இறப்பும்-மறு-பிறப்பும்-எப்படி-நிகழ்கிறது-இந்து-மதம்-ஒரு-பார்வை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:43 | Best Blogger Tips
Image result for இறப்பும்-மறு-பிறப்பும்-எப்படி-நிகழ்கிறது-இந்து


இறப்பும்-மறு-பிறப்பும்-எப்படி-நிகழ்கிறது-இந்து-மதம்-ஒரு-பார்வை
★★★★★★★★★★★★★★★

முதலில் இறப்பு என்றால் என்ன என்பதை காண்போம்.

இறப்பு என்பது பழுதடைந்த உடல் செயல் இழப்பதையே இறப்பு அல்லது மரணம் என்று கூறுகிறார்கள்.

நாம் எப்படி சட்டை கிழிந்து விட்டால் அந்த சட்டையை தூக்கி எரிந்து விட்டு புது சட்டை போட்டு கொள்கிறோமோ அதே போல் ஆன்மா உம் புது உடலை எடுக்கும்.

புது உடலை எடுக்கும் நிகழ்சியை மறு பிறப்பு என்று கூறுகிறார்கள்.

ஆனால் இந்த மறு பிறப்பு என்பது உடனே நிகழ்ந்து விடாது.

ஒரு உடலை ஆன்மா விட்ட வுடன் அந்த ஆன்மா அந்த உடலுடன் இருந்த போது என்னென்ன கர்மங்கள் செய்ததோ அதற்க்கு தகுந்தாற்போல் அது பாவ புண்ணியத்தை சுமந்து கொண்டு இருக்கும். மேலும் கர்ம வாசனைகளும் சுமந்து இருக்கும். கர்ம வாசனை என்றால் நல்ல எண்ணம் இருந்தால் அதுவும் ஆன்மா வுடன் சேர்ந்து செல்லும். கெட்ட எண்ணம் இருந்தால் அதுவும் ஆன்மா வுடன் சேர்ந்து செல்லும்.

இப்படி ஓர் உடலை விட்டவுடன் ஆன்மா அந்த உடலின் பாவ புண்ணியம் மற்றும் கர்ம வாசனை இவற்றை சுமந்து செல்லும்.

கருட புராண சாஸ்த்ர படி இந்த ஆன்மா யம தூதர்களால் எடுத்து செல்லப்பட்டு செய்த பாவத்திற்கு உண்டான தண்டனைகளை அனுபவிக்க விடுவார்கள்.

புண்ணிய காரியங்கள் செய்து இருந்தால் அதற்க்கு உண்டான சுப பலனையும் அந்த ஆன்மா அனுபவிக்கும்.

பாவ புண்ணியங்கள் தீர்ந்த பிறகு அந்த ஆன்மா மீண்டும் மேகங்களில் தூக்கி எறியப்படும்.
மேகங்களின் மழையால் அந்த ஆன்மா பூமியை வந்து அடையும்.

பூமியில் விழுந்த வுடன் அந்த ஆன்மா தண்ணீரோடு தண்ணீராக இருந்து தானியங்களை வளர செய்யும்.
அந்த தானியம் உயிரினத்தின் உடலில் உணவாக செல்லும்.

உடலின் உள்ளே உணவாக சென்ற அந்த ஆன்மா உயிர் அணுவாக மாறும்.

அந்த ஆணின் உயிர் அணு கலவியின் போது பெண்ணின் உடலில் செலுத்த படும் போது அந்த ஆன்மா ஒரு உடலை பெரும்.

அந்த உடல் அந்த பெண்ணின் வயிற்றில் வளரும்.
பிறகு வெளியே வரும்.

மீதி உள்ள கர்மத்தை வெளியே வந்த வுடன் செய்யும்.


குறிப்பு : ஒரு மனிதன் இறந்த உடன் , அந்த ஆன்மா
எடுத்து செல்லப்பட்டு
பாவ புண்ணியத்திற்கு உண்டான தீய சுப பலனை அனுபவித்த பிறகு கூட ஏன் அவன் மீண்டும் பிறக்க வேண்டும்.

ஏனெனில் அவன் இன்னும் உண்மையை உணரவில்லை. தான் ஆன்மா என்று உணர வில்லை . மேலும் மேலும் பொன் பொருள் போகம் இவற்றில் விருப்பம் கொண்டு இந்த உலகத்தில் கட்டபடுகிறான்.

இறைவனே கதி என்று இறைவனையே நோக்கி செல்பவர்கள் விரைவில் இறைவனை அடைவார்கள். மீண்டும் பிறக்க மாட்டார்கள்.


நன்றி இணையம்