்வ திருமேனிகள் முன் வைத்து சாம்ராணி போட்டு எடுத்து பெரியவர்கள் ஆசிர்வாதம் பெற்று புத்தாடை அணிந்து கொண்டு மீண்டும் இரண்டாவது படையல் ஐந்து வகை இனிப்பு ஐந்து வகை கனிகள் ஐந்து வகை பூ அர்சனையை 5மணிக்கு போட்டு தேவாரம் பாடி சிவப்பெருமானின் கேதார கௌரி விரதத்தை வழிப்பாட்டு முடித்து தீபாவளியில் இனிப்புகள் உண்டு கொண்டாடுகிறோம்.

இவை எல்லாம் நமது முன்னோர்களுடன் தீபாவளிக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தும்.

ஆனால் தீபாவளி நரகாசுரன் வதத்தைக் கொண்டாடுவது என்பது எள்ளளவும் பொருத்தம் இல்லாதது.

தீபாவளி அதிகாலை குறைந்தபட்சம் 9தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும்

தீபாவளி மாலையும் குறைந்தபட்சம் 9 தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும்

அதோடு தீபாவளி என்பது செல்வ செழிப்பை துவங்கும் ஆண்டின் முதல்நாளாகும், அதனால் தீபாவளி விடியல் காலை கண் விழித்தவுடன் முதல் நாள் இரவே மஹாலட்சுமி திருமேனி படத்தை அலங்கரித்து வைத்து அதனுடன் பொன்பொருள் தங்க நகை வெள்ளி நகை பணம் கனிகளை அழகான தாம்பூலத்தில் அடுக்கி வைத்து அதன் எதிரே அவை தெரியும் படி முகம்பார்க்கும் கண்ணாடியை வைத்து உறங்க செல்ல வேண்டும் தீபாவளி விடியல் காலை கண் விழித்து முதலில் பார்க்க வேண்டும்

தீபாவளி மாலை இந்த வருடம் 6.10pm முதல் 7 மணிக்குள், குலதெய்வம், மகாகணபதி, மகாலட்சுமி ஆகியோருக்கு அர்சனை தீபாராதனை செய்து லட்சுமி குபேர பூஜை செய்து வழிப்பாடு செய்வது நல்ல செல்வ செழிப்பை தரும்

தீபாவளி அன்று தான் இராமர் 14வருடம் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் சூட்டி கொண்டார் அதை இந்தியா முழுவதும் இராமராஜியம் அமைந்ததை கொண்டாட பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது...

அதனால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று செல்வ செழிப்பும் நன்மைகளும் தொடங்கும் ஆண்டு பிறப்பாக வெடி மத்தாப்பு வான வேடிக்கை நடத்தி தீபாவளியை வரவேற்கிறோம்....

குறிப்பாக தீபாவளி என்பது கேளிக்கை நிறைந்த நாளாக தியேட்டர்ல படம் பார்ப்பது, மது அருந்துவது மாமிசம் சாப்பிடுவதை மாற்றி முழுமையாக இறை வழிப்பாட்டுக்கு மாற்றுவது நற்ப்பயன் கிடைக்கும்....


நன்றி 

சிவ.பரமசிவம்

மாவட்ட தலைவர்

கல்வியாளர் பிரிவு

நாகை மாவட்டம்

 

நன்றி இணையம்