அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:02 | Best Blogger Tips
Image result for அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்Image result for அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
💖
**உண்மை வரலாறு**
ராணி கர்ணாவதி அன்று சித்தூரை ஆண்ட ராணா சங்காவின் மனைவி. அவர் திடீர் என்று நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார். அப்பொழுது ராணி கர்ணாவதிக்கு 12 வயது மகன் இருக்கிறான்.
அந்த சூழலில்.
இந்தியாவில் முகல் சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் மகன் ஹிமாயூன் சித்தூர் மீது படை எடுத்து வருகிறார்.
அன்றைய கித்தூர் சாம்ராஜ்யம் அவ்ளவு வலிமையாக இல்லை.

வெறும் 60 ஆயிரம் வீரர்கள்.
அதுவும் முறையான போர்ப்பயிற்சி பெறாத உடல் பலவீனமான வீரர்கள். சித்தூர் படையில் உள்ள 60 ஆயிரம் வீரர்களை கொல்ல ஹிமாயூன் படையில் இருக்கும் ஒரு 3 ஆயிரம் வீரர்களே. போதுமானவர்க்ள. அந்த சூழலில்.
ஹிமாயூன் 3 லக்ஷம் வீரர்களோடு சித்தூர் மீது படை எடுத்து வந்தார்.

காவலன் இல்லாத தோட்டம் போல் சித்தூர் இருக்க.
உடல் அளவிலும், மனதளவிலும் பலவீனமாய் இருக்கும் அந்த பெண்ணின் மனம் அப்பொழுது எவ்வளவு? பதைபதைத்து இருக்கும்.

ஹிமாயூன் படையோடு நம் படை மோதுவது என்பது சிங்க கூட்டத்தோடு முயல் கூட்டம் மோதுவதற்கு சமம். அவ்வாறு நம் படை ஹிமாயூனோடு மோதினால். நம் நாட்டில் 60 ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆவார்கள்.

60 ஆயிரம் படை வீரர்கள் மட்டும் அல்லாது. மேலும் பல கோரமான அழிவுகளை இந்த நாடும், நாட்டு மக்களும் ஹிமாயூன் படை மூலம் சந்திக்கலாம்.

இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் எவ்வாறு? காப்பது என்று அவள் யோசித்தாள்.

எத்தகைய கொடியவனின் மனதையும் மாற்றவல்ல ஆயுதம் அன்பு. அன்பு என்னும் ஆயுதத்தை கையில் எடுப்பது என்று ராணி கர்ணாவதி முடிவு செய்தாள்.

ஒரு பட்டுக்கயிற்றை எடுத்தாள். திரித்து ராக்கியாக்கினாள். பல ஆண்டுகளாக அரண்மனையில் வேலை பார்க்கும் விசுவாசமான ஒரு வேலைக்காரனை ராணி அழைக்க அவன் ஓடோடி வந்தான்.

நான் சொல்வதை ஹிமாயூனிடம் அப்படியே நீ ஒரு வார்த்தை கூட மாறாது சொல்ல வேண்டும்.
நீ இன்று பேசுவதில் தான் நம் படையில் உள்ள 60 ஆயிரம் வீரர்களின் உயிர் அடங்கி இருக்கிறது. உன் உயிர் உட்பட என்று சொல்ல. அந்த வேலைக்காரன்.
நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன். உத்தரவிடுங்கள் மகாராணி என்று அவன் பணிவோடு சொல்ல.

அவன் கையில் ராக்கியைக் கொடுத்து
" ஆலம்பனாஹ் இதை உங்கள் சகோதரி கர்ணாபாய் உங்களுக்கு அனுப்பினார். இதை ஏற்றுக்கொண்டால், இந்தப் பழக்கூடையையும் உங்களுக்காகக் கொடுத்தனுப்பினார். ஏற்றுக்கொள்ளாவிட்டால் இன்று ஓர் இரவு பொறுத்துக்கொள்ளவும். அவர் தீக்குளித்து விடுவார் சித்தூர் நாளை உங்களுடையது. உங்களுக்குத் தேவை ஒரு தங்கையா இல்லை சித்தூரா என்பதை முடிவு செய்யுங்கள்"

ராணி கர்ணாபாய் சொன்னதை அப்படியே அந்த வேலைக்காரன் கிளிப்பிள்ளை போல் ஹிமாயூனிடம் ஒப்பிக்க.
ஹுமாயூன் பட்டுக்கயிற்றை ஏற்றுக்கொண்டு தன் பங்குக்கு தங்கைக்குச் சீரும் அனுப்பினார் அத்தோடு "டெல்லியில் கர்ணாபாயின் அண்ணன் வீடு அவளுக்காக எப்போதும் திறந்திருக்கும்.

எனக்குக் கர்ணாபாய் போன்ற சகோதரியை விட சித்தூரின் ராஜ்ஜியம் பெரிதல்ல நான் உயிருடன் இருக்கும் வரை சித்தூருக்குப் படை அனுப்பமாட்டேன்" என்ற செய்தியையும் அனுப்பினார்.

60 ஆயிரம் பட்டாக்கத்திகள் சாதிக்க முடியாததை ஒரு பட்டுக்கயிறு சாதித்தது. முகலாய பேரரசனின் நெஞ்சை வென்று அவரின் மனதில் உள்ள மனிதத்தன்மையை வெளிப்படுத்தியது.

இந்த பதிவின் மூலம் நான் 2 விஷயங்களை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

1] அன்பை விட சிறந்த கடவுளும் இல்லை
அறிவை விட சிறந்த தெய்வமும் இல்லை.
2] நாம் ஜாதி, மத பேதங்களை கடந்து ஒன்று பட்டு உழைத்தால் தான் வலிமையான பாரதம் உருவாகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
**அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும்**
💖💖💖💖💖💖


நன்றி....இணையம்