தூற்றுபவர் தூற்றட்டும்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:12 PM | Best Blogger Tips



"நம்மை அவசியமற்று திட்டுபவர்களை ஓரங்கட்டுவது எப்படி?!

ஒருநாள் கௌதம புத்தர் பிச்சைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில்

அவர் உபதேசங்களில் உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி ஏசினான்.

அவன் திட்டத் திட்ட புன்னகை மாறாமல் புத்தர் சென்று கொண்டிருந்தார்.

பின்னாலேயே வந்து திட்டி ஓய்ந்தவனுக்கு அவர் புன்னகை சகிக்க முடியாததாகவும் வியப்பைத் தருவதாகவும் இருந்தது.

என்ன மனிதனிவர் என்று வியந்தவன்
"ஏனய்யா இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று கேட்டான்.

கௌதமர் அமைதியாகக் கேட்டார். "ஐயா, ஒரு பொருளை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கையில் அவர் வாங்கிக் கொள்ள மறுத்தால் அப்பொருள் யாருக்குச் சொந்தம்?"

"கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தம். இதிலென்ன சந்தேகம்?" என்றான் அவரைத் திட்டியவன்.

"ஐயா. அது போல நான் தாங்கள் வழங்கிய ஏச்சுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே அதெல்லாம் தங்களுக்கே" என்று சொல்லிய கௌதமர் புன்னகை மாறாமல் அங்கிருந்து நகர, அவரைத் திட்டியவன் பேச்சிழந்து நின்றான்.

மற்றவர்கள் தருவதை எல்லாம் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற கட்டாயமில்லை.

ஒவ்வொருவர் கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை"!!!

 நன்றி  : #ஓஷோ