பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:03 | Best Blogger Tips
Image result for பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும்

முதலில் நிதானமாக படியுங்கள்!
குழந்தைபருவ பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும் இல்லை. இதன் காரணம் என்ன?
யோக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து
கீழ் நோக்கி செயல்படக் கூடாது.
பிறப்புறுப்பு பகுதியான "மூலாதாரத்தில்"செயல்கள் இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது
உடலில் கீழ் நோக்கி பயணிக்கும்.
இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள் பிறருக்கும் பரவும்.இதை தவிர்த்து தலைப்பகுதியான "துரியனில்" செயல்கள் (தலையின் உச்சியில் இருமுடி பை வைப்பதன்
காரணம் இது தான் )இருந்தால் ப்ராணன் மேல் நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்..
கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின்
கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் உறுப்பு.
அப்படி கருப்பை செயல்படும் சமயம்
அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால், (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையைவெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும்.
கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா?
கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது?
Image result for பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும்
இதனாலேயே நம் கோவில்களில் கூட சில இடங்களில் இளம் பெண்கள் அனுமதிப்பதில்லை.
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், கருப்பை
செயல்படும் நிலையில் அல்ல என்பதை புரிந்துகொண்டீர்களா?
சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த
பகுதி. முழுமையான "ப்ராணன்" கொண்ட பகுதி. அதனால் தான் அந்த படிகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. வேறு எந்த
கோவிலிலும் படிக்கட்டுகள், கட்டிடங்களுக்கு வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள்.இருமுடி கட்டி தலையில் அழுத்தம் கொடுத்தவண்ணம் தலையில் "ப்ராணன்"செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை
Image result for பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும்
அணுகினால் முழுமையான சக்திமாற்றம் ஏற்படும். .இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை
தரிசனம் செய்யலாம். ஆனால்
இருமுடிகட்டாமல்பதினெட்டாம் படியை தொட அனுமதியில்லை.
ஐயப்பனைவிட அந்த படிகள்
அவ்வளவு உயர்ந்தவை..இவ்வாறு
சபரிமலையில் பின்பற்றும் அனேக
விஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு.
இது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு எதிரானது என சில ஆட்கள் அறியாமையை
வளர்க்கிறார்கள்.
கேரளத்தில் "மன்னார்சாலை"
என்ற பாம்பு கோவில் உண்டு. இங்கே பெண் தான் பூஜை செய்ய முடியும். மேலும் ஆண்களுக்கு அனைத்து பகுதியிலும் அனுமதி இல்லை. காரணம் அக்கோவில் "அபாணா" என்ற ப்ராணனுக்கானது.அதனால் பெண்களே தாய்மை என்ற உருவாக்கும் திறன் கொண்டவர்கள்
என்பதால் இக்கோவிலின் உரிமை அவர்களிடமே உள்ளது.
இப்படியாக ஒவ்வொரு கோவிலின்
சக்திக்கு ஏற்பவே நடைமுறைகளும்
ஏற்படுத்தப்படுகிறது.
இதை விடுத்து எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என உளருவது முட்டாள்தனம்.நன்றி