சாதிரீதியான கணக்கு கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:03 PM | Best Blogger Tips

 


தமிழக தேர்தலில் சாதிரீதியான கணக்கு கள் சரிப்படுமா?

பிஜேபி ஒட்டுமொத்த தமிழகத்தையும்

வளைக்க சாதி அஸ்திரத்தை கையில்

எடுத்து இருக்கிறது என்றே தெரிகிறது

வடக்கில் வன்னியர் தெற்கில் தேவேந்தி ரகுல வேளாளர் கிழக்கில் முத்தரையர்

மேற்கில் கவுண்டர்கள் என்கிற அஸ்தி

ரத்தை வருகின்ற சட்டமன்ற தேர்தலில்

பயன் படுத்த இருக்கிறது.

தமிழகம் வந்த பிரதமர் மோடியை வரவே ற்றவர்களில் ஒரு முக்கியமானவர்

வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் என்

கிற அமைப்பை நடத்தி டெல்டா மாவட்ட

ங்களை கலக்கி வரும் அண்ணன் கே.கே

செல்வகுமார்

கடந்த மாதம் பிஜேபியின் தேசியத் தலை

வர் ஜே பி நட்டா தமிழகம் வந்து இருந்த

பொழுது மதுரையில் வைத்து வீர முத்த

ரையர் முன்னேற்ற சங்கத்தலைவர் கே. கே செல்வகுமாரை சந்தித்து பேசியது ஒரு சாதாரண அரசியல் சந்திப்பாக இரு க்கும் என்று நினைத்து இருந்த நிலையி ல் இப்பொழுது மோடியே செல்வகுமாரை

சந்தித்து இருப்பது அதி முக்கியமான நிக

ழ்வாகவே கருதப்படுகிறது.

தென் தமிழகத்தில் தேவேந்திர குல வே ளாளர் சமுதாயம் மூலமாக கால் ஊன்றி விடலாம் என்று அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 7 உட்பிரிவுகளை ணைத்து தேவேந்திர குல வேளாளர் இனம் என்று மோடியே அறிவித்து அவர்களி ன் பெருமைகளை பேசி தென் தமிழக த்தில் பிஜேபிக்கு ஒரு ஸ்ட்ராங்கான ஆதரவு தளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

அடுத்து இப்பொழுது கிழக்கு தமிழகத்தி ல் வலுவாக உள்ள முத்தரையர் சமூகத்

தை நோக்கி தன்னுடைய பார்வையை

திருப்பி இருக்கிறார் மோடி.திமுகவின்

ஆதரவு தளமான தேவேந்திர குல வேளா ளர் இனத்தையே வளைத்து விட்ட மோடி

க்கு காலம் காலமாக அதிமுக ஆதரவு நி

லையில் உள்ள முத்தரையர்களை பிஜே பிக்கு கொண்டு வருவது ஒன்றும் பெரிய

விசயமாக இருக்கப் போவது இல்லை.

கிழக்கு தமிழகத்தில் உள்ள டெல்டா மா வட்டங்களில் உள்ள சுமார் 30 க்கும் மேற்

பட்ட சட்டமன்ற தொகுதிகளில் முத்தரை யர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்ப தால் முத்தரையர்களை நோக்கி பிஜேபி

யும் பார்வையை திருப்பி விட்டது.

தேவேந்திர குல வேளாளர்கள் மாதிரியே

அரசியலில் அங்கீகாரம் பெறாமல் உள்ள

முத்திரைகள் இன்று வரை அதிமுகவின்

ஆதரவாளர்களாகவே இருப்பதற்கு முக்கி காரணம் எம்ஜிஆர் தான்.எம்ஜிஆர் ஒரு சாதி சங்கம் நடத்திய மாநாட்டில் கல

ந்து கொண்டு இருக்கிறார் என்றால் அது

முத்தரையர்களின் சாதி சங்க மாநாடு

தான்.

1979 ல் எம்ஜிஆர் முதல்வராக இருந்த பொழுது புதுக்கோட்டையில் நடைபெற்ற

முத்தரையர் களின் மாநாட்டில் கலந்து

கொண்டு அவர்களின் 27 உட் பிரிவுக ளை ஒன்றிணைத்து முத்தரையர் என்று

அரசு சட்டம் கொண்டு வரும் என்றார்.

ஆனால் எம்ஜிஆர் அதை அவர் ஆட்சி யில் இருக்கும் வரை செய்ய வில்லை.

ஜெயலலிதா தான் 1996 ல் முத்தரையர்

களின் 27 சாதி பிரிவுகளையும் ஒன்றி ணைத்து முத்தரையர் என்று அரசாணை

யை வெளியிட்டு 1996 சட்டமன்ற தேர்த லை எதிர் கொண்டார்

ஆனாலும் 1996 சட்டமன்ற தேர்தலில் அதே முத்தரையர் வாழும் பகுதிகளிலும்

அதிமுக படு தோல்வி அடைந்தது ஏன்?

சாதிக்கணக்குகள் ஏன் வேலை செய்ய

வில்லை என்று ஜெயலலிதா தலையை

பிய்த்துக்கொண்டார்..இது தாங்க தமிழக

அரசியல்.

அதாவது தமிழகத்தில் சாதிரீதியாக போ

டப்பட்ட கணக்குகள் இது வரை ஜெயித்த

து இல்லை. ஏனென்றால் அரசியல் ரீதி யாகவே சென்னையில் இருந்து கன்னி யாகுமரி வரை உள்ள மக்களிடம் யாரு க்கு வாக்கு? என்பதில் ஒரே மாதிரியான

மன நிலையே இது வரை தேர்தல் கால ங்களில் மக்களிடம் இருந்து வருகிறது.

2001 மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களி ல் கருணாநிதி சாதி கணக்குகளுடன் தான் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்

ஆனால் படு தோல்வி அடைந்தார் என்பதி ல் இருந்து தமிழகத்தில் சாதி ரீதியான

அரசியல் கணக்குகள் வெற்றி பெற வி

ல்லை என்று அறிந்து கொள்ளலாம்.

2001சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கூட்ட ணியில் இருந்த கருணாநிதி வடக்கே தலித்களின் விடுதலை சிறுத்தைகள் கட்சிதெற்கே தேவேந்திர குல வேளாள ர்களி ன் புதிய தமிழகம் மேற்கே கவுண்ட ர்களின் கொங்கு நாடு மக்கள் கட்சி மத்தி

யில் முதலியார்களின் புதிய நீதிக்கட்சி

கிழக்கில் முத்தரையர்களின் தமிழர் பூமி

மற்றும் முத்தரையர் சங்கத்துடன் கூட்ட ணி வைத்தால் வெற்றி பெற்று விடலாம்

என்று சாதிக்கணக்கு போட்டு படு தோல்

வி அடைந்த வரலாறு இருக்கிறது

2011 சட்டமன்ற தேர்தலிலிலும் கருணா நிதில் ராமதாசையும் திருமாவளவனை யும்ஒரே கூட்டணியில் கொண்டு வந்து வட க்கு மாவட்டங்களில் உள்ள அனை த்து தொகுதிகளையும் கைப்பற்றி விட லாம் என்று கணக்கு போட்டார்

ஆனால் கடைசியில் உள்ளதும் போச்சுடா

நொல்லக்கண்ணா என்று திமுக பாமக

விடுதலை சிறுத்தைகள் தங்களின் செல்

வாக்கு மிகுந்த தொகுதிகளிலேயே அதி

முக தேமுதிக கூட்டணியிடம் மரண அடி

வாங்கியதை மறந்து விட மாட்டோம்.

ஏனென்றால் காலம் காலமாக மோதி க்கொண்டு இருக்கும் வன்னியர்களும் தலித்களும் அரசியல் ரீதியாக ஒரே கூ ட்டணிக்குள் அவர்களின் தலைவர்களால் கொண்டு வரப்பட்டாலும் தொண்டர்கள் மத்தியில் அவர்களால் ஒன்றிணைய முடி

யாது என்று கருணாநிதிக்கே பாடம் கற்

பித்தது 2011 சட்டமன்ற தேர்தல்.

ஆனால் அப்பொழுது கருணாநிதி போட்ட து தப்புக்கணக்கு இப்பொழுது பிஜேபி

போடுவது வேறு மாதிரியான சாதிக்கண

க்கு.இது ஒர்க் அவுட்டாக வாய்ப்புகள் இரு

க்கிறது என்றே தெரிகிறது.

பிஜேபி தெற்கில் தேவேந்திர குல வேளா ளர் இனத்தையும் கிழக்கில் முத்தரையர்

இனத்தையும் பிஜேபிக்கு ஆதரவாக கொ ண்டு வந்து வருகின்ற சட்டமன்ற தேர்த லை சந்திக்க நினைக்கிறது.இதனால் இந்த இர ண்டு பகுதிகளிலும் உள்ள ன்னொரு மிகப்பெரிய சமூகமான முக்கு லத்தோர்மக்களுக்கு பிஜேபி மீது கடுமை யான கோபம் வரும்.

ஏனென்றால் தெற்கில் தேவேந்திர குல

வேளாளர் இன மக்களுக்கும் முக்குல த்தோர்க்கும் ஆகாது என்றால் கிழக்கில்

முக்குலத்தோர் மக்களுக்கும் முத்தரை யர் மக்களுக்கும் ஆகாது .இப்படி முக்குல

த்தோர் மக்களுக்கு எதிராக உள்ள இர ண்டு சமுதாய மக்களை பிஜேபி இப்பொ

ழுது தன் பக்கமாக இழுத்துக் கொண்டு

இருக்கிறது.

உடனே பிஜேபி முக்குலத்தோர்க்கு எதி

ரான கட்சி என்று யாரும் நினைக்க வேண்டாம். இது ஒரு நுட்பமான அரசியல்

அதாவது இப்பொழுது அதிமுக பிஜேபி

கூட்டணிக்கு திமுகவை விட பலம் குறை

வாக இருக்கும் இரண்டு ரீஜன்கள் தெற்

கு மண்டலமும் கிழக்கு மண்டலமும் தான்.

இந்த இரண்டிலும் முக்குலத்தோர் தான்

அரசியலை தீர்மானிக்கும் நிலையில்

இருக்கிறார்கள். அதிமுகவின் ஆதரவு

தளமாக இருந்த முக்குலத்தோர் மக்கள்

இப்பொழுது சசிகலாவின் பின்னால்

இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும்

நன்றாகவே தெரியும்.

இந்த நிலையில் பிஜேபி முக்குலத்தோர்

களுக்கு எதிராக உள்ள இரண்டு இன

மக்களை அரவணைத்து அரசியல் செய்

யும் பொழுது அவர்களின் கோபம் பிஜேபி

அதிமுக கூட்டணிக்கு எதிராகவே இருக்கு ம்.இது தான் உண்மையாகும்.இந்த கோப

த்தை பிஜேபி சரியாக பயன் படுத்த இரு

க்கிறது.

வழக்கமாக அதிமுகவின் மீது ஒரு சாதி

மக்களுக்கு கோபம் வந்தால் அவர்கள்

திமுகவுக்கு ஆதரவாக திரும்பி விடுவார்

கள் இது இயற்கையாகும்.இப்படி பார்த்

தால் பிஜேபி அதிமுக கூட்டணி மீது கோப

த்தில் இருக்கும் முக்குலத்தோர் திமுகவு க்கு தான் ஆதரவாக இருப்பார்கள்.

இந்த இடத்தில் தான் பிஜேபி மிக நுட்ப மாக அரசியல் செய்கிறது. பிஜேபி அதிமு கவுக்கு எதிராக உள்ள முக்குலத்தோர் வாக்குகள் சசிகலாவை நோக்கி முழுஅள

வில் திரும்ப வேண்டும் என்று நினைக்கி றது

பிஜேபியை வீழ்த்த தங்களின் அடையாள மாகஇருக்கும் சசிகலாவை நோக்கி திமு கவில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளு ம்திரும்பும் என்று பிஜேபி கணக்கு போடு கிறது.இதற்கான வாய்ப்புகள் அதிகமாக

வே இருக்கிறது.இதனால் முக்குலத்தோர்

அதிகம் உள்ள தொகுதிகளில் பிஜேபி

அதிமுக கூட்டணி VS சசிகலா கட்சி ன்று தான் போட்டி இருக்குமே தவிர திமு காணாமல் போய் விடும்.

இதற்கு தான் பிஜேபி முக்குலத்தோர்க ளுக்கு எதிராக உள்ள தேவேந்திர குல வேளாளர் மற்றும் முத்தரையர் இனத்தி ன் ஆதரவு அரசியலை எடுத்து இருக்கிற து.கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களி ல் திமுகவை காலி செய்யவே இந்த சாதி

அரசியல் கணக்கு.

இது ஒர்க் அவுட்டாகுமா என்று நீங்கள்

கேட்கலாம். ஒரு ஆட்சிக்கு எதிராக மக்க

ளிடம் அதிருப்தி அலை வீசினால் எந்த

ஒரு சாதிக்கணக்கும் ஒர்க் அவுட் ஆகாது

என்பதற்கு 2001 2011 சட்டமன்ற தேர்தல்

முடிவுகள் கூறுகிறது. இருந்தாலும் ஆட்சி

க்கு எதிராக மக்களின் மன நிலை இல்

லை என்றால் சாதிக்கணக்குகள நிச்சய மாக ஒர்க் அவுட்டாகும்

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் பிஜே பி பயன்படுத்திய சாதிக்கணக்குகள் ர்க் அவுட் ஆனது என்று நாளைய தமிழக அரசியல் வரலாறுகள் நிச்சயமாக கூறும்

ஏனென்றால் இது ஆளும் கட்சி மீது மக்க ளின் எதிர்ப்பு அலை இல்லாத தேர்தல்.

நன்றி இணையம்