காந்தியின் அதிகாரத்தை எதிர்த்து

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:40 | Best Blogger Tips
Image may contain: 1 person, close-up


காந்தியின் அதிகாரத்தை எதிர்த்து காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் வென்றவர்கள் மூன்று பேர்.
1) சுபாஷ் சந்திரபோஸ்
2) காமராஜ் K. நாடார்
3) வல்லபாய் பட்டேல்
இதில் போஸ் அவர்களுக்கும், காமராஜ் அவர்களுக்கும் அவர்தம் மாநிலத்தில் அபரிதமான செல்வாக்கு இருந்தது காங்கிரஸ் கட்சிக்குள்.
வல்லபாய் பட்டேல் விவகாரத்தில் காந்தியும் குஜராத்தி, பட்டேலும் குஜராத்தி. பாம்பின் கால் பாம்பறிந்த கதை. வல்லபாயை காந்தி மீற முடியாது, காந்தியை வல்லபாய் மீற முடியாது.
சுதந்திரம் அடைவதற்கு முன் 1946ல் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்த 15 மாகாணங்களில் 12 பட்டேலுக்கு ஆதரவு. மிச்ச 3ம் முடிவு எதுவும் எடுக்க வில்லை. நேருக்கு ஆதரவாக ஒரு ஓட்டும் இல்லை. ஆக அடுத்த பிரதமர் வல்லபாய் பட்டேல் என்பது உறுதியானது.
நேருவோ தனக்கு பிரதமர் பதவி கிட்டவில்லையெனில் காங்கிரஸை உடைக்க இருந்தார். காந்தி பேச்சை கேட்பதாக இல்லை. முடிவில் காந்தி வெற்றி பெற்ற பட்டேலை விலகச் சொல்லி ஒரு ஓட்டும் பெறாத நேருவை தலைவராக்கினார் தன் வீட்டோ பவரை பயன்படுத்தி. நேரு வெளிநாட்டில் படித்த மார்டன் மனிதர், தேசத்தை அமெரிக்கா போல் வழிநடத்துவார் என தப்புக் கணக்கிட்டார் காந்தி.
இதில் காந்திக்கு உதவியவர்கள் இருவர். 1) தன் சம்பந்தி ராஜாஜி, 2) மவுலானா ஆசாத்.
ராஜாஜி இந்தியாவின் முதல் ஜனாதிபதி ஆகவிடாமல் தடுத்தவர் பட்டேல் என்ற முறையில் ராஜாஜிக்கு கோபம், பழிவாங்கினார் பட்டேலின் பிரதமர் பதவியை.
கடைசி காங்கிரஸ் தலைவராக இருந்த மவுலானா ஆசாத்தோ நேரு தான் தம் இன முஸ்லீம்களைக் காப்பார், பட்டேல் எதிர்ப்பார் என நினைத்திருந்தார்.
ஆனால் ராஜாஜியும், மவுலானா ஆசாத்தும் தம் இறுதிக்கால குறிப்புகளில் பாரத தேசம் இந்த முட்டாள் நேரு கையில் துண்டு துண்டாக நாசமாக தாம் காரணமாக அமைந்து விட்டதாகவும், பட்டேல் காங்கிரஸ் தலைவராக இருந்திருந்தால் அன்றைய தேசப்பிரிவினையை மிகத் திறமையாக தவிர்த்திருப்பார் மற்றும் பிரதமரான பின் எதிரி என முன்னமே கணித்து சீனாவிடம் ஏமாறாமல் போரைத் தவிர்த்திருப்பார் என்றும் தம் தவறுகளுக்காக கண்ணீர் வடித்துள்ளனர்.
அவர்கள் சொன்னது உண்மை தான். சீனாவை நம்ப வேண்டாம், அது நம்மைத் தாக்க இருக்கிறது என 1950ன் இறுதியிலேயே பட்டேல் அன்றைய பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதம் குப்பைத் தொட்டிக்குப் போனது அலட்சிய நேருவால்.
அதற்கு அடுத்த நாளே சீன ஆதரவு சோவியத் கம்யூனிஸ்ட் கயவர்களால் ஸ்லோபாய்ஸன் கொடுக்கப்பட்டு இரண்டே வாரங்களில் மர்மமான முறையில் மரணமடைந்தார் சர்தார் வல்லபாய் பட்டேல். சுபாஷ் சந்திரபோஸ் மரணத்தின் மர்மத்திற்கும், லால்பகதூர் சாஸ்திரி மர்ம மரணத்திற்கும் அன்றைய சோவியத் கம்யூனிஸ்ட் கயவர்களே காரணம். ராஜீவுடன் சோனியாவைக் கோர்த்து விட்டதும் அந்த சோவியத் ரஷ்யா கம்யூனிஸ்ட் கயவர்களே. இந்தியா அழிய வேண்டும், கம்யூனிஸ்ட் சீனா வாழ வேண்டும் என கூட இருந்தே குழிபறித்தது ரஷ்யா.
இன்று அந்த பெருமகனார் பட்டேலின் நினைவு தினம். போற்றுவோம் அப்பெருமகனாரை.
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க, வாழ்க. 🙏
ஜெய் ஹிந்த்.
~ ஜெய்ஜி

நன்றி இணையம்