பணமதிப்பிழப்பால் ஒரு பயனும் இல்லை என்று புலம்புபவர்கள் பலர். இவர்களுக்கு தெரியாத விஷயம் நம்முடைய நாட்டில் அரசுகள் சட்டப்படி மட்டுமே, நடவடிக்கை எடுக்கும், சினிமாவில் வருவது போல 3 மணி நேரத்தில் எல்லாம் முடிவு தெரிந்து விடாது.
இதோ கிட்டதட்ட 4 வருடங்களுக்கு பிறகு, எனக்கு கிடைத்த பல தகவல்களின் அடிப்படையில் உங்களுக்கு அந்த விவரங்கள்.
1) எப்படிப்பட்ட தகவல்கள் திரட்டப்பட்டன?
முதலாவதாக கறுப்பு பணம் என்பது கணக்கில் வராத பணம், அதாவது வருமானத்தை சரியான விதத்தில் காட்டாமல், அதற்கான வருமான வரியை கட்டாத பணம். கடந்த பல பத்து ஆண்டுகளாக இவை நடந்து வருகின்றன. இதனை உடனடியாக முழுமையாக வசூலிப்பது என்பது நடக்காத காரியம். அதற்கு காரணம் இவை முழுமையாக பணமாக மட்டும் இருப்பதில்லை. தங்கமாகவோ, நிலம் போன்ற அசையாத சொத்துகளாகவோ இருக்கும். இவற்றை எப்படி எங்கிருந்து துவங்குவது.
எனவே பல்வேறு வகையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அதன்படி படிப்படியாகவே திட்டமிடப்பட்டன.
- முதலாவதாக ஆதார் – பான் கார்ட் – வங்கி கணக்கு இணைப்பு
- அசையாத சொத்துகள் ஆதார் இணைப்பு
- தங்கம் வாங்க பான் கார்ட் கட்டாயம்
- அனைவருக்கும் வங்கி கணக்கு ஆரம்பம்
- அனைத்து தகவல் பரிமாற்றங்கள், கணக்குகள் டிஜிடல் முறைக்கு கொண்டு வருதல்
இவை அனைத்தும் பத்திரிகைகள், சமூக வளைதளங்கள் மூலம் தவறான நடவடிக்கை என்றும் இதன் மூலம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகவல்களை அரசு எடுத்து கொள்ளும் என்றும் பயத்தை விதைத்து, பிரசாரம் நடத்தப்பட்டன. நீதிமன்ற வழக்குகள் மூலம் தடுக்க அல்லது இயன்றவரை தள்ளிப்போட எல்லாவித முயற்சிகளும் நடந்தன.
இதில் மிகப்பெரிய காமெடி என்னவெனில் வங்கியில் உழைத்த நியாயமான காசை வைத்திருந்தவர்களும், நியாயமாக சம்பாதித்தவர்களும் கூட, முட்டாள்தனமாக இந்த பிரசாரங்களை, உண்மையென நம்பி, அரசை கிண்டல் செய்தும், எதிர்த்தும் வந்தனர். இதனால் இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை கூட புரிந்து கொள்ளாமல், கறுப்பு பண முதலைகளுக்கும், ஏமாற்று பேர்வழிகளுக்கும், உதவி செய்து கொண்டிருந்தனர்.
அனைத்தையும் ஒரே பதிவில் பேச் முடியாது என்பதால் இந்த பதிவில் ஒன்றை மட்டும் எடுத்து கொள்ளலாம். பணமதிப்பிழப்பிற்கு பிறகு எந்தெந்த வங்கி கணக்குகளில் 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
2) என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
மொத்தம் 18 லட்சம் வங்கி கணக்குகள், இப்படி டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏறக்குறைய 4.3 லட்சம் கோடி அளவிற்கான கருப்பு பணம் (வரி கட்டாதவை) கண்டுபிடிக்கப்பட்டன.
இவர்கள் முந்தைய வருமானம் அவரவர் தகுதிக்கேற்ப சரிபார்த்தல், அவர்கள் கணக்குகளை மதிப்பிடல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு, பதிலளிக்க வாய்ப்பளிக்கப் பட்டு, ஆராயப்பட்டன.
இவர்களில் உண்மையில் தவறான கணக்கை காண்பித்தவர்கள், விவாத் ஸே விஸ்வாஸ் திட்டம் மூலம் அபராத தொகையுடன் விடுவிக்கப்பட்டனர்.
3) இதுவரை அரசுக்கு கிடைத்தது என்ன?
இதுபோல் இதுவரை செட்டில் செய்யப்பட்டவை, ஏறத்தாழ ஒரு லட்சம் கோடிக்கான கறுப்பு பணத்திற்கு எதிராக சுமார் ரூ72,840 கோடி அளவிற்கான அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள சுமார் 3-3.5 லட்சம் கோடிக்கான வழக்குகள் நடந்து வருகின்றன. கோவிட் காரணமாக இதன் கடைசி தேதி மார்ச் 2021 வரை நீடிக்கப்பட்டுள்ளன.
புதிய நோட்டுகளை முதல்முறை அச்சடிக்க ஆன செலவு ரூ 8000/- கோடி.
அடுத்து அசையாத சொத்துகள் ஆதார் இணைப்பு வெற்றி பெறும்போது, இன்னமும் அதிகமான கறுப்பு பணம் வெள்ளையாக மாற்றப்படும். வருமான வரி மற்றும் GST போன்றவை அதிகரிக்கும்.
இதனால் பயன் பெறப்போவது பொது மக்களே.
[https://rbidocs.rbi.org.in/.../IDFS5EBBDCCB9C274F0E921997...](https://rbidocs.rbi.org.in/.../IDFS5EBBDCCB9C274F0E921997...)
[https://www.ndtv.com/.../unusual-deposits-of-rs-1-7-lakh...](https://www.ndtv.com/.../unusual-deposits-of-rs-1-7-lakh...)
[https://www.thehindubusinessline.com/.../article9814379.ece](https://www.thehindubusinessline.com/.../article9814379.ece)
[https://www.financialexpress.com/.../vivad-se.../2131462/](https://www.financialexpress.com/.../vivad-se.../2131462/)
[https://taxguru.in/.../operation-clean-money-ocm...](https://taxguru.in/.../operation-clean-money-ocm...)
[https://economictimes.indiatimes.com/.../art.../67148332.cms](https://economictimes.indiatimes.com/.../art.../67148332.cms)
[https://taxguru.in/.../happen-submission-response-notices...](https://taxguru.in/.../happen-submission-response-notices...)
[https://taxguru.in/.../verification-cash-deposit...](https://taxguru.in/.../verification-cash-deposit...)