பெண் கருடன் கேள்விப்பட்டதுண்டா ?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:14 AM | Best Blogger Tips

 



கருட பகவான் கேள்வி பட்டிருப்பீர்கள்

பொதுவாக கருடன் ஆண் வம்சமாகும்

பெருமாளுடைய வாகனம்🙏🙏

 

பெண் கருடன் கேள்விப்பட்டதுண்டா ?

கருடனின் மனைவி, கருடி எனப்பெயர்.

நாகை அழகியார் கோவில் தாயாருக்கு

பெண் கருட ( கருடி)  வாஹனம் உண்டு

இந்த கருடி வாஹனத்தில் தாயார் பவனிவருவது சிறப்பு.

பல கோவில்களில் தாயார் கோவிலை விட்டு வெளியே வரமாட்டார்.( படிதாண்டா பத்தினி என பெயர் உண்டு).

 

நாகை அழகியார் கோவிலில்

பெருமாள் கருட வாஹனத்திலும்

தாயார் கருடி வாஹனத்திலும்

ஜோடியாக வருவது கண் கொள்ளாகாட்சியாகும்🙏🙏

 

மன்னார்குடி

ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோவிலின், செங்கமலத்தாயார் சந்நிதியின் கொடிமரத்தின் கீழ் உள்ளது கருடி...

 

பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், பெருமாளுக்கு எதிரில் பெரிய திருவடியான கருடன் இருப்பார்...மன்னையிலும் பெருமாளுக்கு எதிரில் கருடன் இருக்கிறார்...கூடவே, செங்கமலத்தாயாருக்கு எதிரில் கருடி இருப்பது அரிய ஒன்று...!🙏🙏

 

கருடி வாகனம்

நாகை தாயார்!! காண கண் கோடி வேண்டும் நண்பர்களே...

 

ஓம் நமோ நாராயணா நமஹா

 

                   🙏நன்றி🙏


நன்றி இணையம்