*காவலர்களின்* *மனைவிகளுக்கு*
*சமர்ப்பணம்*....
மங்கையராய்
பிறப்பதற்கு
மா தவம் செய்தவளே....
காவலனை
கணவனாக்க
என்ன
பாவம் செய்தாயோ...
வாரத்தின்
ஏழு
நாட்களும்
மாதத்தின்
முப்பது
நாட்களும்
வருடத்தின்
முன்னூற்று
அறுபத்தைந்து
நாட்களும்
தூக்கம்
நிச்சயிக்கப்
பட்டவளே....
உனக்கு
என்னை
நிச்சயிக்கப்
படும்போது
தெரியாதா
?
எனக்கு
தூக்கம்
எனபதே
நிச்சயமல்ல
என்று...
காவலன்
என்றதும்
"காக்க"
"காக்க "சூர்யா
போலவும்
கஞ்சிபோட்ட
கதர் சட்டை போலவும்
விரைப்பாக
நிற்பேனென்று
நினைத்தாயோ...
அடிபணிந்து
அடிபணிந்தே
நம் வீட்டு
வாசல்
படி கூட மறந்து
போகும்
எனக்கு...
கஷ்டப்பட்டு
கடன்பட்டு
கட்டியது
நம்
வீடு
இரவுப்பணியிலும்
இரவுப்பனியிலும்
கண்ணயர்ந்தால்
படுக்ககிடைப்பது
ஏதோ ஒரு சாக்கடை
மேடு
சிலவேளை
சர்க்கார்
ரோடு
சிலவேளை
சவமெரியும்
சுடுகாடு...
இதுதான்
நான்
தினம் தினம் படும்பாடு...
சன்னியாசிக்கும்
எனக்கும்
சில
வேறுபாடு...
அவன் "காவி"
அணிந்திருப்பான்
நான் "காக்கி"
அணிந்திருப்பேன்...
அவன் தாடி வச்சிருப்பான்
நான் தடி வச்சிருப்பேன்
(லத்தி
..பிரம்பு)
அவன் திருவோடு
வச்சிருப்பான்
நான்
இருகோடு
வச்சிருப்பேன்
(கிரேடுஒன்)
அவன் குடுமி
வச்சிருப்பான்
பராமரிக்க
மாட்டான்
நான் குடும்பம்
வச்சிருப்பேன்
பராமரிக்க
முடியாது...
அதிகாரிக்கு
விஷ் பண்ணி மதித்திடுவேன்
உன்னையும்
பிள்ளையும்
கிஸ்
பண்ணக்கூட
மறந்திடுவேன்...
துப்பாக்கி
ஏந்தி
நிற்பேன்
பாசத்திற்கு
ஏங்கி
நிற்பேன்
மரத்தடி
நிழலில்
அயர்ந்திடுவேன்
மரத்தடியை
பெஞ்சாக்கி
அமர்ந்திடுவேன்
தீபமேற்ற
திருவண்ணாமலை
சென்றதுமே
நம் வீடு
தீபமேற்றாமல்
கிடந்திடுமே...
நானில்லை
என்றதும்
நீ
தாய்
வீடு
சென்றிடுவாயே...
என்றாவது
ஒருநாள்
என்னோடு
தூங்கலாம்
என்று
கனவுகூட
காணாதே!
தூக்கமே
கனவாகிப்போனால்
தூங்குவது
எப்படி
சாத்தியம்?
நான் காவலனாய்
தேர்ந்தெடுக்கப்
படவில்லை!
காவலனாய்
நேர்ந்துவிடப்
பட்டிருக்கிறேன்.
அதனால்
நான்
சோர்ந்துவிடப்
போவதுமில்லை
(வேற
வழி....?)
ஆவணமின்றி
வருபவன்கூட
ஆணவமாய்
பேசுவான்
நானோ நாணமேயின்றி
பேசவேண்டும்
இல்லையேல்
கோவணம்
கூட
மிஞ்சாது.....?
பசி வந்தால்
பத்தும்
பறக்கலாம்
நாங்க போலீஸ்
என்கிற
கெத்து
மட்டும்
பறக்காது
நண்பர்களே
படிங்க...!
ரசிங்க
....!
சிரிங்க.....!
ஊரே என்
பொழப்ப
பார்த்து
சிரிக்கும்போது,
உங்களுக்கு அந்த உரிமையில்லையா...?
காவலன்
நிலை
நீங்கள்
உணர
வேண்டுமென்ற
உரிமையுடன்....
நன்றி காவலர் சமூகம்
காவல் பணி எவ்வளவு பிரச்சினைக்கிடையே, கலவரக்கிடையே, பணியாற்றுகிறார்கள். அவா்கள் இருப்பதால் தான் நாம் நிம்மதியாக வீட்டில், ஊாில் இருக்கிறோம். முடிந்தவரையிலும் அவர்கள் பணியின் பொழுது மற்ற நேரங்களில் அவா்களை மாாியதையுடன் நடத்துவோம்.
அவா்கள் நம்மை காக்கும் எல்லைசாமிகள்.
நன்றி !
நன்றி காவலர் சமூகம்
காவல் பணி எவ்வளவு பிரச்சினைக்கிடையே, கலவரக்கிடையே, பணியாற்றுகிறார்கள். அவா்கள் இருப்பதால் தான் நாம் நிம்மதியாக வீட்டில், ஊாில் இருக்கிறோம். முடிந்தவரையிலும் அவர்கள் பணியின் பொழுது மற்ற நேரங்களில் அவா்களை மாாியதையுடன் நடத்துவோம்.
அவா்கள் நம்மை காக்கும் எல்லைசாமிகள்.