பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:36 PM | Best Blogger Tips
Image result for பெண்கள் அணியும் ஆபரணமும்
கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.


Image result for பெண்கள் அணியும் ஆபரணமும்

1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
Image result for பெண்கள் அணியும் ஆபரணமும்

2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !

Image result for பெண்கள் அணியும் ஆபரணமும்
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.

Related image
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,

Image result for ஒட்டியாணம்
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!

Image result for மோதிரம்
6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. 

இவ்வாறு அணிவதன் சிறப்பு..

Related image
#கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

Image result for பெண்கள் அணியும் ஆபரணமும்
#மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

Image result for மோதிரம்
#மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.
Image result for மூக்குத்தி
#மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது

Image result for மூக்குத்தி
#மூக்குத்தி. சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.
Image result for காதணி

#காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.
*என்றும் அன்புடன்,*


நன்றி  இணையம்