உலக வரலாற்றை ஊன்ற பார்க்கின்றோம்
எகிப்தின் பண்டைய மதம் ஒழிக்கபட்டது, அதை இனி நினைத்து கூட பார்ப்பார் இலர்
பாபிலோனின் தொன்பெருமையும் அதன் பண்டைய மதமும் அடையாளமும் பெரிது, அதுவும் விழுங்கபட்டாயிற்று, இனி அப்படி ஒன்று இருந்ததே அம்மக்களுக்கு அறியமுடியா அளவு நிலை மோசமாயிற்று
ரோமை சாம்ராஜ்யத்தின் பெருமைகளும் அடையாளங்களும் ரோமில் இருந்தன, கிறிஸ்தவம் அதை விழுங்கிற்று, ரோமை மதத்தின் பெருமைகளும் அடையாளமும் புதைக்கபட்டே கிறிஸ்தவம் தன் கட்டுமானத்தை கட்டி முடியும் சூட்டிற்று இனி அதை எடுப்பார் இலர்
கிரேக்கத்தின் நிலையும் அதுவே
அவர்கள் கடவுளும் மதமும் பண்டைய கலாச்சாரமும் எங்கே? எல்லாம் இனி மீளமுடியாதவாறு ஆழபுதைக்கபட்டாயிற்று
கிழக்காசியாவின் நிலையும் அதுவே, பல விஷயங்களின் மேல் சமாதி கட்டியாயிற்று இனி தோண்டி கூட பார்க்கமுடியாது
ஒரு விஷயமோ மதமோ அடையாளமோ விடைபெற்றால் பெற்றதுதான், அதை மீட்டெடுத்தல் என்பது முடியாத விஷயம்
இந்த பரந்த உலகில் அடையாளத்தை இழப்பது சுலபம்,
இழந்த வலியினை கணலாக பாதுகாத்து, நெஞ்சோடு வளர்த்து பல நூறாண்டுகளாக கடத்தி வந்து போராடி மீட்டெடுத்தல் என்பது கொஞ்சமும் சுலபம் அல்ல
இந்துமதம் அந்த மாபெரும் சாதனையினை ஓசைபடாமல் செய்திருக்கின்றது
ஆனானபட்ட இஸ்ரேலாலும் முடியாததை கொஞ்சமும் அலட்டிகொள்ளாமல் அமைதியாக செய்துவிட்டு யானை போல் அமைதியாய் நிற்கின்றது
பெரும் தர்மமும் அதன் வலிமையும் தாங்கி நின்றாலொழிய இந்த மீட்பு சாத்தியமில்லை
அடையாளத்தை தொலைத்த இனமும் மதமும் இந்துமதத்தை நோக்கி ஏக்க பெருமூச்சுவிடுகின்றன, எங்களை மீட்பது யார் என அவை ஓலமிடுகின்றன
ஆனால் அவற்றுக்கு விடுதலை இல்லை, அடிப்படையுமில்லை
இந்து மதம் ஆன்மாவில் போதித்து இயற்கையும் அறிவிலும் வாழ்வியலும் ஒட்டிவந்த மதம் என்பதால் அந்த ஆதாரம் லட்சோபலட்சம் ஆண்டுகள் இங்கு காலூன்றிய வலு என்பதால் சிலிர்த்துகொண்டு எழும்புகின்றது
தெய்வத்தின் அனுகூலமின்றி இதெல்லாம் சாத்தியமில்லை, இப்படியான வாய்ப்புகள் மொத்தமாய் கூடுவது தெய்வத்தின் அனுகிரகம் அன்றி வேறல்ல
உலகின் மதங்களுக்கெல்லாம் தாய் புதிய பார்வையினை உலகில் பெற்றிருக்கின்றது, ஆயிரம் தத்துவங்களை அது போதிக்கின்றது
நிச்சயம் அது செய்திருப்பது மாபெரும் சாதனை, உலகில் எங்குமே நடக்காத ஒரு விஷயம்..
உலகம் புதிதாய் அதை படிக்க தொடங்கியும் இருக்கின்றது....