இந்தியா இராணுவம் சத்தமில்லாமல் சாதித்து . . . . . . . . . . .

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:12 | Best Blogger Tips

 


பாரத பிரதமர் மோடி அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி இந்தியா இராணுவம் சத்தமில்லாமல் சாதித்து காட்டியிருக்கிறது

உலக வரலாற்றில் முதன் முறையாக ராணுவ துருப்புக்களை போருக்கான ஆயுதங்களுடன் முழுமையாக களம் இறக்கி சண்டை நடைபெறாமல் வெற்றி பெறுவது என்பது அசாதாரணமானது. அது இந்திய வரலாற்றில் நடந்துள்ளது


இந்தியா அண்டை நாடுகளுடன் கூட்டாக களம் இறங்கவில்லை. அத்துமீறல் இல்லை. ரத்தக்களறி இல்லை அட இவ்வளவு ஏன் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் இல்லை.

ஆனாலும் உலகின் இரண்டு பெரிய ராணுவத்தினர் களம் இறங்கிய தளத்தில் சீதோஷ்ண நிலை மனிதர்கள் வாழும் சூழலும் இல்லை. பனி அளவுக்கு அதிகமாக இருந்தது

ஒரு வாரம், இரண்டு வார முற்றிகை அல்ல. 2 வருட முற்றுகை.. சீனா ராணுவம் 3 முறை போர் பயிற்சி செய்தது, இருந்தும் அசரவில்லை இந்தியா. அமைதி மட்டுமே காத்தது

இங்கே தான் ஒரு சம்பவம் நடந்தது..

இந்திய ராணுவத்தினர் தொடை அளவு பனியில் கபடி விளையாடிக் கொண்டு இருந்தனர்.

உயிரை பற்றி கவலை பட வில்லை, போரை பற்றி கவலை படவில்லை, சீன ராணுவத்தினரை பற்றி கவலை படவில்லை, சீனாவின் ஆயுதங்களை பற்றி அவர்கள் கவலைப்படாமல் கபடி விளையாடி கொண்டு இருந்தனர் அதுவும் பனியில்

அது சீனர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது

இதை பற்றி ஓர் சீன ராணுவ உயர் அதிகாரி இவ்வாறு விவரிக்கிறார்.....

நிஜத்தில் இந்திய ராணுவத்தினர். யாருக்கும் ஒப்பிட முடியாத மாவீரர்கள் என்பதை மற்றுமோர் முறை நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்.

நாங்கள் பார்த்த போது இந்திய ராணுவத்தினர் ஏதோ விடுமுறைக்கு வந்தவர்கள் போன்று தொடை அளவு பனியில் கபடி விளையாடி கொண்டு இருந்தனர். இதனை பார்த்த போது தான் எங்கள் படை வீரர்கள் மனம் உடைந்து போனார்கள்.

நாங்கள் பின்வாங்கியது இந்திய ராணுவ பலத்தை பார்த்து அல்ல.... எங்களை அவர்கள் கையாண்ட விதத்தை பார்த்து தான். எங்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை, இதுவே எங்கள் ராணுவத்தினர் மனமுடைந்து போனதற்கு மிக முக்கியமான காரணம் என்கிறார் அவர்.

☝️சீன ராணுவ தரப்பில் இவ்வாறு தெரிவித்த போதும், நிஜத்தில் வேறோர் நிகழ்வும் பெய்ஜிங்கில் நடந்திருக்கிறது. அது தான் முதல் தரமான சம்பவம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பலருமே சி ஜின் பிங் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கூடிய அபாயம் அங்கு ஏற்பட்டிருக்கிறது.

☝️இந்தியா இது வரை அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தவில்லை, அதேசமயம் கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தின் போதும் சீனா கேட்டு கொண்டதற்கு இணங்க இந்திய ராணுவத்தினர் அமைதி காத்தது பெரிய விஷயமாக அங்கு பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டுயிருக்கிறது.

மறைமுகமாக சீன கம்யூனிஸ்ட் உயர் மட்ட உறுப்பினர்கள் பலர் இந்திய மோதலை விரும்ப வில்லை.

கம்யுனிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினர்கள் பலர் இந்தியாவில் முதலீடு செய்து இருக்கிறார்கள். இந்த வகையான இந்திய முதலீடு மாத்திரமே சுமார் 45 ஆயிரம் கோடிகளை தாண்டுகிறது. இஃது கணக்கில் நேரிடையாக வந்தவை. இதனை தாண்டி மறைமுகமாக...........

இதற்கு தான் செக் வைத்தது இந்திய மத்திய அரசு. பலகட்ட பொருளாதார தடைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை இந்திய தரப்பில் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

இந்திய தரப்பினருக்கு எங்கு அடித்தால் எங்கே வலிக்கும் என்கிற பாலப்பாடம் அத்துப்படி.

போதா குறைக்கு ராணுவ செலவினங்கள் அதிகரித்து வந்த வண்ணம் இருந்திருக்கிறது.

அதே சமயம் ராணுவ வீரர்கள் தரப்பில் பலமான உயிர் சேதம் அடைந்தது வெளி உலகிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

இதனையெல்லாம் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தே சீனா, தன் படைகளை எந்த வித நிபந்தனைகள் இன்றி பின்வாங்க செய்து இருக்கிறார்கள். முதலில் உலக நாடுகளில் பலவற்றில் இதனை நம்பவில்லை. இந்திய தரப்பினர் மட்டுமே நமட்டு சிரிப்புடன் கவனித்து வந்தனர்.

முற்றிகை இட அவர்களுக்கு 43 நாட்கள் ஆன நிலையில் பின்வாங்க ஏழே நாட்கள் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சரி இந்திய தரப்பில்...... சந்தேகமே இல்லாமல் இது மிகப்பெரிய வெற்றி.

உதாரணமாக

#ஓன்று ; கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது இனி இந்தியாவை சேர்ந்தது.

#இரண்டாவது ; 1963 ஆண்டு வாக்கில் இருந்த நிலைக்கு சீன ராணுவத்தினரை பின் நகர்த்தி இருக்கிறார்கள். இது லடாக்கில்.

#மூன்றாவது ; அஸ்ஸாம் மாநிலம் அமைந்துள்ள இடத்தில் இந்திய எல்லை தெளிவாக வரையறுக்க முடியும் தற்போது.

#நான்காவது ; இனி வரும் நாட்களில் அதாவது மோடி ஆட்சி இருக்கும் வரை இந்தியா மீது எல்லை தாண்டிய நடவடிக்கைகள் சாத்தியம் இல்லை. உடனடி ராணுவ நடவடிக்கை பாயும். உலக அளவில் கவனத்தை ஈர்க்கும்...

#ஐந்தாவது ; இனி பாகிஸ்தான், இந்தியா பற்றி வாயே திறக்காது. ஆனானப்பட்ட சீன ராணுவத்தை கதறடித்து ஓட விட்டவர்களுக்கு தாங்கள் எம்மாத்திரம் என்பது தற்போது நன்றாக உணர்ந்து கொண்டு இருப்பார்கள்.

இவற்றினை எல்லாம் விட பெரிய விஷயம்.,

இந்திய ராணுவத்தினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட வில்லை, எங்கள் பணி இத்தேசம் காப்பது, அதில் என்ன கொண்டாட்டம் வேண்டி இருக்கிறது என்று மௌனம் காக்கிறார்கள்.

காரணம் சீன ராணுவத்தையும் அவமதிக்காமல் அமைதியாக இருந்த இந்த கட்டுப்பாடு தான் உலகை வாயடைக்க செய்து இருக்கிறது.

உயிருக்கு அஞ்சாத மாவீரரர்களான நமது இராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்

ஜெய்ஹிந்த்

ஜெய் ஹிந்த்!

 

நன்றி இணையம்