அணு ஆயுதங்கள் மறைந்த மண்ணில் மோடி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:32 | Best Blogger Tips


இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதியனுடன் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள விளாடிவோஸ்டோக் நகரில் உள்ள போல்சாய் கேமன் என்கிற இடத்தில் உள்ள மிகப்பெரிய
கப்பல் கட்டும் தளமான ஸ்வெஸ்டா ஷிப்பிங் யார்டுக்கு சென்று அங்கு கட்டப்பட்டு வரும் கப்பல்களை புதினுடன் பார்த்தார்.
Image may contain: 8 people
இரு நாடுகளுக்கு இடையே எக்னாமிக பற்றி
பேசுவதற்கு எதற்கு இந்த அதி பயங்கரமான ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்திற்கு மோடி வர வேண்டும் என்று உலகில் உள்ள மீடியாக்களும் உலகத்தலைவர்களும் தலையை
பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஏனென்றால் இந்த ஸ்வெஸ்டா ஷிப்பிங் யார்டு உலகின் அதி பயங்கரமான இடமாக கடந்த நூற்றாண்டில் சோவியத் யூனியனில் இருந்த இடம்.சோவியத் யூனியனே கடந்த
நூற்றாண்டில் உலகின் அதி பயங்கரமான  நாடாக இருந்த பொழுது ஸ்வெஸ்டா வெல்லாம் ஒரு மேட்டரா என்று நீங்கள் நினைக்கலாம்.
Image may contain: 8 people, people standing and suit
ஆனானப்பட்ட அமெரிக்காவே இந்த ஸ்வெ ஸ்டாவை த்தான் 1945 ல்இருந்து 1995 வரை பயத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.
இந்த ஸ்வெஸ்டா வுக்கு மோடி ஏன் இப்பொழு து வந்தார் காற்று வாங்கவா? இல்லைஅணு ஆயுத கப்பல்வாங்கவா? என்று நிறைய பேர் தலையை பிய்த்துக்கொண்டு  இருக்கிறார்க ள்.
திடீரென்று ரிசர்வ் வங்கியில் இருந்து மத்திய
அரசு வாங்கிய 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி
க்கும் இந்த ஸ்வெஸ்டா ஷிப்பிங் யார்டுக்கும்
இடையே நிச்சயமாக ஒரு தொடர்பு இருக்கி றது அது இந்தியாவில் ஜனாதிபதி மோடி அமித்ஷா நிர்ம லா சீதாராமன் மற்றும் ராஜ்நா த்சிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினு
க்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
ஸ்வெஸ்டா வின் வரலாற்றை பார்க்கும் பொ
ழுது அது கொஞ்சம் டெரராகவே இருக்கிறது ஏனென்றால் இது உலகையே அழிக்க வல்ல பயங்கர மான ஆயுதங்களை புதைத்து வை த்து இருந்த இடம்.பிறகு வெளி உலகிற்கு தை அழித்து விட்டோம் என்று அறிவித்த
இடம்.
அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கு ம் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தி ல் இதோ மோடி நடந்து வருகிறாரே இந்த ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளம் சூரியவெளி ச்சம் கூட எட்டி பார்க்க முடியாதபடிமர்ம பூமி யாகவே இருந்து வந்தது.
சோவியத் யூனியனின் அனுஆயுதங்கள் ங்கு தான் அதிகளவில் குவிக்க ப்பட்டு இங்கு கட்டப்படும் நீர் மூழ்கி கப்பல் களில் வைக்க
ப்பட்டு இருந்தன.பனிப்போர் காலத்தில் அமெ
ரிக்கா சோவியத் யூனியனின் கப்பல் படைக்
கு தான் பயந்தது.இதற்கு காரணம் இந்த ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்தில் கட்ட ப்படும் கப்பல்கள் அனைத்துமே அணு ஆயுத
ங்களை வைத்து இருக்கும் நீர் மூழ்கி கப்பல்
கள் தான்.
சோவியத் யூனியன் சிதைந்த பிறகு உருவா குட்டி குட்டி நாடுகளின் பிடியில் அணு ஆயு தங்கள் சென்று விடக்கூடாது என்று பயந்த அமெரிக்காவின் நேட்டோ நாடுகள் அமெரிக் காவிடம் முறையிட அமெரிக்காவும் சாம் நுன்
மற்றும் ரிச்சர்ட் லூகர் என்கிற அமெரிக்கா
பாராளுமன்றத்தின் செனட் உறுப்பினர்களை அழைத்து சோவியத் ரஷ்யாவின் அணு ஆயுத
ங்களை அழிக்க வழி கேட்டது.
அவர்கள் உருவாக்கி கொடுத்த ஒரு திட்டத்தி ன் மூலமாக லூகர் கோ ஆப்ரெட்டிவ் திரெட் ரிடக்சன் (Nunn–Lugar Cooperative Threat Reduction)என்கிற ஒரு அமைப்பை அமெரி க்கா உருவாக்கியது.இந்த அமைப்பில் கனடா நாடும் இணைந்து கொண்டது.
சுமார் 50 ஆண்டுகளாக சித்தாந்த ரீதியாக
ஒன்றை ஒன்று அழிக்க போட்டி போட்டுக் கொ ண்டு இருந்த சோவியத் யூனியனும் அமெரி க்காவும் அவ்வப்போது உலகம் அமைதி பெறட்டும் என்று தத்துவம் பேசி பயங்கரமான
ஆயுதங்களை அழிப்பது பற்றி ஆலோசனை
நடத்துவார்கள்.
இப்படி அமெரிக்காவும் சோவியத் யூனியனும்
உலகம் மெச்ச நடத்திய பேச்சுவார்த்தைகளை
தான் சால்ட் ( Strategic Arms Limitation Talks )
என்று அழைப்பார்கள்.இதன் படி இரு நாடுக
ளும் அவ்வப்போது பயங்கரமான ஆயுதங்க ளை குறைத்துக்கொண்டது மாதிரி நடித்துக்
கொண்டு இருந்தார்கள்.
இந்த சால்ட்டை முன் வைத்து தான் சாம் நான்
மற்றும் ரிச்சர்ட் லூகர் இருவரும் சோவியத்
யூனியனில் அங்கமாக இருந்த ரஷ்யா உக்ரை ன், ஜார்ஜியா,அசெர்பைஜான், பெலாரஸ் ஸ்பெஸ்கிஸ்தான் கஜகஸ்தான் போன்ற நா டுகளில் இருந்த பயங்கரமான ஆயுதங்களா அணு ஆயுதங்கள் உயிரியல் ஆயுதங்கள்
இரசாயன ஆயுதங்கள் அனைத்தையும் கொ ண்டு வந்து ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்தி ல் வைத்து தான் செயல் இழக்க வைத்தார்க ள்.
1994 ல் தொடங்கிய இந்த ஆயுத அழிப்பு ப்ரா
ஜெக்ட் தொடர்ந்து ஆறு வருடங்களாக 2000 வரை இந்தஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்தி ல் ஆயுதம் அழிப்பு மட்டுமே நடைபெற்று வந்த
து.இதற்காக அமெரிக்கா ரஷ்யா வுக்கு அளி த்த தொகை எவ்வளவு தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் டாலர்
அதாவது சுமார் 2800 கோடி ரூபாய் அளித்து
இந்த ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்தில் வைத்து பயங்கரமான ஆயுதங்களை அமெரி க்காவும் கனடாவும் சேர்ந்து கொடுத்த பணத் தில் அழித்து வந்தார்கள். அது முற்றிலும் அழிக்கப்பட்டதா இல்லை மறைக்கப்பட்டதா
என்பது கூட இன்று வரை விடை தெரியாத
கேள்வி தான்.
இப்படி உலகப் புகழ்பெற்ற ஸ்வெஸ்டா கப்பல்
கட்டும் தளம் அனைத்தையும் ஓரம் கட்டி வை த்து விட்டு இப்பொழுது மறுபடியும் பெரிய
பெரிய கப்பல்களையும் நீர்மூழ்கி கப்பல்க ளையும் உருவாக்கி வருகிறார்கள்.இதில் ணு ஆயுதங்கள் இருக்கிறதா இது இந்தியாவு க்காகவா என்பது கூட அந்தஆண்டவனுக்கும் ரஷ்யாவை ஆண்டு வரும் விளாடிமிர் புதினு க்கும் இந்தியாவை ஆண்டு வரும்மோடிக்கு
ம் மட்டுமே தெரிந்த ரகசியம்.


நன்றி இணையம்