ஒரு தெரு நாய் சிவாலய வளாகத்துக்கு அருகே எப்போதுமே
திரிந்து
கொண்டிருக்கும்,
அது அந்த
ஊரில் போடப்படும்
எச்சில்
இலை
உணவுகளை
சாப்பிட்டு
வாழ்ந்தும்
வந்தது,
இப்படியாக
வாழ்ந்து
வந்த
காலத்தில்,
அந்த ஊரின் சிவாலயத்தில்
திருவிழா
தொடங்கியது,
அந்த ஊரில் அனைவருமே
பத்து நாட்களுமே
விரதம்
இருந்தார்கள்,
விரத காலங்களில்
சாப்பிட்ட
இலைகளை
நாய்க்கு
போடக்கூடாது
என்ற ஒரு நம்பிக்கையில்,
யார் வீட்டிலுமே
எச்சில்
இலைகளை
தூக்கி
வெளியே
போடவே
இல்லை,
நாய்க்கு
எச்சில்
இலையே
கிடைக்காததால்,
பசி தாங்க முடியாமல்,
கோயிலின்
ஓரத்தில்
வந்து
படுத்து
கிடந்தது,
அப்போது
அந்த
சிவாலயத்தில்
இராமாயணம்
பற்றி
பேச்சாளர்
ஒருவர்
பிரசங்கம்
பண்ணி,
இராமேஸ்வர
தல மகிமையை
விளக்கமாகவே
பேசினார்கள்,
அதனை
அப்போது,
அந்த நாயும்
காது
கொடுத்தே
கேட்டதாம்
!!
ஆஹா !! இராமேஸ்வரத்துக்கு இத்தனை மகிமையா ??
எல்லோரும்
போகனும்ணு
சொல்றாங்களே
!!
நாமும்
தான்
இப்படியே
எச்சில்
இலையை
பொறுக்கி
தின்றே
காலத்தை
கழித்து
விட
முடியுமா
என்ன
??
போகிற வழிக்கு
ஒரு புண்ணியம்
சேர்க்க
வேண்டாமா
??
என்று
எண்ணிய
படியே,
இன்றிலிருந்து
பத்து நாட்களும்
விரதமாகவே
இருந்து,
திருவிழா
முடிந்ததும்,
கண்டிப்பாக
இராமேஸ்வரத்திற்கு
நடைபயணமாக
போக
வேண்டியது
தான்
என்று
முடிவு
செய்தது,
தினமும்
தொடர்ந்து
கோயிலில்
நடக்கும்
பிரசங்கங்களை
கேட்கும்,
நாளடைவில்
அதற்கு
இராமேஸ்வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது,
விரதத்தில்
இருந்ததால்,
பசி கொடுத்த
வைராக்கியம்
வேறு இருப்பதால்,
திருவிழா
முடிந்ததும்
இராமேஸ்வரம்
போயே
தீருவது
என்று
உறுதியாக
இருந்தது,
திருவிழா
பத்தாம்
நாள்
முறைப்படி
நிறைவாகி
கொடியை
இறக்கினார்கள்,
நாயும்
இராமேஸ்வரம்
புறப்படத்
தயாராகி
நடை
பயணத்தை
தொடங்கியது,
முதல் அடி எடுத்த
வைத்த
பொழுதே,
ஒரு வீட்டின்
பின்
பக்கத்தில்
*"பொத்"*
என்று
ஒரு
சத்தம்
கேட்டது,
திரும்பிப்
பார்த்தால்,
ஆஹா !!
என்ன மணம் ?? என்ன சுவை ?? நல்ல கறி
விருந்தாக
இருக்கும்
போலிருக்கிறதே
!!
நிறைய வேறு
மிச்சம்
வைத்து
இலையை தூக்கி
போட்டிருக்கிறான்
புண்ணியவான்
!! என்று எச்சில்
இலையை
தூக்கி
போட்டவனை
வாழ்த்திய
படியே
அதில்
போய்
வாயை
வைத்து
கொண்ட
படியே,
நல்ல வேளை இந்நேரம்
இராமேஸ்வரம்
போயிருந்தால்,
இந்த கறி விருந்து
கிடைத்திருக்குமா
?? என்றே நினைத்து
கொண்டதாம்
!!
இந்த நாய் தான்
நமது ஆழ்மனம்,
நம் மனம் இருக்கிறதே
ஆட்டம்
போட
எதுவும்
கிடைக்காத
பொழுது,
ரொம்ப அடக்கமாகவும்,
சுவாமி
மீது
பக்தி
பண்ணுவது
போலவும்,
நம்மை போல புண்ணியசாலி
யார் இருக்கிறார்கள்
?? என்றும் எண்ணிக்
கொண்டு
நல்லவன்
போலவே
கபட
வேஷம்
போடும்,
ஆனால்,
தப்பு செய்யும்
வாய்ப்பு
கிடைத்ததோ
இல்லையோ
!?
சாமியாவது,
பூதமாவது
!?
அதுக்கெல்லாம்
இன்னும்
வயசு
இருக்குதுய்யா
!!
இப்பவே
உத்ராட்சம்
போட்டுகிட்டு,
திருநீறு
பூசிக்கிட்டு
காசி
இராமேஸ்வரம்னு
போய்ட்டா
??
வாழ்க்கையை
எப்பத்
தான்
அனுபவிக்கிறது
எனவும்
கேட்கும்,
ஏதாவது
கஷ்டம்
வந்து
விட்டால்,
உடனே,
கோயில்
குளம்
சாமி
ஞாபகம்
எல்லாம்
அப்போது
தான்
வரும்,
இதுவே வாழ்க்கை
சுமூகமாக
ஆகிவிட்டால்
பழைய படியே ஆட்டம்
போடும்,
அதே நாய்,
இரவு முழுக்க
குளிர்
தாங்க
முடியாமல்
திண்ணையில்
படுத்திருக்கும்
பொழுதே,
என்னா
குளிருப்பா
சாமி
??
பொழுது
விடிஞ்சதும்,
முதல் வேலையா
போய்,
ஒரு நல்ல போர்வையா
வாங்கிடனும்,
அப்பத்
தான்
நாளைக்கு
நாம
உயிரோடவே
இருக்க
முடியும்னு
நினச்சிக்கும்,
பொழுது
விடிஞ்சதும்,
சூரியன்
தகதக
என்று
வெப்பத்தை
பரப்பிக்
கொண்டு
வருவதை
பா்த்தவுடனே,
அடாடா !!
எவ்வளோ
பெரிய
தப்பு
பண்ணப்
பார்த்தோம்
!!
இந்நேரம்
போர்வையை
வாங்கியிருந்தா
??
காசில்லே
வீணா
போயிருக்கும்
!! எனவும்
நினைத்தது,
மீண்டும்
அடுத்த
நாள்
பனியில்
வாடும்
போது,
இன்றைக்கு
இரவு போர்வை
வாங்கியே
தீரனும்ணு
நினைக்கும்,
இது தான்
நம்மில்
பெரும்பாலரது
செயற்கையான
கடவுள்
வழிபாடும்
!!
துன்பம்
வரும்
போது கடவுளைப்
பற்றி
நினைப்போம்,
உருகுவோம்,
சிக்கலின்றி
நன்றாக
வாழும்
போது,
கடவுள்
வழிபாட்டுக்கு
இன்னும்
நமக்கு
வயது இருக்கிறது
என்று
நினைப்பதோடு
அல்லாமல்,
இளமையில்
சாமி கும்பிடுபவர்
களையும்
கெடுப்போம்
!! கிண்டலடிப்போம் !!
சும்மாவா
பாடினார்கள்
பெரியவர்கள்;
ஒன்றுமே
பயனில்லை,
என்று உணர்ந்த
பின்பே
சிவனே
உண்டென்பார்
!!
ஒவ்வொரு
மனிதரும்
ஒரு நாள் இந்நிலை
எய்துவது
உறுதி,
இதை மறந்தார்
!! அன்று செயல் அழிந்து
தலம்
வரும்
பொழுது,
சிவன் பெயர்
நாவில்
வாராதே
!!
ஆதலினால்
மனமே,
இன்றே,
சிவன் நாமம் சொல்லிப்
பழகு
!!
எண்ணிக்கைகளாலோ,
பகட்டு
வேடங்களிலோ,
கட்டணம்
கட்டியோ,
வரிசையில்
அனைவரையும்
முந்தியே
கூட,
நாம் எப்போது
வேண்டுமானாலும்,
*கூட்டத்தோடே*
*இறைவனைக்*
*காணலாம்*,
ஆனால்,
எண்ணங்கள்
உண்மையானால்
தான்,
பெருங்கூட்டத்திலும்,
*இறைவனே*
*தனித்தே*
*நம்மைக்*
*காண்பான்*
அருளாசி
வழங்குவான்.