மத்தியரசே பொன்.மாணிக்கவேலு அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கு
=================================
=================================
சிலை கடத்தல்காரர்களைத்தான் அவரால் பிடிக்கமுடியவில்லையே தவிர சிலைகளை மீட்பதில் வெற்றிபெற்றிருக்கின்றார் பொன்மாணிக்கவேல்
ஆம், இந்தியாவின் சட்டத்தின் ஓட்டைபடி இங்குள்ள குற்றவாளிகளை அவரால் நெருங்கமுடியவில்லை, ஆற்றாமை கண்ணீரை மட்டும் அவரால் துடைக்க முடிந்தது
கடத்தல் சிலைகள் பல அவரால் மீட்கபடுகின்றன, ஏற்கனவே குஜராத்தில் இருந்து ஐம்பொன் சிலைகள் தஞ்சை கோவிலுக்கு திரும்பியதும், அது வந்ததில் இருந்தே காவேரி சிக்கல் தீர்ந்ததையும் நாமெல்லாம் அறிவோம்
ஆஸ்திரேலிய நாட்டு மியூசியம் நடராஜர் சிலையினை திருப்பி கொடுத்து அதுவும் கல்லிடைகுறிச்சி ஆலயம் வந்தது இன்னும் ஏராளமான சிலைகளை அவர் மீட்டெடுத்தார் வரவேண்டிய சிலைகள் இன்னும் ஏராளம் உண்டு பொன்மாணிக்கவேல் வந்ததும் சிலை கடத்தல் விவகாரமே பூதமாக வெளிவந்தது,
கொஞ்சநாள்தான் சிலைகடத்தல் வழக்கினை விசாரித்தார் பொன் மாணிக்கவேல் ஆனால் அவர் சொல்லும் விஷயம் எல்லாம் அதிர்ச்சி ரகம்
பெரும் தலைகள் சிக்கி இருக்கின்றன, உச்சமாக 7 ஆயிரம் கோவில்களில் போலி சிலை இருக்கின்றது என சொல்லி அதிர வைக்கின்றார்
இது மிக மிக சீரியசான விஷயம்
ஆலயங்களும், சிலை கடத்தல் விஷயமும் மத்திய அரசு கட்டுபாடுக்கு செல்ல வேண்டிய நேரமிது
இதில் மாநில சுயாட்சி மண்ணாங்கட்டி எல்லாம் சொல்ல முடியாது, மாநில உரிமையில்தான் இவ்வளவு அழிவு நடந்திருக்கின்றது
7000 சிலைகளை காக்க முடியாத அந்த மாநில உரிமை எதற்கு, ஆலய விவகாரங்கள் உடனே மத்திய இலாக்காவிற்கு மாற்றபடட்டும்
சிலைகள் இத்தேசத்தின் சொத்துக்கள், அதனை கடத்தியவன் யாராய் இருந்தாலும் மிக பெரும் நடவடிக்கை எடுத்து அந்த துரோகியினை தண்டித்து சிலைகளை மீட்க வேண்டும்
ஆலயங்கள் மத்திய அரசின் கட்டுபாட்டிற்கு செல்லட்டும், அதுவன்றி இங்கு ஒரு கல் கூட மிஞ்சாது
இந்துக்களின் ஆலயத்தையும் அந்த சிலைகளையும் மீட்டெடுத்து பாதுகாக்க உண்மையுள்ள ஒருவருமா இல்லை?
மாலிக்காபூர் தென்னகத்தை சீரழித்தபொழுது விஜயநகர மன்னர்கள்தான் வந்து ஆலயத்தையும் சிலையினையும் காத்தார்களாம்
அப்படி இனி எங்கிருந்தாவது யாரையாவது அழைத்து வந்துதான் இங்கே எல்லாவற்றையும் காக்க வேண்டும் போலிருக்கின்றது
வேறு யாரேனும் வந்து காக்கட்டும், தெய்வங்கள் பொன்மாணிக்க்க வேல் போல நல்ல தூதனை அனுப்பட்டும்
பொன்மாணிக்க வேலின் சாதனை கொஞ்சமல்ல
ஒவ்வொரு இனத்திற்கும் தனிபெரும் அரசன் என்றொருவன் இருப்பான், அம்மக்கள் அவனை அப்படி கொண்டாடுவார்கள், அவன் சம்பந்தமான பொருட்களை கண் போல் பாதுகாப்பார்கள்
காலம் மாறினாலும், அந்நாடு வீழ்ச்சி அடைந்தாலும் அந்த பெருமையின் அடையாளத்தை அழியவிடமாட்டார்கள்
அரசன் அடையாளம் என்று அல்ல, தங்கள் வரலாற்று சின்னங்களை எல்லாம் அப்படி பாதுகாப்பார்கள்
தமிழருக்கு ராஜராஜசோழன் மாபெரும் அடையாளம், சந்தேகமில்லை அவன் காலத்தில் அவன் தென்கிழக்கு ஆசியாவின் ஒரே மன்னன். அரசனுக்கெல்லாம் அரசன்
தஞ்சை தரணி அவனால் பெரும்புகழ் பெற்றது.
அவனின் கற்கோவில் உலக அதிசயமானது
அப்படிபட்ட அந்த ராஜராஜனின் ஐம்பொன் சிலை 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது
அவனின் சிலை என்றல்ல, அக்கால மன்னரும் சிற்பிகளும் அரும்பாடுபட்டு உருவாக்கிய அழகு சிலைகள் பெரும்பாலும் கடத்தபட்டன
ஆலயங்கள் அக்காலத்தின் மன்னர்கள் அல்லது ஜமீன்களின் கட்டுபாட்டில் இருந்தவரை அவற்றின் பாதுகாப்பும் பராமரிப்பும் மிகசரியாக இருந்தன
ஆனால் மக்களாட்சியில் அது சாத்தியமின்றி போயிற்று, போதாகுறைக்கு நாத்திகவாதம் வேறு ஆலயங்களின் எதிர்காலத்தை கேள்வி கேட்டது
சிலைகளை உடைத்து ரோடுபோடுவோம் என்று முழங்கினார்களே தவிர, அதனை செய்ய எவ்வளவு கஷ்டம் என்பதையோ, இனி அப்படி செதுக்கவே முடியாது என்பதையோ உணரவில்லை
அச்சிலையின் அருமை தெரியவில்லை மாறாக அதன் அருகே நின்ற பிராமணுக்காக சிலையினை மறந்தார்கள், அக்கலையினை கண்டுகொள்ள மறுத்தார்கள்
ஆனால் அச்சிலைகளின் அருமையும், பெருமையும் வெள்ளையனுக்கு தெரிந்தது
வெள்ளையனிடம் ஏராளமான பணமும் நவீன ஆயுதமும் உண்டே தவிர, தொன்மை என்பது இல்லை. பழம் பொருள் என எதுவுமில்லை
கல்லை செதுக்க கூட அவனால் முடியும், ஆனால் காலப்பழமை கிடைக்குமா? நடக்குமா?
அந்த பழம்காலம் என்ற அடையாளம் அவனிடம் இல்லை, இதனால் அக்காலத்திலே கல்லிலே அல்லது ஐம்பொன்னிலே கலைவண்ணம் கண்ட தமிழரின் சிலை பெருமை அவனுக்கு தெரிந்தது
சில்லறைகளை தட்டிவிட்டு எத்தனை கோடி கொடுத்தும் வாங்கிகொள்ள துடித்தான், விளைவு இங்கு சிலை கடத்தல் ஆரம்பமானது
தன் வரலாற்றை கொஞ்சமும் நினைத்துபார்க்காத , தன் முன்னோர்கள் வரலாற்றை அறவே நினையாத இனம் தமிழினம், அதில் இருந்த சில்லுண்டிகள் துணை போயினர்
ஏராளமான சிலைகள் 1960ல் இருந்தே கடத்தபட்டன, இங்கு கண்டுகொள்ள யாருமில்லை. அர்ச்சகர் ஆவது எந்த சாதி என சண்டையிட்டார்களே தவிர அச்சனை சிலை என்னாயிற்று என யாரும் கேட்கவில்லை
இப்படி ஏராளமான சிலைகள் கடத்தபட்டது, அப்படி கடத்தபட்டதுதான் மாமன்னன் ராஜ ராஜன் சிலையும் அவன் மனைவி உலகமகாதேவி சிலையும், அதை மீட்டு வந்தார் மாணிக்கவேல்
இங்கு திராவிட கண்மணிகளி சிமென்ட் சிலை, போராளிகள், சாதி சங்க தியாகி சிலைகள் ஊரெல்லாம் நிறுவபட அருமையான ஆலய சிற்பங்களும் சிலைகளும் காணாமலே போய்கொண்டிருந்தன
மதுரை மரகத லிங்கமும் காணாமல் போனது, பழனி நவபாஷாண சிலைக்கே சிக்கல் வந்தது
இந்நிலையில்தான் மாபெரும் திருப்பமாக சிலை கடத்தல் துறை அமைக்கபட்டு அதற்கு பொன்மாணிக்க வேல் எனும் நேர்மையான அதிகாரி தலைவராக்கபட்டார்
அவரின் பணிகள் வாழ்த்துகுரியவை, சிலை கடத்தல்களை தடுப்பது மட்டுமன்றி மீட்கவும் செய்கின்றார்
பல சிலைகள் மீட்கபட்டன, அந்த வரிசையில் இந்த ராஜராஜ சிலையும் அவரால் மீட்கபட்டன
சிலை கடத்தல் நெட்வொர்க் முதல் பல விஷயங்களை நூல்பிடித்து வெளிகொண்டு சிலைமீட்ட முதல் அதிகாரி அவர்தான்
நிச்சயம் அவர் வாழ்த்குரியவர், அவர் பணி தொடரட்டும்
அமெரிக்காவில் மட்டும் கடத்தபட்டு பிடிபட்ட தமிழக சிலைகள் ஏராளம் இருக்கின்றன, கொண்டு செல்லுங்கள் என அமெரிக்காவும் சொல்கின்றது
ஆனால் எந்த ஆலயத்தின் சிலை? அவைகள் கணக்கென்ன? எங்கு எந்த இடத்தில் இருந்தது என்ற தகவல் தமிழகத்திடம் இல்லை
இனி மீட்டு வந்தாலும் அருங்காட்சியகத்தில்தான் இருக்கும், அதற்கென்ன தாரளமாய் இருக்க்கட்டும் இல்லை ஆலயம் அமைக்கபட்டு அமர்த்தபடட்டும்
ராஜராஜசோழன் சிலை மீட்கபட்டது பெரும் சாதனையும் மகிழ்ச்சியுமாகும்..
உண்மையில் கோவில் என்றால் உடனே பிராமணர் ஒழிக, என்ற வறட்டு கோஷம் எழுந்தது இங்கு பெரும் சோகம்
அக்கால மக்களும் மன்னர்களும் எப்படி அரும்பாடு பட்டு இந்த ஆலயங்களை உருவாக்கி இருக்கின்றார்கள்? அதன் பிரமாண்டம் என்ன? தூண்கள் என்ன?
இனி நம் தலைமுறை தலைகீழாக நின்றாலும் அப்படி ஒரு ஆலயம் உருவாக்கமுடியும்?
மலைமீது பிரமாண்ட ஆலயம் அமைத்திருக்கின்றார்கள், நாம் ஏறி இறங்குவதற்குள்ளே முடியவில்லை, எப்படி கல் மண் சுமந்தார்கள் எப்படி கட்டினார்கள்?
ஆலயங்களை விடுங்கள், அந்த தெப்பகுளங்களை நினைத்தாலே மகா ஆச்சரியம்.
வாழ்வே ஆலயபணி என அக்கால மக்கள் வாழ்ந்து உழைக்காமல் அது சாத்தியமில்லை, அப்படி உழைத்திருக்கின்றார்கள்
அந்த ஆலயங்கள் எல்லாம் தமிழரின் பெருமைகள், அழியா அடையாளங்கள். சும்மா பிராமணன், கட்டுகதை அது இது என முழுக்க புறக்கணிப்பதெல்லாம் மடத்தனம்
ராஜராஜ சோழனின் சிலை மதிப்பு 100 கோடி என்கின்றது மதிப்பீட்டு குழு. அதன் உண்மை விலை பல மடங்கு இருக்கலாம்
இனி அச்சிலை மிக கண்ணும் கருத்துமாக காக்கபட வேண்டும்
இந்த திக, பகுத்தறிவு எல்லாம் இப்பொழுது வந்து அவ்வளவு விலையா? அப்படியானால் சிலைகளை எல்லாம் விற்று மருத்துவமனை , பள்ளி எல்லாம் கட்டலாமே என்பார்கள்
அவனை எல்லாம் தெப்பகுளத்திலே மூழ்கடித்து கொல்ல வேண்டும், காரணம் இப்படி பேசிபேசித்தான் தமிழகத்தையே விற்றுவிட்டார்கள்.
இனியாவது தமிழக பொக்கிஷங்கள் மீட்கபடட்டும். அவை தமிழ் சமூகத்து கலைவடிவங்கள். ஒரு காலத்தில் இச்சமூகம் வாழ்வாங்கு வாழ்ந்தது என்பதற்கான சாட்சிகள்
பழைய மன்னர்களின் ஆர்வத்தையும், சிற்பிகளின் ஆத்மாவினையும் பொன்மாணிக்கவேல் அவர்களிடம் தமிழகம் காண்கின்றது
அவருக்கு தமிழரின் நன்றியுடைய வணக்கங்கள், அவர் பணி தொடர வேண்டும் என்பதுதான் தமிழக மற்றும் இந்துமக்களின் இந்த மண்ணின் பழம்பெருமையினை காக்க விரும்புவோர் வேண்டுகோளாகும்
நிச்சயம் ஒரு அரசியல்வாதிக்கும் அவரை பிடிக்கவில்லை, தமிழக அரசோடு சேர்த்து எல்லா கட்சியும் அவரை முடக்க பாடுபடுகின்றது, ஏதோ ஒரு சக்தி எல்லா கட்சியினையும் ஊமையாக்கி வைத்திருக்கின்றது
இங்கு எல்லா கிரிமினல்களும் எல்லா கட்சியின் அடியாழம் வரை ஊடுருவியபின் ஒரு நியாயத்தையும் தேசமுடியாது, அதை தெய்வமே தீர்க்கட்டும்
தெய்வம் மாநில அரசு மாணிக்கவேலுக்கு எல்லா தொல்லையும் கொடுத்ததை கண்ட நீதிமன்றமே அவருக்கு பதவி வழங்கியது, அதை நீட்டி கொடுத்தது
இப்பொழுது ஆதாரங்களை வைத்துவிட்டு போ என அவரை மிரட்டுகின்றது தமிழக அரசு
நீதிமன்ற தீர்ப்பு படி தன் ஆவணங்களை நீதிமன்றத்தில்தான் மாணிக்கவேல் கொடுக்கமுடியும் அதுதான் சரி, மாநில அரசு செய்வது அடாவடி தனம்
பொன்மாணிக்க வேலால் திறமையாக
உழைக்கமுடிகின்றது மனதாலோ உடலாலோ அவர் தளரவில்லை இன்னும் 30 ஆண்டுகள் உழைக்கும் பலத்தோடு அவர் இருக்கின்றார்
அம்மனிதருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்காவிட்டால் என்ன நியாயம்?
ஒவ்வொரு இந்து ஆலயமும் அள்ளிகொடுக்கும் காணிக்கை என்ன? பழனி கோவில் வருமானம் என்ன?
அதில் இருந்துதானே பொன்மாணிக்கவேலுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும், மாறாக அரசியல்வாதிகள் பாக்கெட்டில் இருந்தா கேட்கின்றார்கள், அப்படியும் ஊதியமின்றி உழைக்க தயார் என்கின்றார் பொன்மாணிக்க வேல்
தமிழக அரசு பெரும் அநியாயம் செய்கின்றது
பொன்மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என்றால் தமிழகம் சும்மா விடுவது போல் தெரியவில்லை, தமிழகம் அவருக்காய் போராட தயாராகின்றது
நீதிமன்ற கதவுகளை அவசரமாய் தட்ட தயாராகின்றது, கோவில் சிலைகளுக்கான நீதியினை பெற தயாராகின்றது
நிச்சயம் அவருக்கு கால நீட்டிப்பு வேண்டும், தெய்வத்தின் விருப்பமும் அதுவே..
தேசத்தின் இந்துக்கள் இந்த சிக்கலை கையில் எடுத்து பொன்மாணிக்கவேல் மூலம் ஆலய சிலைகள் நாடு திரும்ப களமிறங்குதல் வேண்டும்
ராமர் கோவில் நிலத்தை மீட்டது போல இந்துமக்கள் இந்த தேசத்தின் பெருமை வாய்ந்த சிலைகளை மீட்டெடுக்கட்டும்
இங்கு எவனையும் தண்டிக்க வேண்டாம், இங்கு ராஜிவ் குற்றவாளி மீதே கைவைக்க முடியாது, ஒரு பயலையும் பிடிக்க வேண்டாம்
அவனை தெய்வம் பார்த்துகொள்ளட்டும்
இங்கு சிலை மீட்பே அவசிய நடவடிக்கை, மற்ற நாடுகள் இந்தியாவுடன் நல்லுறவில் இருக்கும் இந்நேரத்தில் நமது தெய்வ திரு உருவ திருமேனிகளை மீட்டு கொண்டு வர பொன்.மாணிக்கவேல் அவர்களுக்கு சிறப்பு அதிரியாக மத்தியரசு பணி நீட்டிப்பு செய்ய வேண்டும்...
இதற்கு முன்னுதாரணம் ஓய்வு பெற்ற பிறகும் விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களுக்கு கடந்த ஆறு வருடங்களாக மத்தியரசு சிறப்பு பணியில் வைத்து பயன்படுத்தி வருகிறது
அதுபோலவே
அதற்கு பொன்மாணிக்கவேலை பயன்படுத்தட்டும் என்பதுதான் தமிழக இந்துக்களின் வேண்டுகோள்
நன்றி இணையம்